Published:Updated:

மகளிர் மட்டும் கப்பற்படை... கெத்து காட்டும் இந்தியா! #MTSwarnaKrishna

MTSwarnaKrishna Women crew
News
MTSwarnaKrishna Women crew ( Twitter/@@mansukhmandviya )

விமானம் முதல் ஆட்டோவரை ஓட்டும் ஆயிரக்கணக்கான பெண்களின் மத்தியில் கப்பலோட்டும் பெண்கள் மிகக் குறைவே. கப்பற்படையில் சேர்ந்து கடலில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. ஆனால் இதிலும் புது சாதனை படைத்திருக்கிறார்கள் இந்தியப் பெண்கள். #MTSwarnaKrishna

பெண்கள் செய்யாத அல்லது பெண்களால் செய்ய முடியாத வேலை என இன்றைய உலகில் ஏதும் இல்லை. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பல்வேறு துறைகளில் தடை உடைத்து சாதித்திருக்கிறார்கள் பெண்கள்.

'உலகின் முதல் பெண்' என அடைமொழிகள் இன்று அரிதாகிவிட்டன. அதேசமயம் சில துறைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றுவதும், ஆண்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் அதிக ஆதிக்கம் செலுத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில், வகுப்பிற்கு ஒரு மாணவி இருப்பதே அதிசயமாக இருக்கிறதல்லவா...? இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

MTSwarnaKrishna
MTSwarnaKrishna
Twitter/@mansukhmandviya

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்படி பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும் துறைகளில் ஒன்றுதான் கப்பல் துறை. விமானம் முதல் ஆட்டோ வரை ஓட்டும் ஆயிரக்கணக்கான பெண்களின் மத்தியில் கப்பலோட்டும் பெண்கள் மிகக் குறைவே. கப்பற்படையில் சேர்ந்து கடலில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. ஆனால் இதிலும் புது சாதனை படைத்திருக்கிறார்கள் இந்தியப் பெண்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உலகின் கப்பற்படை வரலாற்றில் முதல்முறையாக முழுக்க முழுக்க பெண்களால் ஆன கப்பற்படை குழு தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தியக் கப்பல் கழகத்தின் (Shipping Corporation of India) MT ஸ்வர்ண கிருஷ்ணா எனும் கப்பல் மார்ச் 6-ம் தேதி முழுக்க பெண் அலுவலர்களால் செலுத்தப்படும் உலகின் முதல் கப்பல் என்ற பெருமையை அடைந்திருக்கிறது. MT ஸ்வர்ண கிருஷ்ணா ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு துறைமுகத்துக்குச் சரக்கு, மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் சரக்கு கப்பலாகும் (Product Carrier). துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா MT ஸ்வர்ண கிருஷ்ணா கப்பலின் பயணத்தை காணொளிக்காட்சியில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மான்சுக் மாண்டவியா
மான்சுக் மாண்டவியா
Twitter/@mansukhmandviya

மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா ஆற்றிய துவக்க உரையில், "இந்தியக் கப்பற்படையின் பெண்கள் பாராட்டுக்குரியவர்கள். பெரும் சாதனைப் படைத்திருக்கிறார்கள். இதற்காக பெரும் தியாகமும் பங்களிப்பும் செய்திருக்கிறீர்கள். இவர்களின் இந்த சாதனை உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும். இவர்கள் இந்தியத் தேசத்தின் பெருமை எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியக் கப்பல் கழகம் இந்த ஆண்டு அதன் 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறது. அந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், பெண்கள் தினத்தை முன்னிட்டும் இந்த சாதனைக்கு வித்திட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியக் கப்பல் கழகத்தின் (SCI) இயக்குநர் HK ஜோஷி இதுகுறித்து பேசுகையில், "SCI தன்னுடைய இடைவிடாத கடுமையான போராட்டத்தின் மூலமாகச் சமத்துவம் பேணும் இந்தக் கப்பல் துறைக்கே முன்னுதாரணமான மாற்றத்தைக் கையிலெடுத்திருக்கிறது. இதன்மூலம் பெண்களுக்கான அதிகாரப்பங்கீட்டில் கவனம் செலுத்தியிருக்கிறது. இந்த துறையில் சாதிக்கத் துணிந்து, முயன்று, பல தியாகங்கள் செய்த பெண்களை இதன்மூலம் அங்கீகரித்து பெருமைப் படுத்தியிருக்கிறது" என்று கூறி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்.

பெண் கப்பற்படையினரை பணியில் அமர்த்துவதில் இந்திய கப்பல் கழகம் எப்போதும் முன்னோடியாகவே திகழ்ந்தது. அதன் கப்பற்படை பயிற்சி நிறுவனத்தில் (Maritime training institute) பெண்கள் சேர்வதை ஊக்குவிக்க, பெண்களின் வயதுவரம்பை அதிகரித்தது, பயிற்சிக்கட்டணத்தை குறைத்து என பல்வேறு சிறப்பு அம்சங்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

பல நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆண்களைக் கடலுக்குள் அனுப்பிவிட்டு கரைகளில் தேங்கும் பல்வேறு பெண்களின் கதைகளைக் கண்டு, கேட்டுப் பழகியிருக்கும் நமக்கு, அந்தக் கரையைத் தாண்டிய இந்த பெண்களின் வாழ்வும் சாதனையும் பெரும் முன் உதாரணமாகத் திகழ்கிறது.