Published:Updated:

பெண்கள் மீதான ஜட்ஜ்மென்ட்கள்... நீங்கள் என்ன செய்வீர்கள் தோழிகளே? #StopJudgingWomen #AvalVikatanPoll

#StopJudgingWomen
News
#StopJudgingWomen

அக்கறை என்ற பெயரில் பிற்போக்குத்தனமான சமூக மதிப்பீடுகளால் பெண்களை இந்தச் சமுதாயம் எப்போதும் ஜட்ஜ் செய்துகொண்டுதானே இருக்கிறது?

பெண்கள் தங்கள் அடிமை நிலையை உடைத்து, ஆண்களுக்கு துளியளவும் குறைச்சலானவர்கள் இல்லை என்பதை எல்லாத் துறைகளிலும் நிரூபித்தாலும், அன்றாடம் எத்தனையோ புறக்கணிப்புகள், கேலிகள், அடக்குமுறைகள் இன்னும் பெண் உலகத்தை ஒரு சமூகவட்டத்துக்குள் அடக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

StopJudgingWomen
StopJudgingWomen

பெண்கள் நிலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், `எங்க வீட்டுப் பொண்ணை நாங்க படிக்க வெச்சுட்டோம், வேலைக்கு போறாங்க, மாடர்ன் டிரெஸ் போட்டுக்குறாங்க... இதெல்லாம் பெண்களுக்கான சுதந்திரம் இல்லையா? என்னதான் இந்தப் பெண்களின் பிரச்னையோ?' என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கும். சிலருக்கு எரிச்சலாகவும்கூட இருக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படிப்பும் வேலையும் மட்டும்தான் பெண் உலகத்தின் சுதந்திரமா?

அதையும்கூட அவர்களின் விருப்பப்படி தேர்வு செய்ய முழு வாய்ப்பு இருக்கிறதா?

முழு விடுதலை கொடுக்காமல் சுதந்திரம் பற்றிப் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

குறிப்பாக, அவள் இரண்டடி முன்னுக்குச் சென்றாலும், `இதெல்லாம் செஞ்சா நீ நல்ல பொண்ணு இல்ல' என்று அவள் கால்களைச் சுற்றும் ஜட்ஜ்மென்ட் சங்கிலிகளிலிருந்து எப்போதுதான் அவளுக்கு விடுதலை?

அக்கறை என்ற பெயரில் பிற்போக்குத்தனமான சமூக மதிப்பீடுகளால் பெண்களை இந்தச் சமுதாயம் எப்போதும் ஜட்ஜ் செய்துகொண்டுதானே இருக்கிறது? ஜட்ஜ்மென்ட் பெண்ணினத்துக்கு எதிரான அடக்குமுறை மட்டுமல்ல. அது அநியாயமும்கூட. இதை எப்போது சமூகம் உணர்ந்து கொள்ளும் என்பது பெண் உலகத்தின் எதிர்பார்ப்பு.

பெண்கள் உரிமைகள்
பெண்கள் உரிமைகள்

- `25 வயசாகியும் கல்யாணத்துக்கு நோ சொல்ற, ஏதோ காதல் பிரச்னை இருக்கு',

- `உன் குழந்தை ஒல்லியா இருக்கு, நீ நல்ல அம்மா இல்லை',

- `சோஷியல் மீடியால போட்டோஸ் போடுற, நீ வீட்டுக்கு அடங்காத பொண்ணு',

- `சத்தமா பேசுற, சிரிக்கிற, நீ குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்ல,

- `ஆபீஸ்ல இத்தனை ஆண் நண்பர்களா, உன் கேரக்டர் சரி இருக்காது...'

இப்படி எத்தனையோ மதிப்பீடுகளைப் பெண்கள் அன்றாடம் சந்திக்க வேண்டிதான் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படியான மதிப்பீடுகள் உறுதியான பெண்களையும் ஏதோ ஒரு வகையில் உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மதிப்பீடுகளைக் கடந்த பெண்களும் இருக்கிறார்கள், மதிப்பீடுகளுக்கு பயந்து கனவுகளை தொலைத்த பெண்களும் இருக்கிறார்கள்.

பெண் உலகம் அடுத்தகட்ட நகர்வுகளுக்குச் செல்ல, மதிப்பீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. இது தொடர்பான அலசல் கட்டுரை, வெளிவரவிருக்கும் அவள் விகடன் மகளிர் தின சிறப்பிதழில் இடம்பெற உள்ளது. அதில் உங்களின் கருத்தையும் இணைக்க, கீழே உள்ள கேள்விக்கு விடையளியுங்கள்.

பெண் உலகின் வளர்ச்சியை சமூக மதிப்பீடுகள் எந்தளவுக்கு நிறுத்துகின்றன, தடுக்கின்றன, பின்னிழுக்கின்றன... பேசுவோம்!

#StopJudgingWomen
#StopJudgingWomen