குழந்தையைப் பெற்றெடுப்பது என்னவோ பெண்கள்தான். ஆனால் அது குறித்து முடிவெடுப்பதற்கான உரிமை பெண்களுக்கு வழங்கப்படுவதே இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது, எத்தனை குழந்தைகள் என்ற முடிவெடுப்பது, குழந்தை வேண்டாம் என்ற முடிவு... இவற்றையெல்லாம் எத்தனை பெண்களால் சுயமாக முடிவெடுக்க முடிகிறது? அவ்வளவு ஏன், ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளியைக் கூட பெண்களால் தீர்மானிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், பெண்களுக்குக் கருப்பை உரிமை வேண்டும், குழந்தை பெறுவது குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கீழே இருக்கும் படிவத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். சர்வே முடிவுகள் வரும் அவள் விகடன் இதழில் வெளியாகும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism