"சில வாரங்களுக்கு முன்பு என் மகனுடைய கல்விக் கடனுக்காகத் தனியார் வங்கியொன்றை அணுகியிருந்தேன். தேவையான தகவல்களைக் கேட்டறிந்தவர்கள், நான் சிங்கிள் மதர் என்று தெரிந்ததும், 'உங்களுக்கு கடன் வழங்க வேண்டுமெனில், ஓர் ஆண் கியாரன்டி கையெழுத்திட வேண்டும்' என்று கூறுகின்றனர். மூன்றாவது நபர் ஒருவர் கியாரன்டி கையெழுத்திட வேண்டும் என்று சொன்னால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கணவர் இல்லாத அல்லது கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கு கடன் வழங்க ஓர் ஆண்தான் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்துவது அநியாயம் அல்லவா? என் மகன் படிப்புக்காக நான் வாங்குகிற கடனுக்கு நான்தானே பொறுப்பு. அந்தக் கடனை நான்தானே திருப்பிச் செலுத்தப் போகிறேன். அப்படியிருக்க, ஆணொருவர் கியாரன்டி கையொப்பமிட வேண்டுமென்பது எந்த வகையில் சரி?"
- சில தினங்களுக்கு முன்பு அவள் விகடன் வாசகி ஒருவர் இப்படி ஓர் அதிர்ச்சிப் புகாரை நமக்கு அனுப்பியிருந்தார். அதனடிப்படையில் பல்வேறு வங்கிகளில் விசாரித்தபோது, 'அப்படியான நடைமுறை எதுவும் இல்லை' என்று அடித்துச் சொல்கின்றனர். ஆனால், இப்படியான புகார்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism