Published:Updated:

`அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திருப்பித் தாருங்கள்' - பில்கிஸ் பானோ

பில்கிஸ் பானு

நியாயமற்ற இத்தகைய முடிவை எடுக்கும்போது, ஒருவரும் என்னுடைய பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விசாரிக்கவில்லை. அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை தனக்குத் திருப்பித் தர வேண்டும் என தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் பானோ.

`அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திருப்பித் தாருங்கள்' - பில்கிஸ் பானோ

நியாயமற்ற இத்தகைய முடிவை எடுக்கும்போது, ஒருவரும் என்னுடைய பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விசாரிக்கவில்லை. அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை தனக்குத் திருப்பித் தர வேண்டும் என தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் பானோ.

Published:Updated:
பில்கிஸ் பானு

கோத்ரா கலவரத்தின்போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தண்டனைக் காலம் முடியும் முன்பே, இவர்கள் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். சாதனை செய்த மனிதர்களைப்போல இவர்களின் விடுதலையின்போது ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்
விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்

இந்நிலையில் குஜராத் மாநில அரசிடம், அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை தனக்குத் திருப்பித் தர வேண்டும் எனத் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் பானோ.

அதில், ``என்னுடைய குடும்பத்தையும், என்னையும் சிதைத்து, என்னுடைய மூன்று வயதுக் குழந்தையை என்னிடமிருந்து பறித்துக்கொண்ட 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் எனக் கேட்டதும், இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 15-ம் தேதி, கடந்த 20 வருடப் பேரதிர்ச்சி என்னைத் தாக்கியது. அரசின் முடிவு என்னை மரத்துப் போகச் செய்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எந்தப் பெண்ணுக்கான நீதி இப்படி முடிவுறும். நான் நம் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களை நம்பினேன். இந்த அமைப்பை நம்பினேன்... இந்தப் பேரதிர்ச்சியோடே மெதுவாக வாழக் கற்றுக் கொண்டேன். குற்றவாளிகளின் விடுதலை என் அமைதியைப் பறித்ததோடு, நீதியின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அசைத்துவிட்டது.

என்னுடைய துக்கமும், அசைந்தாடிக்கொண்டிருக்கிற நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது.

பில்கிஸ் பானோ - Bilkis Bano
பில்கிஸ் பானோ - Bilkis Bano

நியாயமற்ற இத்தகைய முடிவை எடுக்கும்போது, ஒருவரும் என்னுடைய பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விசாரிக்க வில்லை. அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திருப்பித் தாருங்கள். தயவுகூர்ந்து, நானும் என்னுடைய குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்” என குஜராத் அரசிடம் பானோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.