Published:Updated:

பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா; ஒப்புதல் அளித்த அமைச்சரவை!

பெண்ணின் திருமண வயது 21
News
பெண்ணின் திருமண வயது 21

``இந்த அரசாங்கம் மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்குச் சரியான வயதில் திருமணம் செய்வது அவசியம்'' என்று 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது மோடி குறிப்பிட்டிருந்தார்.

பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்ற வருடம் சுதந்திர தின உரையின்போது, பெண்களுக்கான திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது தொடர்பான திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது அவர், ``இந்த அரசாங்கம் மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்குச் சரியான வயதில் திருமணம் செய்வது அவசியம்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன்பிறகு, திருமண வயதை உயர்த்தும் இந்தத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதற்கென கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட பணிக்குழு, பெண் தன்னுடைய முதல் கர்ப்பத்தின்போது குறைந்தபட்சம் 21 வயதில் இருக்க வேண்டுமென வலியுறுத்தியது.

Marriage
Marriage
Pixabay

இந்த நிலையில், இன்று பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தவிர, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.