Published:Updated:

கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலை, பெற்றோரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்ராவின் அரசியல் பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலை, பெற்றோரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்ராவின் அரசியல் பயணம்
கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலை, பெற்றோரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்ராவின் அரசியல் பயணம்

``அரசியலுக்குள் வருவேன் என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். முப்பது வயதானபோது, இதுதான் சரியான நேரம் அரசியலில் காலடி எடுத்து வைக்க என்று தோன்றியது. என் எண்ணத்தை என் வீட்டாரிடம் தெரிவித்த போது, மிகக் கடுமையாக தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தார்கள்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மக்களவைத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் புதிய எம்.பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தின் முதல் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கிய கூட்டத்தில், அடுத்தடுத்து எம்.பிக்கள் வரிசையாக தங்களின் நன்றியுரையைக் கூறிக்கொண்டிருந்தனர். 25-ம் தேதி நண்பகல் 12.57 மணிக்கு எழுந்தார் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா. அடுத்த சில நிமிடங்களில் புயலாகப் புறப்பட்ட அவருடைய ஆங்கிலம் பாஜகவின் கொள்கைகளை அனல்பறக்கச் சாடி பிறகே ஓய்ந்தது. வழக்கமாக சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மக்களவையின் நட்சத்திரப் பேச்சாளர்களாகக் கருதப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய முதல் பேச்சால் மஹுவா அவர்களைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாகக் கொண்டாடுகிறது சமூக வலைதளங்கள்.

கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலை, பெற்றோரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்ராவின் அரசியல் பயணம்

10 நிமிடங்கள் இடைவிடாமல் அவர் பேசிய தகவல்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு டிரெண்ட் ஆகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் மஹுவாவைப் பாராட்டி வருகின்றனர். ``50 வருடங்களாக ஒரு மாநிலத்தில் பிறந்து அங்ககேயே வாழ்பவர்கள் தாங்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை நிரூபிக்க சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இதே நாட்டில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தாங்கள் பெற்ற கல்விச்சான்றிதழ்களை காட்ட வேண்டும் என்று யாரும் கேட்கத்தயாராக இல்லை" என்றவரின் பின்னணி சுவாரஸ்யமானது.    

மஹுவா மொய்த்ரா பிறந்தது அஸ்ஸாமில், வளர்ந்தது கொல்கத்தாவில், வேலை பார்த்தது அமெரிக்காவில்... பொருளாதாரம் மற்றும் கணிதம் படித்த இவர், அமெரிக்காவில் இன்வெஸ்மென்ட் பேங்கராக கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்து வந்திருக்கிறார். ``அரசியலுக்குள் வருவேன் என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். முப்பது வயதானபோது, இதுதான் சரியான நேரம் அரசியலில் காலடி எடுத்து வைக்க என்று தோன்றியது. என் எண்ணத்தை என் வீட்டாரிடம் தெரிவித்த போது, மிகக் கடுமையாக தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தார்கள். அதையும் மீறி நான் என் அமெரிக்க வேலையைத் துறந்துவிட்டு இந்தியா வந்தபோது என்னுடன் பேசுவதை பல வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் எனக்கு தெரியும், நான் எதை விரும்புகிறேன் என்று!" என்று ஆணித்தரமாக தன்னுடைய விருப்பத்தை ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார் மஹுவா.

கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலை, பெற்றோரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்ராவின் அரசியல் பயணம்

சமூக சேவை மற்றும் மதச்சார்பின்மை மீது அதிக ஆர்வம் கொண்ட மஹீவா முதலில் தன்னை இணைத்துக்கொண்டது காங்கிரஸில். ராகுல் காந்தி ஆரம்பித்த `Aam Aadmi Ka Sipahi' என்கிற புராஜக்டில் வங்காளத்தின் இன் சார்ஜாக பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு, திரிணாமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்கட்சியின் எம்.எல்.ஏ ஆனார். ``ஒரு எம்.எல்.ஏ எப்படிச் செயல்பட வேண்டும், மக்களுடன் மக்களாக எப்படிக் கலந்து பணியாற்ற வேண்டும் என்பதை நான் அறிவேன். என்னைப் பொறுத்தவரை வங்கிப் பணியும், களத்தில் மக்களுடன் நிற்பது என இரண்டும் ஒன்றுதான். தேவை சுய ஒழுக்கம் மட்டுமே'' என்றவர் மக்களுடன் மக்களாகத் தொகுதிப் பணிகளை முன்னெடுத்துச் செய்தார். விளைவு கிருஷ்ணாநகர் தொகுதியில் 63,218 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து தான் மக்களின் பிரதிநிதி என்பதை நிரூபித்தார்.

தன் கருத்துகளை முன் வைக்கும் போது சர்ச்சையில் சிக்குவது அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் ஒன்றாகிப் போயிருக்கிறது. அதற்கு மஹுவாவும் தப்பவில்லை. தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், தொகுப்பாளர் தன் கருத்தை சொல்ல போதிய அவகாசம் தரவில்லை என்கிற கோபத்தில் தன் நடுவிரலைத் தொகுப்பாளருக்கு காட்டி சர்ச்சையில் சிக்கினார் மஹுவா. சில்ஷர் விமனா நிலையத்தில் நடந்த போராட்டத்தில் தன்னைத் தடுக்க முயன்ற பெண் போலீஸை தடுத்து நிறுத்தி அவரை காயப்பத்திய வீடியோவில் வைரல் ஆனார். தற்போது மக்களவையில் பிஜேபியின் கொள்கைகளை எதிர்த்து உரையாடிப் பிரபலமாகியிருக்கிறார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு