பிரீமியம் ஸ்டோரி

பரமக்குடி, நண்டுபட்டி கிராமத் தைச் சேர்ந்த 23 வயதுப் பெண் கௌசல்யா, கணவரு டன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். வேறொரு பிரிவைச் சேர்ந்த ஒருவருடன் கௌசல்யா பழகி வந்ததால், அவர் பெற்றோரே அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பெண்களின் மணவாழ்க்கை விருப்பு, வெறுப்புகளில் குடும்ப கௌரவம் முதல் சாதி வரை அவர்களின் உயிரை எடுப்பதுவரை செல்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த கமென்டுகள் இங்கே...

Anbu Bala

நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களிலும் அது குறித்த விழிப்புணர்வு சென்று சேர வேண்டும்.

Gomathi Sivayam

மகள்களின் மணமுறிவுக்கான நியாயமான காரணத்தைப் பெற்றோர் ஏற்று, முறைப்படி விவாகரத்துப் பெற்றுக்கொடுத்து, இரண்டாம் மணவாழ்க்கை பற்றிய மகளின் முடிவில் சம்பந்தப்பட்ட ஆணின் குணம் திருப்தியாக இருந்தால், சாதி முதல் சமுதாயம் வரை அனைத்தையும் புறந்தள்ளி பெற்றோர் இருவரையும் வாழவைக்க வேண்டும்.

Mahalakshmi Subramanian

உங்கள் முன் சாதிப் பெருமை பேசும் உங்கள் சுய சாதிக்காரர்கள், முதுகுக்குப் பின் உங்களைப் புறம் பேச, விமர்சிக்கத்தான் போகிறார்கள். இவர்களுக்காகப் பெற்ற பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் பெற்றோரை என்னவென்று சொல்வது?

#Avaludan
#Avaludan

Srividhya Prasath

ஏற்கெனவே ‘வாழ்க்கை இழந்த’ மகள், ஊரின் ஒழுக்க வரையறைகள், சாதி எல்லாம் சேர்ந்து அந்தப் பெற்றோரை மனநோயாளி ஆக்கியுள்ளதில் சமூகத்துக்கும் பங்குண்டு.

Saroja Balasubramanian

பெற்றோர் மூலமாக வந்தவர்கள்தாம் பிள்ளைகளே தவிர, பெற்றோருக்குச் சொந்தமானவர்களோ, அடிமைகளோ இல்லை.

Janaki Paranthaman

நகர்ப்புறங்களில் இளைஞர்களுக்குக் கல்விக்காக,

வேலை வாய்ப்புக்காக நடத்தப்படும் ‘வழிகாட்டி’ கூட்டங்கள் போல், கிராமங்களில் கல்வி, சாதி ஒழிப்பு, மறுமணம், பெண்கள் உரிமைகள் குறித்த சமுதாய விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

Rethina Kumar

அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழட்டுமே. பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல் ஒதுங்கி விடுங்கள். உறவுத் தேர்வுக்காகப் பெற்றோராலேயே நடத்தப்படும் கொலைகள் பற்றி என்ன சொல்வது?

Selvarani

மகளையே கொலை செய்யும் அளவுக்கு என்ன சாதி வெறி? அவரை காலத்துக்கும் ஒரு ஜடம் மாதிரி வீட்டில் அடைத்து வைக்க வேண்டுமா?

Dhanalakshmi Sridharan

இவ்வுலகில் மதம், இனம், மொழி, சாதி அனைத்தையும்விட மிக முக்கியமானது, முதன்மை யானது... ஓர் உயிர். அதையே எடுத்துவிட்டு எதை நிறுவப் போகிறீர்கள்?

Sampath Kumar

ஆணவக்கொலைகள் பணக்காரக் குடும்பங்களில் நடக்கின்றனவா? ஏழை மக்களுக்கே மீண்டும் மீண்டும் சாதி வெறி ஊட்டப்படுவது ஏன்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு