Published:Updated:

`தாங்கமுடியாத வலியை அனுபவித்தேன்; பெண்கள்மீது குற்றம் சுமத்தாதீர்கள்!’- கஜோல் சீக்ரெட் ஷேரிங்ஸ்

"மீண்டு வந்தேன். இப்போது, என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" - கஜோல்

கஜோல்
கஜோல்

`தைரியமும் நேர்மையும் மிக்கவர்’ என பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் புகழப்படுபவர், நடிகை கஜோல். இவர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் கருச்சிதைவுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்ததைப் பற்றி பேசியுள்ளார்.

`நான் நடித்த படங்களிலேயே என் மகளுக்குப் பிடிக்காத படம்..!' - காரணம் சொல்லும் நடிகை கஜோல்
கஜோல்
கஜோல்

இந்தித் திரையுலகின் அழகான ஜோடி, அஜய் தேவ்கன் - கஜோல் தம்பதி. டேட்டிங், கல்யாணம் என அவர்களது வாழ்வு நகர்ந்தது. அவர்களுக்கு நைஸா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளனர்.

ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்த கஜோல், ``அது 2001-ம் ஆண்டு. 'கபி குஷி கபி கம்' பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை.

அடுத்து இன்னொரு முறையும் எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன். இப்போது, என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.

கஜோல் குடும்பம்
கஜோல் குடும்பம்
Vikatan

மேலும், "கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள். இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காகப் பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.