Published:Updated:

``எனக்கு அந்த வலி தெரியும்!" - 17 குழந்தைத் தொழிலாளர்களை பள்ளிக்கு அழைத்து வந்த 11-ம் வகுப்பு மாணவி

17 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பிரியதர்ஷினி

``சின்ன புள்ளையா இருக்கும்போது எங்க அம்மா மகளிர் குழுவுல கடன் வாங்குனாங்க. குடும்பத்துல இருந்த வறுமையால எங்களால அந்தப் பணத்துக்கு வட்டிகூட கட்ட முடியல. எங்க அம்மாவும் அப்பாவும் அந்தக் கடனை அடைக்க வெளியூர்ல வேலைக்குப் போயிட்டாங்க. நானும் என் தம்பியும் மட்டும்தான் ஊர்ல இருந்தோம்."

``எனக்கு அந்த வலி தெரியும்!" - 17 குழந்தைத் தொழிலாளர்களை பள்ளிக்கு அழைத்து வந்த 11-ம் வகுப்பு மாணவி

``சின்ன புள்ளையா இருக்கும்போது எங்க அம்மா மகளிர் குழுவுல கடன் வாங்குனாங்க. குடும்பத்துல இருந்த வறுமையால எங்களால அந்தப் பணத்துக்கு வட்டிகூட கட்ட முடியல. எங்க அம்மாவும் அப்பாவும் அந்தக் கடனை அடைக்க வெளியூர்ல வேலைக்குப் போயிட்டாங்க. நானும் என் தம்பியும் மட்டும்தான் ஊர்ல இருந்தோம்."

Published:Updated:
17 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பிரியதர்ஷினி

``நான் 12 வயசுல குழந்தைத் தொழிலாளரா இருந்தப்போ எப்படிப்பட்ட வலியையும் வேதனையும் அனுபவச்சேனோ அந்த வலியை இப்போ எந்தக் குழந்தையும் அனுபவிக்கக் கூடாதுன்னுதான் போராடிக்கிட்டு இருக்கேன்" - உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் 16 வயதே ஆன பள்ளிச் சிறுமி பிரியதர்ஷினி. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி செய்துள்ள காரியம் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

திருவாரூர் ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற பிரியதர்ஷினி
திருவாரூர் ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற பிரியதர்ஷினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் ஊரில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டுக் கூலி வேலைக்குச் சென்ற மாணவர்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 17 மாணவர்களை மீண்டும் பள்ளிக்குச் செல்ல வைத்திருக்கிறார் இந்த `கிராமத்து மலாலா'. அந்தப் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறார். இவரது இந்த முயற்சியைப் பார்த்து மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கின்றனர். மாணவியைச் சந்திக்க அவர் பள்ளிக்கே சென்றோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஏழாவது படிக்கும்போது குழந்தைத் தொழிலாளரா இருந்தேன். எங்கப்பா பெயின்ட் அடிக்கிற வேலை பாக்குறாரு. எங்க அம்மா பூண்டு கம்பெனியில வேலை பார்த்தாங்க. நான் சின்ன புள்ளையா இருக்கும்போது எங்க அம்மா மகளிர் குழுவுல கடன் வாங்குனாங்க. குடும்பத்துல இருந்த வறுமையால எங்களால அந்தப் பணத்துக்கு வட்டிகூட கட்ட முடியல. எங்க அம்மாவும் அப்பாவும் அந்தக் கடனை அடைக்க வெளியூர்ல வேலைக்குப் போயிட்டாங்க. நானும் என் தம்பியும் மட்டும்தான் ஊர்ல இருந்தோம்.

17 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பிரியதர்ஷினி
17 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பிரியதர்ஷினி

அந்த நேரத்துல தம்பியும் நானும் சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டோம். கடன் கொடுத்தவங்க எல்லாரும் வீட்டுக்கு வந்து, `நீ என்ன பண்ணுவியோ எங்களுக்குத் தெரியாது. பிச்சை எடுத்தாவது உங்க அம்மா வாங்கின கடனை அடச்சாகணும்'னு, மோசமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அதனால, எங்க ஊர்ல இருக்குற மளிகைக் கடைக்குப் பொட்டலம் போடுற வேலைக்கு ஏழாம் கிளாஸ் படிக்கும்போதே போனேன். காலையில, ஸ்கூலுக்குப் போவேன். அப்புறம் சாயந்தரம் 5 மணியிலிருந்து நைட்டு 10 மணி வரைக்கும் அந்த மளிகைக் கடையிலதான் பொட்டலம் போடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படிப்பையும் பார்த்துட்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துட்டு, என் சின்ன தம்பியையும் பார்த்துக்கிட்டு கடையில வேலைக்கும் போகும்போது ரொம்பக் கஷ்டப்பட்டேன். யாராவது வந்து நமக்கு உதவி பண்ண மாட்டாங்களான்னு அடிக்கடி தோணும். தனியாய் போய் அழுவேன். பணத்துக்கு ரொம்ப கஷ்டம். ஒருநாள் வெச்ச சாப்பாட்டையே சூடு பண்ணி சூடு பண்ணி, மூணு நாளைக்கு நானும் தம்பியும் சாப்பிடுவோம். ஒருகட்டத்துல உடம்பு முடியாமப் போய் ஒருநாள் ஸ்கூல்லயே மத்தியானம் ரத்தவாந்தி எடுத்துட்டேன்" என்றவரின் குரல் கனக்கத் தொடங்கியது.

