Election bannerElection banner
Published:Updated:

காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா

காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா
காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா

காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா

காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா

இரு வாரங்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கானோர் பார்க்க... பட்டப்பகலில் அரங்கேறிய அந்த பயங்கரம், தேர்தல் பரபரப்பில் கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. சாதி மாறி காதலித்தார் என்ற காரணத்துக்காக அரங்கேறிய அந்த ஆணவக்கொலையின் நேரடி சாட்சியாக இருப்பவர் கெளசல்யா. தன் காதல் கணவரை இழந்து விட்ட போதும், தன் கணவர் குடும்பத்துக்கு ஆதரவாக போராடி வருகிறார்.

தன் அப்பா, அம்மா மற்றும் மாமாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தவர், அதையே நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலமாகவும் அளித்து, குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி... இன்னும் அதே தைரியத்துடன் இருக்கிறார் கெளசல்யா. தன் வாழ்க்கையை கணவர் குடும்பத்துக்காகவே வாழ்வேன் என உறுதியோடு இருக்கும் கெளசல்யா இன்னும் ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.

இந்த 15 நாட்கள் பத்திரிகையாளர்கள் யாரும் கெளசல்யாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சங்கரின் குடும்பத்தார் மற்றும் முக்கிய அரசியல் கட்சி, அமைப்புகள் சேர்ந்தவர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர். செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு அமைப்பின் நிர்வாகிகளோடு நிர்வாகியாக சென்று கெளசல்யாவை சந்தித்தேன். நடந்தவை குறித்து நம்மிடம் விளக்கினார் கெளசல்யா. "நாங்க ரெண்டு பேரும் பொள்ளாச்சியில ஒரே காலேஜ் தான். என் ஊரு பழனி. நான் பஸ்சுல போயிட்டு வந்துட்டு இருந்தேன். ஒரே காலேஜ்ல படிச்சாலும், பஸ்சுல தான் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு," என்றவரிடம் குறுக்கிட்டு அப்போதே அவர் என்ன சமூகத்தைச் சேர்ந்தவர்னு தெரியுமா? என கேட்க... தெரியும். தெரிஞ்சு தான் பழகினேன். சாதி பத்தி எல்லாம் எனக்கு தெரியலை. சங்கர் என் மேல ரொம்ப பாசமா இருப்பான். எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துப்போச்சு. ரெண்டு பேரும் ஒண்ணாதான் காலேஜ் வந்துட்டு போவோம். ஒருநாள் நாங்க பஸ்ல உட்காந்துட்டு வர்றத, கண்டக்டர் போட்டோ எடுத்து அம்மா கிட்ட காட்டீட்டார்.

உடனே எங்க வீட்டுல ரொம்ப பிரச்னை பண்ணாங்க. நான் சங்கரை விரும்புறேன்னு சொன்னேன். அதுக்கு எங்க வீட்ல ரொம்பவே கோவப்பட்டாங்க. "அவன் என்ன சாதி தெரியுமா? அவன்கிட்ட வாங்கியே திங்க கூடாது. அவனோட வாழ்றேன்னு சொல்றியா," என திட்டினார்கள். "எல்லோரும் ஒண்ணு தான். அதென்ன மேல்சாதி, கீழ் சாதினு கேட்டேன்," என்னை அடிச்சு, எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. எங்க மாமா பாண்டித்துரை மூலமா மாப்பிள்ளை பாத்தாங்க. இதுல எனக்கு துளியும் விருப்பமில்லை. சங்கர்கிட்ட இது சம்பந்தமா பேசினேன். காலேஜ் படிச்சு முடிச்சதுக்கு பின்னாடி கல்யாணம்

காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா

பண்ணிக்கலாம்னு சொன்னான். அப்போ வீட்டுல நடக்குற விஷயத்தை சொல்லி அழுதேன். அதுக்கு அப்புறம் தான் ரெண்டு வீட்டுக்கு சொல்லாம நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம். பழனியில தான் கல்யாணம் பண்ணினோம். இது எங்க வீட்டுல தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆயிடும்னு நினைச்சோம். அதனால நாங்க ரெண்டு பேரும் மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைஞ்சோம். அந்த நேரத்துல திரும்ப வந்துரச்சொல்லி என்னை மிரட்டினாங்க. சங்கரை, அவரோட அப்பா, தம்பிகளையும் மிரட்டினாங்க. எங்க வீட்டுக்காரங்க மிரட்டினாங்க. எத்தனை லட்சம் வேணும் ஒரே செட்டில்மென்ட்ல கொடுக்குறோம்னு பேசி பாத்தாங்க.

சங்கரோ, அவங்க குடும்பத்தினரோ, மிரட்டலுக்கும் பயப்படல. பணத்துக்கும் மயங்கல. இதனால் வேறு வழியில்லாம பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லீட்டாங்க. எங்க அப்பா, அம்மா வாங்கி கொடுத்த செருப்பை கூட திருப்பி வாங்கிட்டாங்க. பக்கத்து கடையில் புது டிரஸ் வாங்கிட்டு வந்து, அந்த டிரஸ்ஸையும் திருப்பி கொடுத்துட்டேன். நல்லா சந்தோஷமா வாழ்க்கையை துவங்கினோம். நான் காலேஜ் படிக்குறதை நிறுத்திட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். சங்கரை மட்டும் விடாம படிக்கச்சொன்னேன். படிச்சு முடிச்ச உடனே வேலைக்கு போய் நல்லா வாழலாம்னு முடிவெடுத்தோம். இதுக்கிடையில என்னை எங்க தாத்தா பார்க்க வந்தாங்க. ரொம்ப பாசமா பேசி, ஸ்கூட்டி பைக்கை கொடுத்தார். நானும் அவரை நம்பினேன். என்னை  ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணச் சொல்லி, என்னை கார்ல கடத்திட்டு போயிட்டாங்க.

திண்டுக்கல் கூட்டீட்டு போய், சொந்தக்காரங்க வீட்டுல வைச்சு கெஞ்சியும், மிரட்டியும் பாத்தாங்க. நான் சங்கரை மறக்கணுங்கறதுக்காக கேரளா மாந்த்ரீகம் எல்லாம் செஞ்சு மறக்க முயற்சித்தார்கள். ஆனா 'வாழ்ந்தா அவனோடு தான் வாழ்வேன். என்னை சாகடித்து விடுங்கள்' என நான் சொன்னேன். இந்த நேரத்துல சங்கரும் என்னை காணலைனு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்ததால் வேற வழியில்லாம போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாங்க. இடையில எங்களை கொல்லவும் பாத்தாங்க. இதனால நாங்க தனியா வெளியே வராம இருந்தோம். இந்த நேரத்துல தான் சங்கருக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சது. எங்க வீட்டுல இருந்து ஒரு முறை போன் வந்தப்ப இதை சொன்னேன். 'சென்னை போகப்போறேன். நாங்க இனி சந்தோஷமா  இருக்கப்போறேன்'னு சொன்னேன்.
 

காலேஜ் காதல் முதல் ஆணவக்கொலை வரை... நடந்தது என்ன?- பின்னணியை சொல்லும் கெளசல்யா

அப்போ சங்கருக்கு காலேஜூம் முடிஞ்சது. மறுநாள் சங்கர் காலேஜ்ல ஆண்டு விழா. அதுக்கு புது டிரெஸ் வேணும்னு கேட்டான். சரி வா ரெண்டு பேரும் போலாம்னு சொல்லி கிளம்பினோம். 1,500 ரூபாய் தான் எங்க கிட்ட இருந்துச்சு. கடைக்கு போனோம். சங்கருக்கு ஒரு சட்டை மட்டும் தான் வாங்கினோம். கடையில இருந்து திரும்பி வர்றப்போ திடீர்னு சங்கரை வெட்ட வந்தாங்க. நான் தடுத்தேன். என்னை அரிவாளை திருப்பி வைச்சு தான் வெட்டுனாங்க. என்னை கொல்லணும்னு அவங்க நினைக்கலை. அப்படி நினைச்சிருந்தா அரிவாளால வெட்டியிருப்பாங்க. சங்கரை கொடூரமா வெட்டு சாய்ச்சாங்க. சங்கரை வெட்டி கொன்னுட்டா, நான் வந்துடுவேன்னு நினைச்சாங்க போல. நான் என்ன ஆனாலும் போகமாட்டேன்.

வெட்டுனவங்களை நான் அப்பாவோட பார்த்திருக்கேன். அதை போலீஸ் கிட்ட சொன்னேன். குற்றவாளிகள் அடையாள அணிவகுப்புலயும் அவங்களை அடையாளம் காட்டினேன். என் அப்பா எங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பார். அவரே இப்படி செய்யற அளவுக்கு சாதி பெருசா போச்சா?. இந்த கொலைக்கு காரணமான எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுப்பேன். எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க எங்களுக்கு தெரியாதா? இது மாதிரி இனி நடக்கவே கூடாது. இந்த சம்பவத்தால தலைமறைவாகி வீட்டில் முடங்க மாட்டேன். மற்றவர்களுக்கு நடக்காத மாதிரி முன்மாதிரியாக செயல்படுவேன். இதையெல்லாம் வெளி உலகில் சொல்லுவேன். நான் சங்கர் குடும்பத்துக்காக, அவங்களோட வாழ ஆசைப்படறேன்," என உறுதியாகவே சொன்னார் கெளசல்யா.

-ச.ஜெ.ரவி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு