Published:Updated:

`முதல்வர் வழங்கிய காசோலை செல்லாது!' - மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதிர்ச்சி

சுய உதவிக் குழு
News
சுய உதவிக் குழு

``முதல்வர் கொடுத்த காசோலையை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்றபோது எங்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் காசோலை முதல்வர் நிகழ்ச்சிக்காக பெயரளவில் வழங்கப்பட்டது. அது செல்லாது. அதை மகளிர் குழுவின் சி.இ.ஓ தமிழரசியிடமே கொடுத்துவிடுங்கள்."

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கிய காசோலையைப் பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடனுக்கான காசோலைகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிகழ்வில் பங்கேற்ற திருவள்ளூரைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் உள்ளிட்ட 14 பெண்கள் அடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விழா மேடையில் முதல்வர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

ஆனால் அந்தக் காசோலையை வங்கி ஏற்கவில்லை. இதுதொடர்பாக பேசியிருந்த பிரியங்கா, ``முதல்வர் கொடுத்த காசோலையை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்றபோது எங்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்தக் காசோலை முதல்வர் நிகழ்ச்சிக்காக பெயரளவில் வழங்கப்பட்டது. அது செல்லாது. அதை மகளிர் குழுவின் சி.இ.ஓ தமிழரசியிடமே கொடுத்துவிடுங்கள்.

Cheque (Representational Image)
Cheque (Representational Image)

அதை அவரிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்வோம் என அந்த வங்கி அதிகாரி கூறினார். அந்தக் காசோலை பொய்யானது என்றால், அந்தக் காசோலையில் குறிப்பிட்ட நிதி என்னவாயிற்று" என பிரியங்கா ஊடகங்களிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பிரியங்காவிடம் பேசினோம். ``வீடியோ வெளியான பிறகு இச்சம்பவத்தை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எங்கள் சுய உதவிக்குழு பெண்களுக்கு உடனடியாக காசோலை பிரச்னையை சரிசெய்து கடனுதவி பெற வழிவகை செய்தனர். காசோலை கொடுத்ததோடு இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அது முறையாக போய்ச் சேர்ந்ததா என்று அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் எங்களுக்கு இந்தப் பிரச்னையே ஏற்பட்டிருக்காது" என்றார்.

மகளிர் சுய உதவிக்குழு
மகளிர் சுய உதவிக்குழு

பிரியங்கா போன்ற பெண் பொதுவெளியில் பேசி சமூகவலைதளங்களில் வைரலானதன் காரணமாகவே இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தில் இதுபோன்று அன்றாடம் நடக்கும் குளறுபடிகளுக்கு எப்படித் தீர்வு கிடைக்கும், இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் தீர்வு எட்டியதா என்பது கேள்விக்குறியே!