Published:Updated:

Aval Vikatan Poll: `அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு!' - உங்கள் கருத்து என்ன?

woman (Representational image) ( Image by RAEng_Publications from Pixabay )

அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இதுவரை 30 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறது தி.மு.க அரசு. இதுகுறித்த அறிவிப்பை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார். ``அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்பட்டு வந்த சூழலில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை வரவேற்றாலும் 50 சதவிகிதமாக உயர்த்தாதது வருத்தமளிக்கிறது என்ற கருத்தையும் ஒருசிலர் முன்வைக்கின்றனர். `சரி சமமான வாய்ப்பு வழங்கப்படும்போதுதானே பெண்களுக்கான அங்கீகாரம் சமமாகக் கிடைக்கும்? இந்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் காத்திருக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism