உலக சாம்பியனான முதல் இந்தியப் பெண்!

சீனாவின் குவாங்க்சோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, இந்தியாவின் முதல் பெண் உலக சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 13 மாதங்களாக சிந்துவின் கைகளுக்குக் கிடைக்காத இறுதிப்போட்டி வெற்றி இம்முறை கிட்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டின் உலக சாம்பியனான நோசோமி ஓகுஹராவுடன் இந்த இறுதிப்போட்டியில் மோதிய சிந்து, 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வென்றார். சிந்துவுக்குக் கிடைத்திருக்கும் 14-வது பட்டம் இது. கடந்த ஆண்டு ஜப்பான் வீராங்கனை யமகுச்சியிடம் தோற்றது முதலே, சிந்துவின் ஆட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிக்கட்ட முயன்று வந்தார் பயிற்சியாளர் கோபிசந்த்.

2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இன்னும் ஆர்வத்துடன் எதிர்கொள்ள சிந்துவுக்கு இந்த வெற்றி வழிகாட்டும்.

`` `இறுதிப்போட்டிகளில் மட்டும் ஏன் எப்போதும் தோற்கிறீர்கள்?’ என்ற கேள்வியை இனிமேல் என்னிடம் யாரும் கேட்க மாட்டார்கள். தைரியமாக `நான் தங்கம் வென்றிருக்கிறேன்' என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று கூறினார்.

இனி எந்தக் கேள்வியும் இல்லை!

உச்சத்தில் பெண்கள்!

உலகப்புகழ் பெற்ற ஜிக்யூ பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட செல்வாக்குமிக்க டாப் 50 இந்தியர் பட்டியலில் நடிகைகளும் சிறுவயதிலேயே தொழில்துறையில் சாதித்த பெண்களும் நிறைந்திருக்கிறார்கள். பிரபல திரைப்பட நடிகைகளான நயன்தாரா, டாப்சி பன்னு, பார்வதி, ஆலியா பட் மற்றும் இயக்குநர் ரீமா தாஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டி களில் டேபிள் டென்னிஸ் தங்கம் வென்ற மணிகா பத்ரா ஒரே பெண் விளையாட்டு வீராங்கனையாக இடம்பிடித்திருக்கிறார். சுவதந்த்ரா மைக்ரோ ஃபைனான்ஸ் குழுமத்தின் அனன்யா பிர்லா, பாப் இசைப்பாடகி மிதிலா பல்கர், ஃபுட் ஹால் குழுமத்தின் இயக்குநர் அவ்னி பியானி, நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் சிம்ரன் சேத்தி, க்ளோவ் மற்றும் டான்டெலியான் நிறுவனங்களின் தலைவர் சம்யுக்தா நாயர், `யுவர் ஸ்டோரி'யின் ஷ்ரத்தா ஷர்மா என்று திறமைவாய்ந்த பெண்கள் செல்வாக்குமிக்க 50 டீமில் உள்ளனர்.

பத்திரிகைத் துறையின் சந்தியா மேனன் இதில் வித்தியாசமாகப் பரிமளிக்கிறார். இந்தியா முழுக்க இரண்டாவது ‘மீ டூ’ அலை எழுந்தபோது எழுத்து மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளானதை வெளிப்படுத்தி, பெண்களிடத்தில் தன்னம்பிக்கையையும் மன வலிமையும் விதைத்தார் என்று கூறியிருக்கிறது ஜிக்யூ.

`டோரா', `அறம்' என்று தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டுள்ள நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பெயரெடுத்தது மட்டுமல்லாமல், அவருக்கென பிரத்யேகமாக கதைகளைத் திரைக்கதாசிரியர்கள் உருவாக்கும் அளவுக்குச் செல்வாக்கு நிறைந்தவர் என்று கூறியுள்ளது ஜிக்யூ.

இந்த சாதனைப் பெண்கள் அனைவரும் 40 வயதைத் தாண்டாதவர்கள் என்பது இதில் கூடுதல் சிறப்பு!

ஆசம் டாப் கேர்ள்ஸ்!

அசாமின் முதல் `படா மேடம்'!

அசாமின் ஏபீஜே தேயிலை நிறுவனம் சமீபத்தில் அதன் ஹிலிகா தேயிலைத் தோட்டத்தின் மேலாளராக 43 வயதான மஞ்சு பருவா என்ற பெண்ணை நியமித்திருக்கிறது. 633 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தத் தோட்டத்தில் தன் பைக்கிலும் மாருதி காரிலும் அநாயாசமாக வலம்வருகிறார் மஞ்சு. தினமும் காலை 6 மணி முதல் மாலை 3.30 மணி வரை தோட்டம் முழுவதும் அலைந்து திரிந்து மேற்பார்வையிடுகிறார். 2,500 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்தத் தோட்டத்தில் `படா மேடம்' (பெரிய மேடம்) என்றே அழைக்கப்படுகிறார் மஞ்சு. `படா சாஹிப்' என்று தேயிலைத் தோட்ட மேலாளர்கள் அழைக்கப்படுவது வாடிக்கை. அசாமின் முதல் `படா மேடம்' மஞ்சுதான்!

