Published:Updated:

மாதவிடாய் நேரத்தில் பெண்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் விநோத கிராமம்! | Documentary

மாதவிடாய் கிராமம் ( Sarpana B. )

இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் நாள்களில் உணவுகூட கொடுக்காமல் பெண்களை தனிக் கட்டடத்தில் ஒதுக்கி வைக்கும் விநோத நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் கிராமத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மாதவிடாய் நேரத்தில் பெண்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் விநோத கிராமம்! | Documentary

இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் நாள்களில் உணவுகூட கொடுக்காமல் பெண்களை தனிக் கட்டடத்தில் ஒதுக்கி வைக்கும் விநோத நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் கிராமத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Published:Updated:
மாதவிடாய் கிராமம் ( Sarpana B. )
இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் நாள்களில் பெண்களை இப்படியெல்லாம் நடத்துவார்களா என்று அதிர்ச்சியூட்டுகிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடைபிடிக்கப்படும் விநோத வழக்கம்.

பெண்களுக்கு மாதந்தோறும் நடக்கும் இயற்கையான நிகழ்வுதான் மாதவிடாய். இந்தக் காலகட்டத்தில் உடல், மன ரீதியான பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வார்கள். அன்பு, அரவணைப்பு, ஊட்டச்சத்தான உணவு எனத் தேவைப்படும் இந்த மூன்று நாள்களில், உணவுகூட கொடுக்காமல் பெண்களை ஒதுக்கி வைக்கும் விநோத நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் கிராமத்தில் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரியிலிருந்து 12 கிலோ மீட்டர் பயணித்தால் வரவேற்கிறது நாரலப்பள்ளி பஞ்சாயத்து. இங்கிருந்து 10 கிலோமீட்டர் இருபுறமும் மலைகள் சூழ்ந்த பாதையில் பயணித்தால் வருகிறது ஏக்கல் நத்தம் கிராமம். இங்குதான், மாதவிடாய் வந்துவிட்டாலே, வீட்டுக்கு தூரம் என்ற சொல்லுக்கு ஏற்ப, உணவுகூட கொண்டுபோய் கொடுக்காமல் பெண்களை 3 நாள்கள் ஒரு கட்டடத்துக்குள் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

மாதவிடாய் கிராமம்
மாதவிடாய் கிராமம்

கைக்குழந்தையுடன் நம் கண்முன்னே எதிர்ப்பட்ட இளம்பெண் சின்னம்மாவிடம் இந்த வழக்கம் குறித்த நாம் பேச்சுக் கொடுத்தபோது, தனக்குத் திருமணமாகி ஏக்கல் நத்தம் கிராமத்துக்கு வந்தபிறகுதான் இப்படியொரு வழக்கம் இருப்பதே தெரியும் என்கிறார். மேலும், மாதவிடாய் காலங்களில் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஊருக்கு நடுவில் இருக்கும் கட்டடத்தில் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிற சின்னம்மா, அந்த நாள்களில் எப்படி இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் வேதனையோடு விவரிக்கிறார். அதாவது, தங்களுக்குச் சாப்பாடு யாரும் கொண்டுவந்து கொடுப்பதில்லை. வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பாத்திரங்கள், சமையல் பொருள்களை வைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சமைத்துக்கொள்வதாகவும் அங்கேயே குளித்துக்கொள்வதாகவும் இதனால், மாதவிடாய் நாள்களில் தனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிடத் தோன்றும் என்று மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்.

இந்தக் கிராமத்தில் ஏன் இப்படியொரு வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது? மற்றப் பெண்கள் சொல்லும் காரணம் என்ன? எல்லா பெண்களும் இந்த வழக்கத்தை விரும்பித்தான் ஏற்கிறார்களா? ஆண்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் வீடியோவில் முழுமையாகக் காண லிங்க்கைக் கிளிக் செய்யவும்.