Published:Updated:

ரூ.35 லட்சம் மதிப்பில் கைப்பை! - சர்ச்சையில் சிக்கிய துருக்கி நாட்டு அதிபர் மனைவி

ரூ.35 லட்சம் மதிப்பில் கைப்பை! - சர்ச்சையில் சிக்கிய துருக்கி நாட்டு அதிபர் மனைவி
ரூ.35 லட்சம் மதிப்பில் கைப்பை! - சர்ச்சையில் சிக்கிய துருக்கி நாட்டு அதிபர் மனைவி

துருக்கி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. மக்கள், ஏழ்மையில் உழன்று கொண்டிருக்க, அதிபர் ரிசப் நயிப் எர்டோகன் மட்டும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரின் ஆட்சியின் கீழ்தான் அங்காராவில் பிரமாண்டமான அரண்மனை அதிபருக்காகக் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் 1,150 அறைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிபர் மட்டுமல்ல அவரின் மனைவியும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். 

ரூ.35 லட்சம் மதிப்பில் கைப்பை! - சர்ச்சையில் சிக்கிய துருக்கி நாட்டு அதிபர் மனைவி

அண்மையில், ஜப்பான் நாட்டுக்கு எர்டோகன் சுற்றுப்பயணம் சென்றார். எந்த நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், தம்பதி சகிதமாகச் செல்வது எர்டோகனின் வழக்கம். டோக்கியோவில் ஜப்பான் அரசர் வசிக்கும் இம்பிரீயல் அரண்மனைக்குத் தம்பதி விசிட் அடித்தனர். அப்போது, அதிபரின் மனைவி எமினி தன் கையில் ரூ.35 லட்சம்  விலை மதிப்பு கொண்ட கைப்பையைப் பயன்படுத்தியுள்ளார்.  

இந்தப் பணத்தில் துருக்கி நாட்டில் 11 பேருக்கு ஒரு வருடம் சம்பளம் வழங்க முடியும். வறுமையில் உழலும் ஒரு நாட்டின் அதிபரின் மனைவி 35 லட்சம் மதிப்புள்ள கைப்பையைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் பரவியதும் ஏராளமானோர் துருக்கி அதிபரையும் அவரின் மனைவியையும் விமர்சித்து வருகின்றனர்.