ஐஏஎஸ் அதிகாரிகள் பாராட்டு
ஐஏஎஸ் அதிகாரிகள் பாராட்டு

``அப்போதான் எங்க ஸ்கூல் டீச்சரும், எங்க சொந்தக்கார அண்ணன் ஒருத்தரும் எங்க குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சு, ரெண்டு பேரும் எனக்கு உதவி பண்ணாங்க. அதன் பிறகு கொஞ்ச நாள்ல எங்க குடும்பம் வாங்குன கடனை எல்லாருமே சேர்ந்து அடைச்சிட்டோம். பிறகு, முழு நேரமா ஸ்கூலுக்குப் போகத் தொடங்கிட்டேன்.

கொரோனா பரவல் குறைஞ்ச பிறகு ஸ்கூல் திறக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும், எங்க ஊர்ல நிறைய பசங்க ஸ்கூலுக்குப் போகம சிமென்ட் வேலை, பஞ்சர் ஒட்டுறது மாதிரியான கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க.

அப்பதான், நம்மள மாதிரிதானே இவங்களும் குடும்ப கஷ்டத்துனால வேலைக்குப் போறாங்கனு தோணுச்சு. இவங்களையும் எப்படியாவது திரும்பவும் ஸ்கூல்ல சேர்க்கணும்னு முடிவெடுத்தேன். முதல்ல அந்தப் பசங்களோட குடும்பத்துல போய் பேசினேன். அவங்க யாருமே அதைக் கண்டுக்கவே இல்ல. ஊர்ல இருக்குறவங்க எல்லாரும், `பொம்பள புள்ளை உனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை'னு திட்டினாங்க. ஆனாலும் நான் மனம் தளரல. மறுபடியும் மறுபடியும் அந்தப் பசங்ககிட்ட பேசுனேன்.

தோழி ஸ்வேதாவுடன் பிரியதர்ஷினி
தோழி ஸ்வேதாவுடன் பிரியதர்ஷினி

எங்க புவனேஸ்வரி மிஸ் மூலமா அந்தக் குடும்பத்துக்கு சில உதவிகளைக் செஞ்சு கொடுத்து படிப்போட அருமையை எடுத்து சொன்னேன். அப்புறம் அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. இப்போ கிட்டத்தட்ட 17 பேரு திரும்பவும் ஸ்கூலுக்குப் போய் படிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னும் நிறைய கூலி வேலை செய்யுற சின்ன பசங்ளோட அப்பா, அம்மாகிட்ட நானும் என் பள்ளித் தோழி ஸ்வேதாவும் சேர்ந்து தொடர்ந்து பேசிட்டு இருக்கோம்.

நிச்சயமா அந்தப் பசங்களையும் ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வந்திடுவோம்னு நம்பிக்கை இருக்கு. தோழி ஸ்வேதாவும் நானும் இப்போ எங்க பகுதியில இருக்கிற கடைகள் உள்பட எல்லா இடத்துலயும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரா பிரசாரம் பண்ணிட்டு இருக்கோம்.

12 வயசுல நான் குழந்தைத் தொழிலாளரா இருந்தேன், ஆனா இப்போ நானே 17 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுப் படிக்க வெச்சு இருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகப் போராடுவேன்.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

தமிழ்நாட்டுல மட்டுமல்ல, இந்தியாவுல எந்த இடத்துல குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தாலும் அங்க போய் பேசுறதுக்குத் தயாரா இருக்கேன்'' என்றார் பிரியதர்ஷினி துடிப்பும் செயலுமாக.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத் ஐ.ஏ.எஸ், மாநிலத் திட்டஇயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரியதர்ஷினியின் செயலுக்காக அவரை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism