Published:Updated:

தந்தை விவசாயி; மகள்கள் 5 பேரும் அரசு அதிகாரிகள்; ராஜஸ்தான் சகோதரிகளுக்கு குவியும் பாராட்டு!

ஐந்து சகோதிரிகள்
ஐந்து சகோதிரிகள் ( Twitter: Photo// @Reza_Ali20 )

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸாதேவ் சஹரனின் மகள்களாக பிறந்த இந்த ஐந்து சகோதிரிகளும், ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று, குடும்பத்தினருக்கும் தங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

2018-ல் நடைபெற்ற ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வின் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை(13-07-2021) அன்று வெளியானது இதில் 2,023 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற இவர்கள் ராஜஸ்தானின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனர்.

ஐந்து சகோதிரிகள்
ஐந்து சகோதிரிகள்
Twitter: Photo// @Reza_Ali20
105 வீதிகளுக்கு செந்தமிழில் பெயர்கள்; ஊராட்சித் தலைவரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!

அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸாதேவ் சஹரனின் ஐந்து மகள்களும், ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று, குடும்பத்தினருக்கும் தங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். ஐந்து பெண்களுக்கும், உறுதுணையாக நின்ற விவசாயித் தந்தையின் பேரன்பே இவர்கள் வெற்றிக்கு காரணம் என்றே கூறலாம்.

ரோமா, மஞ்சு இருவரும் ஏற்கனவே ராஜஸ்தானின் நிர்வாக பொறுப்பில் உயர்பதவி வகித்து வருகின்றனர், இந்நிலையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த அன்சு, ரித்து, சுமன் ஆகியோரும் 2018-ல் நடைபெற்ற ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தங்கள் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் வண்ணம் ஐந்து சகோதிரிகளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

`திருக்குறளை இப்படியும் கொண்டு சேர்க்கலாம்!' - கோலம் மூலம் தமிழ் பரப்பும் மாலதி #SheInspires

இந்திய வனத்துறையைச் சேர்ந்த பார்வின் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், ``விவசாயி ஸாதேவ் சஹரனின் ஐந்து மகள்களும் இன்று RAS ஆபிசர்ஸ். ரித்து, அன்சு, மற்றும் சுமன் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் பணியில் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர். குடும்பத்திற்கும், கிராமத்திற்கும் பெருமிதம் சேர்த்துள்ளனர்”, என்று புகைப்படத்துடன் கூடிய பதிவைப் பதிவிட்டுள்ளார்.

- ஹரிணி ஆனந்தராஜன்

அடுத்த கட்டுரைக்கு