Published:Updated:

`` என் அம்மாவுக்குப் புது வாழ்க்கை அமைய வேண்டும்!"- இணையத்தை ஈர்த்த மகளின் ட்விட்டர் பதிவு

சிங்கிள் மதர் வளர்ப்பில் வளர்ந்தவர் 21 வயதுச் சட்டக்கல்லூரி மாணவி அஸ்தா வர்மா. தன்னுடைய அம்மாவுக்கு வரன் தேடுகிறேன் என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாயுடன் அஸ்தா வர்மா
தாயுடன் அஸ்தா வர்மா

கணவர் துணையின்றி குழந்தைகளை வளர்க்கும் பெண்களைப் பல்வேறு பெயர்களால் அழைப்பதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட ஒரு சொல் `சிங்கிள் மதர்'. என்னை நம்பிப் பிறந்த குழந்தையை யார் துணையுமின்றி என்னால் வளர்க்க முடியும் என சமுதாயத்தின் ஏளனங்களைப் புறந்தள்ளி தங்களின் குழந்தைகளுக்காக வாழத்தொடங்கிய பெண்கள் பலரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Vikatan
அஸ்தா வர்மா
அஸ்தா வர்மா

அப்படி, சிங்கிள் மதர் வளர்ப்பில் வளர்ந்தவர் 21 வயதுச் சட்டக்கல்லூரி மாணவி அஸ்தா வர்மா. தன்னுடைய அம்மாவுக்கு வரன் தேடுகிறேன் என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவில், ``ஓர் ஆண் துணையின்றி, என்னுடைய எல்லாத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்த என் அம்மாவுக்கு நான் புது வாழ்க்கை அமைத்துத் தர விரும்புகிறேன். என்னுடைய அம்மாவுக்கு 50 வயது மதிக்கத்தக்க ஓர் அழகான துணை வேண்டும். அவர் சைவ உணவுகளை உண்பவராகவும் குடிப்பழக்கம் அற்றவராகவும் இருக்க வேண்டும்" என்று வரன் தேடுதல் ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

சிலர் அஸ்தாவின் இந்த ட்வீட்டைக் கிண்டல் செய்யும்விதமாகப் பதிலளித்து வந்தனர். அவற்றுக்குப் பதில் அளித்தவர், `ஒரு பெண் தனக்கான துணையைத் தேடுவது அவ்வளவு பெரிய குற்றமா?' என்று பதிலடியும் கொடுத்துளார் அஸ்தா. 

அஸ்தா வர்மாவின் இந்தப் பதிவுக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.