Published:Updated:

`சிவில் உரிமைகளின் முதல் பெண்மணி' அவதாரத்தில் பார்பி!

கானப்ரியா

கறுப்பினப் பயணிகள் பேருந்தின் முன்புறத்தில் பணம் செலுத்திவிட்டு, கீழே இறங்கி, பிறகு பின்புறமாக ஏறவேண்டும். ஒருவேளை பேருந்து நிறைந்தால், அவர்கள் வெள்ளை இனப் பயணிகளுக்குத் தங்களின் இடங்களை விட்டுக்கொடுக்கவேண்டும்.

Barbie Dolls
Barbie Dolls

உலகத்தையே தன் வசம் கட்டிப்போட்ட ஒற்றை பொம்பை என்றால், அது நிச்சயம் 'பார்பி' பொம்மைதான். குழந்தைகள் உலகில் இதற்கென்று தனி இடம் எப்போதும் உண்டு. இந்த ஒல்லி பெல்லி பொம்மை உலகளவில் பிரபலமானதுக்கு முதன்மை காரணம், ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றபடி அதன் ஒப்பனையை மாற்றி, கலாசாரத்தையும் இணைத்ததுதான்.

Barbie
Barbie

ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு விதமான பார்பி பொம்மையை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது சிவில் உரிமைகளின் முன்னோடியான ரோசா பார்க்ஸின் வடிவில் களமிறங்கியிருக்கிறது பார்பி.

பத்திரிகையாளர், விண்வெளி வீராங்கனை, அரசியல்வாதி, விமான ஓட்டி, மருத்துவர் உள்ளிட்ட பல துறைகளின் சீருடைகளை அணிவித்துப் பல புதிய பரிமாணங்களை இடைவிடாது கொடுத்துக்கொண்டிருக்கும் பார்பியின் சமீபத்திய அவதாரம் சற்று வித்தியாசமானது. 'சிவில் உரிமைகளின் முதல் பெண்மணி' என்று போற்றப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ரோசா பாரக்ஸ், மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பில் முக்கிய பங்கு வகித்த ஓர் அமெரிக்க ஆர்வலர்.

Rosa Parks
Rosa Parks

1955-ம் ஆண்டு, பேருந்தில் வெள்ளை இன அமெரிக்க நபர் ஒருவருக்கு பார்க்ஸ் அமர்ந்திருந்த இடத்தை விட்டுக்கொடுக்க மறுத்த சம்பவம், புதிய புரட்சியைத் தூண்டியது. இதைத் தொடர்ந்து, மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் கறுப்பினத்தவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த பார்க்ஸை கைதும் செய்தனர்.

``இந்திய கைத்தறியின் பெருமையை உலகம் முழுதும்  சேர்த்தது `மகாநடி'!'' - ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷா

அமெரிக்காவில் ஒரு காலத்தில், எழுதப்படாத விநோதமான விதி ஒன்று பின்பற்றப்பட்டது. கறுப்பினப் பயணிகள் பேருந்தின் முன்புறத்தில் பணம் செலுத்திவிட்டு, கீழே இறங்கி, பிறகு பின்புறமாக ஏறவேண்டும். ஒருவேளை பேருந்து நிறைந்தால், அவர்கள் வெள்ளை இனப் பயணிகளுக்குத் தங்களின் இடங்களை விட்டுக்கொடுக்கவேண்டும்.

Rosa Parks Barbie
Rosa Parks Barbie

இந்த மனித நேயமற்ற செயலை எதிர்த்து துணிச்சலாகப் போராடியதற்காக, அமெரிக்காவின் மிக உயர்ந்த சிவில் விருதான Congressional தங்கப் பதக்கம், 1999-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இந்தத் துணிச்சல் பெண்மணியை மையமாக வைத்துத்தான் தற்போது பார்பி பொம்மை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.