Published:Updated:

28 மாநிலங்கள், 25,000 கிமீ; பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மலையேற்ற வீராங்கனை சைக்கிள் பயணம்!

ஆஷா மால்வியாவை வரவேற்ற ஆட்சியர்

மத்தியப் பிரதேசம் மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா மால்வியா. இவர் மலையேற்றத்தில் சாதனை படைத்த தேசிய வீராங்கனை. பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி இந்தியா முழுக்க சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

28 மாநிலங்கள், 25,000 கிமீ; பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மலையேற்ற வீராங்கனை சைக்கிள் பயணம்!

மத்தியப் பிரதேசம் மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா மால்வியா. இவர் மலையேற்றத்தில் சாதனை படைத்த தேசிய வீராங்கனை. பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி இந்தியா முழுக்க சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Published:Updated:
ஆஷா மால்வியாவை வரவேற்ற ஆட்சியர்

மத்தியப்பிரதேச மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா மால்வியா. இவர், மலையேற்றத்தில் சாதனை படைத்த தேசிய வீராங்கனை. இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 25,000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ஆஷா. அதன்படி, தனது பயணத்தை மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கினார். தொடர்ந்து, குஜாரத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா என ஏற்கெனவே 6 மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு, எண்ணற்றவர்களை சந்தித்திருக்கிறார்.

ஆஷா மால்வியாவை வரவேற்ற ஆட்சியர்
ஆஷா மால்வியாவை வரவேற்ற ஆட்சியர்

அந்த வகையில், தற்போது ஏழாவது மாநிலமாக தமிழ்நாட்டில், கன்னியாகுமரியில் தொடங்கி திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல் வழியாக கரூரை வந்தடைந்தார். இப்படி, மொத்தமாக இதுவரை 68 நாள்களில் 7,327 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டத்துக்கு வந்த ஆஷா மால்வியாவை, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வரவேற்றார். அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கி, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆஷா மால்வியா, "நான் மலையேற்றத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளேன். பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லா விசயங்களிலும் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அதேபோல், பெண்கள் தங்களுக்கு வரும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்பவர்களாக மாறியிருக்கிறார்கள். பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு இன்னும் துணிச்சல்மிக்கல்வர்களாக மாற வேண்டும்.

ஆஷா மால்வியா
ஆஷா மால்வியா

அதனால், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி, நாடு முழுக்க உள்ள பெண்களிடம் ஓர் உத்வேகம் ஏற்படுத்த நினைத்தேன். அதற்காகவே, இந்த நெடுந்தூர சைக்கிள் பயணம். நான் சந்திக்கும் இடங்களில் எல்லாம் என்னை பெண்கள் ஆரத்தழுவி வரவேற்கிறார்கள். 'உங்களது இத்தகைய பயணம், எங்களுக்கும் நம்பிக்கை தருகிறது' என்று என்னிடம் சொல்கிறார்கள். இந்தப் பயணத்தை தொடங்கியதில், தொடர்வதில் மகிழ்ச்சி" என்றார்.