Published:Updated:

பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்ன பெண்ணுக்கு ஒரு கடிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்ன பெண்ணுக்கு ஒரு கடிதம்!
பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்ன பெண்ணுக்கு ஒரு கடிதம்!

`தனிநபரின் மரியாதை அன்பிலும் சுய அறிவிலும் கட்டமைக்கப்படவில்லை. அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணின் அடிமடியில்தான் இருக்கிறது' என்று சொல்லி குடும்ப அமைப்புகளும் கல்வி அமைப்புகளும் அவை பின்பற்றும் மதங்கள்  சார்ந்த விதிமுறைகளும் மனிதர்களின் மூளையைப் பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருக்கும் வரை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை அதன் பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடுவேன் "

 - அம்பேத்கர்

முகநூலில் எந்த வீடியோ பதிவு செய்தாலும் வைரலாகும் காலம் இது. இருந்தும் அந்த ஒரு குறிப்பிட்ட வீடியோவை மட்டும் மற்ற எந்த வைரல் வீடியோக்களைப் போலக் கடந்துவிட முடியவில்லை.

டெல்லி குர்காவ்ன் பகுதியின் ஒரு பிரபல மாலில் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. `அந்த மாலுக்கு வந்த இளம்பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்ததற்காக அவர்கள், சுற்றி இருந்த ஆண்களால் `ரேப்' செய்யப்பட வேண்டும் என்று பேசுகிறார் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவர் அப்படிப் பேசியதற்காகச் சுற்றி நிற்கும் பெண்கள் மன்னிப்புக் கேட்கச் சொல்கின்றனர். ஆனால், வீடியோ காமெராவை திரும்பிப் பார்க்கும் அந்தப் பெண், "பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளைச் சரியாக வளர்த்திருக்க வேண்டும்" என்று கூறுகிறார். 

இந்த வீடியோ `எந்தச்சூழலில் பதிவு செய்யப்பட்டது?' என்கிற முழுவிவரம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், எந்தச்சூழலாக இருந்தாலும் பெண்களின் மானமும் மரியாதையும் அவர்களுடைய `கற்பில்'தான் இருக்கிறது என்றும், `ரேப்', `கற்பழிப்பு' போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்; அது உடல் மீது திணிக்கப்படும் வன்கொடுமை என்பதால் 'பாலியல் வன்கொடுமை' என்றே சொல்லுங்கள் என்றும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டிலும், நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் மால் போன்ற பெருவணிக கார்ப்பரேட் சூழலில் ஒரு பெண், சக பெண்களை அடக்குவதற்கு அவர்களை 'ரேப்' செய்வதுதான் வழி என்று கூறும்போது, இந்தச் சமூகம் மக்களின் சிந்தனையைக் குறிப்பாகப் பெண்களின் சிந்தனையை எப்படி மட்டுப்படுத்தியும் மட்டப்படுத்தியும் இருக்கிறது என்கிற விமர்சனத்தை எழுப்ப வேண்டியிருக்கிறது.

கணவன் விட்டுச் சென்றுவிட்டதால், மனநிலை பாதிக்கப்பட்டுத் தனியாகப் பேசியபடியே எங்கள் ஊர் தெருக்களில் ஒரு மூதாட்டி நடமாடிவந்தார். நெற்றி நிறைந்த வட்டப் போட்டு, மஞ்சள் பூசிய முகம், முகத்தைத் தவிர உடலின் எந்தப் பகுதியும் தெரியாத வகையில் இழுத்துப் போர்த்திய ஆடை என இந்தச் சமூகம் பெண்ணின் கவுரவமாகப் பல தலைமுறைகளாகக் கருதும் அத்தனை லட்சணங்களும் பொருந்தியவர். அவர் வாய் திறந்து பேசத் தொடங்கினால் ஒழிய அவர் மனநிலை சரியில்லாதவர் என்று யாருக்கும் தெரியாது. பின்பு ஒருநாள் அதிகாலை ஒரு டீக்கடை வாசலில் உடலின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, தரைமுழுவதும் ரத்தம் பரவிக் கிடக்கப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் 60 வயது மதிக்கத்தக்க அந்தக் கிழவி. உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்றவர் என்பதால் போலீஸில் எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை. ஆதவரற்றவர் இறுதி ஊர்வல வண்டி வந்து அவரது உடலை எடுத்துச் சென்றது. 

பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்ன பெண்ணுக்கு ஒரு கடிதம்!


 

'ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்வதற்கான காரணம், பெண்கள் உடையில் நிச்சயம் இல்லை' என்பதை அந்த மூதாட்டியின் மரணம் தொடங்கி  எத்தனையோ சிறுபிள்ளைகளின் மரணங்கள்வரை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. `தனிநபரின் மரியாதை என்பது, அவர்களின் அன்பிலும் சுய அறிவிலும் கட்டமைக்கப்படவில்லை. அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணின் அடிமடியில்தான் இருக்கிறது' என்று சொல்லி, குடும்ப அமைப்புகளும் கல்வி அமைப்புகளும் அவை பின்பற்றும் மதங்கள் சார்ந்த விதிமுறைகளும் மனிதர்களின் மூளையைப் பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருக்கும் வரை... உங்கள் பாணியிலேயே சொல்லப்போனால், `மனிதர்களின் மூளைகளைக் கற்பழித்துக் கொண்டிருக்கும் வரை'; பெண்கள் அறிவார்ந்த விழிப்புணர்வு கொள்ளாதவரை, தங்கமங்கை கோமதி மாரிமுத்துவாக இருந்தாலும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சங்கீதா போன்ற இருளர் பழங்குடியின் முதல் தலைமுறை வெளிச்சங்களாக இருந்தாலும் அனைத்துச் சாதனைகளுக்கும் அடுத்தகட்டமாகப் `பெண்' என்கிற விலாசமான பார்வையில் பார்க்கப்படாமல் 'வெறும் பெண்' என்கிற குறுகிய பார்வையில் மட்டுமே அணுகப்படுவார்கள் என்பதே நிதர்சனம்.

பாலியல் வன்கொடுமைச் சிந்தனையில் மட்டும் பாலின பேதமற்று செயல்படும் சமூகம் என்றேனும் ஒருநாள் சென்ஸிபிளாகச் சிந்திக்கும் என்கிற நம்பிக்கையுடன், 

ஒரு பெண்.   

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு