Published:Updated:

இத்தாலி கண்காட்சியில் இந்தியப் பழங்குடிப் பெண்ணின் ஓவியங்கள்.. யார் இந்த ஜோதையா பாய்?

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்த பழங்குடி பெண்ணான ஜோதையா, அதன்பிறகு தீவிரமாக ஓவியம் வரைவதில் ஈடுபடத் தொடங்கினார்.

ஜோதையா பாய்
ஜோதையா பாய்

மத்தியப் பிரதேசத்தின் லோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதையா பாய். 80 வயதான இவர், அங்கிருக்கும் கதியா லோகர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். லோகர் சமூகம் இரும்பு பொருட்களைச் செய்வதற்குப் பெயர் போனது என்றாலும் ஜோதையாவுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தவர், அதன்பிறகு தீவிரமாக ஓவியம் வரைவதில் ஈடுபடத் தொடங்கினார்.

ஜோதையா பாய்
ஜோதையா பாய்

தற்போது இவர் வரைந்த ஓவியங்கள் இத்தாலியின் ஓவியக்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அவர், ”என் கணவர் இறந்தபிறகு எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை இருந்தது. அதனால் வரையக் கற்றுக்கொண்டு, வரையத் தொடங்கினேன்.

கடந்த நாற்பது வருடங்களில் பல ஊர்களுக்குச் சென்று வரைந்திருக்கிறேன். நான் பார்க்கும் விலங்குகள், மரம் செடி கொடிகள்தான் எனக்கு வரைபொருள்” என்று கூறியுள்ளார்.

ஜோதையா பாய்
ஜோதையா பாய்

அவருக்கு வரையப் பயிற்சி கொடுத்த அவருடைய ஆசிரியர் ஆசிஷ் கூறுகையில், ”ஜோதையா தனது அத்தனைத் துன்பங்களுக்கு இடையிலும் வரைவதைப் நிறுத்தவில்லை. தனது முழு கவனத்தையும் அதில் செலுத்தினார். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. அவர் எட்டவேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கின்றன” என்கிறார்.

இலக்கை முடிவு செய்துவிட்டால் வயது வெறும் எண் மட்டும்தான்!