தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை: பெண்களுக்கான சுதந்திரமா அல்லது மற்றுமொரு சுரண்டலா?

அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் ONLINE

அவள் ONLINE

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

``ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு பெண், ‘பாபு எந்திரிச்சு வா பாபு’ என்று கதறும் காணொலியை நீங்களும் பார்த்திருக்கலாம். தன்னுடன் மூன்று வருடங்கள் ‘லிவிங் டுகெதர்’ ஆகச் சேர்ந்து வாழ்ந்த காதலன், திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை அறிந்த காதலி கதறி அழும் காட்சி அது. “ஏம்மா எல்லாம் தெரிஞ்சுதான நீ அவன் கூட போன… அப்பா, அம்மா பேச்சைக் கேட்காம இப்படி திருட்டுத்தனமா சேர்ந்து வாழ்ந்தா இதான் நிலைமை. இதுக்குத்தான் ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்” என்பதாகத் தங்கள் ஒழுக்க வாதங்களை வைத்தனர் பலர்.

அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, குமரி மாவட்டத்தில் ஊரும் உறவும் கூடி கைப்பிடித்துக் கொடுத்த தன் கணவரின் வீட்டின் முன்பு சாலையில், வரதட்சணையால் தன்னை ஒதுக்கிய கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி பெண் வழக்கறிஞர் சாலையில் உருண்டு கதறி அழுத காட்சி செய்திகளில் இடம்பெற்றது. இந்தச் செய்திகள் முதல் கேரளாவில் வரதட்சணை வன்முறைக்கு உயிரைப் பறிகொடுத்த விஸ்மயா வரை சொல்ல வரும் உண்மை… கூட்டு வாழ்க்கை, குடும்பம் போன்றவையெல்லாம் வன்முறை யான அமைப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன என்பதைத்தான்.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை: பெண்களுக்கான சுதந்திரமா அல்லது மற்றுமொரு சுரண்டலா?

ஆணாதிக்க அமைப்பில் பெண்களுக்குக் குடும்பம் எந்தளவுக்குப் பாதுகாப்பற்ற, சுரண்டல் நிறைந்த ஏற்பாடோ, அதேபோல் நவதாராளவாத யுகத்தின் பாதுகாப்பற்ற, சுரண்டல் நிறைந்த ஏற்பாடுதான் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையும் என்பதை நிகழ்வுகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இதைப் படித்ததும் முற்போக்கு ஆண்களும் பெண்களும் பொங்குவார்கள். அவர்கள் பொங்கும் நேரத்தில் எங்கோ ஒரு பெண் கதறிச் சாகிறாள்.

கைம்பெண், திருமணம் முறிந்து தனித்து வாழும் பெண், குறிப்பாகக் குழந்தை உள்ள பெண், சமூக அழுத்தத்தால் மறுமணம் செய்துகொள்ள இயலாத பெண் அல்லது தன் துணை விவாகரத்துக் கொடுக்காமல் துன்புறுத்துவதால் பாதிக்கப்பட்டுள்ள ஆண் அல்லது பெண்... இவர்களுக்கு சேர்ந்து வாழ்தல் என்பது கைக்கொடுக்கும் ஏற்பாடாக இருக்கிறது. ஆனால், பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையெனில் பிரிந்து செல்வோம் என்பதில் ‘பிடிக்கவில்லை’ என்பது தோற்றத்தில் பெண்களுக்குச் சாதகமானது போல் தோன்றினாலும், ஆணுக்கே அது அணு கூலமாக இருக்கிறது.’’

சேர்ந்து வாழ்தல் வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும்போது ஆணைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சமூக வாதங்கள், லிவ்-இன் இணைகள் போட்டுக்கொள்ள வேண்டிய சேர்ந்து வாழும் உடன்படிக்கை (Cohabitation agreement), பெண் களின் நிலைக்குத் தனிப்பட்ட ஆண் மட்டும்தான் காரணமா?

அனைத்தையும் விகடன் இணைய தளத்தில் ஆழமாகவும் அர்த்தத்துடனும் அலசியிருக்கிறார் எழுத்தாளர் கொற்றவை. முழுமையாகப் படிக்க இந்த லிங்க்கில் https://bit.ly/3BOTFP7 க்ளிக் செய்யுங்கள்.