டெலிகாம் துறையில் பணியாற்றும் பருவாவின் கணவரும் 11 வயது பெண் குழந்தையும் இவருடன் ஹிலிகாவில் வசிக்கின்றனர். “ஆண்கள் நிறைந்த இந்தத் துறையில் பெண்ணாக உள்ளே நுழைந்திருப்பது விரும்பத்தக்க மாற்றம்தான். என் திறமையும், தொழிலாளர்களுடன் எளிதில் அடையாளப்படுத்திக்கொள்ளும் பாங்கும், கடும் உழைப்புமே இந்த இடத்துக்கு என்னைக் கொண்டுவந்திருக்கிறது” என்று சொல்லும் மஞ்சு, 18 ஆண்டுகளுக்கு முன்பு ஊழியர் நல பயிற்சி அலுவலராக ஏபீஜே நிறுவனத்தில் நுழைந்தவர். “மேலாளராக ஒருவர் தைரியமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். மனதளவிலும் உடலளவிலும் ஃபிட்டாக இருப்பதும் அவசியம்” என்கிறார் மஞ்சு.

`அட' போட வைக்கும் ‘படா மேடம்’!

`ஸ்கை டைவிங்'கில் கலக்கும் 102 வயது பாட்டி!

ஆஸ்திரேலியாவின் ஏதல்ஸ்டோன் பகுதியைச் சேர்ந்த 102 வயது பாட்டி ஐரீன் ஓஷியா. அவர் சமீபத்தில் தன் 102-வது பிறந்தநாளன்று விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். `உலகின் மிகவும் வயது முதிர்ந்த ஸ்கை டைவர்' என்ற பெருமையை இதன் மூலம் பெறுகிறார் ஐரீன். தன் 100-வது பிறந்தநாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் விமானத்திலிருந்து குதித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் மோட்டார் நியூரான் நோயால் இறந்துபோன தன் மகளின் நினைவாக அந்நோய் குறித்த விழிப்பு உணர்வையும், அதற்காக நிதியும் திரட்டவே இந்த ஆண்டு தான் டைவிங் செய்ததாகக் கூறியுள்ளார் ஐரீன்.

தன் 24 வயது தோழியும், மருத்துவருமான ஜெட் ஸ்மித்துடன் 14,000 அடி உயரத்தில் உள்ள லாங் ஹார்ன் கிரீக் ட்ராப் சோனில் இருந்து குதித்தார் ஐரீன். மணிக்கு 136 மைல்கள் வேகத்தில் குதித்த இந்த ஜோடி கீழிருந்த அலெக்சாண்ட்ரினா ஏரியை ரசித்தபடி பாராசூட்டில் தரையிறங்கியது. ஐரீனின் மகள்கள், பேரன் பேத்திகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். அவர் சாகசப் பிரியரா என்ற பத்திரிகை நிருபரின் கேள்விக்கு, “நான் எல்லோரையும் போல ஒரு சாதாரணமான பெண்தான்'’ என்று கூறியிருக்கிறார் ஐரீன்.

விண்ணைத் தாண்டி வந்தவரே!

சுகாதாரம் காக்கும் ராணி மேஸ்திரிகள்!

நவம்பர் 15 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் தன்னை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவித்தது. கடந்த ஓராண்டில் மட்டும் 15 லட்சம் கழிவறைகளைக் கட்டித் தந்திருக்கிறார்கள் `ராணி மேஸ்திரிகள்' என்று அழைக்கப்படும் 55,000 பெண்கள்! சுவச் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்தக் கழிவறை கட்டும் பணியில், மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

“எங்களுக்குப் பத்து நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. கட்டுமானப் பணி புதியது என்றாலும், பிளம்ப் லைன் பயன்படுத்த, கழிவறை இருக்கையைப் பொருத்த என்று கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டோம்” என்று சொல்கிறார் சீமா தேவி. இவரும் இவர் சார்ந்த 10 பெண்கள் கொண்ட குழுவும், துபாலியா பகுதியில் 230 கழிவறைகளை நிர்மாணித்திருக்கிறார்கள்.

“செங்கல் வாங்க, கட்டுமானப் பொருள்களில் தரம் கண்டறிய என்று எல்லாவற்றுக்கும் பெண்களே பயணித்தோம். ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், அதுவே பின்னர் எங்களுக்கு விடுதலை உணர்வையும் மகிழ்வையும் தந்தது” என்கிறார் ரீனா தேவி.

இந்தப் பெண்களும் ஒரு நாளைக்கு 400 ரூபாய் வீதம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குடும்பங்களில் உள்ளவர்களுக்கு இவர்கள் உழைப்பு புரிய ஆரம்பித்தது. இப்போது வேலை முற்றும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து என்ன என்று காத்திருக்கிறார்கள் ராணி மேஸ்திரிகள்.

“4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள குழாய் நீர் திட்டத்துக்கு இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ராணி மேஸ்திரிகளில் சிலரது உதவியுடன் திட்டத்தைச் செயல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இருக்கிறது” என்று கூறுகிறார் ஜார்க்கண்ட் மாநில நீர் மற்றும் சுகாதாரத்துறை செயலரான ஆராதனா பட்நாயக்.

சபாஷ், சாதனை ராணிகளே!

- நிவேதிதா லூயிஸ்