Published:Updated:

இரு விரல் பரிசோதனை... இந்தியாவின் அவமானம்! #Avaludan

தடை செய்யப்பட்ட பரி சோதனையைச் செய்ததே குற்றம். அது அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இரட்டை அநீதி.

பிரீமியம் ஸ்டோரி

கோவை, இந்திய விமானப் படை நிர்வாகவியல் கல்லூரியில் பெண் விமான அதிகாரி ஒருவர், சக ஆண் அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார். அது குறித்த அவரது புகாரை விசாரிக்கும் நடைமுறையில், விமானப்படை மருத்துவமனையில் அவர் ‘கன்னித்தன்மை பரிசோதனை’ யான இரு விரல் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தியாவில் 2013-ம் ஆண்டே தடைசெய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை, ராணுவ மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ் டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த கமென்ட்கள் இங்கே...

Janaki Paranthaman

இது 21-ம் நூற்றாண்டு தீக்குளிப்பு. சமீபத்தில் அவள் விகடனில் டாக்டர் கமலா செல்வராஜ், கன்னித்தன்மையைத் தீர்மானித்து சான்றிதழ் கொடுப்பது அல்ல கன்னித்திரை யின் வேலை என்று விளக்கிக் கூறியிருக்கிறார். ராணுவ மருத்துவமனை மருத்துவர்களுக்கு அறிவியலும் தெரியவில்லை, அறமும் தெரியவில்லை.

Siva Chandran

தடை செய்யப்பட்ட பரி சோதனையைச் செய்ததே குற்றம். அது அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இரட்டை அநீதி. இந்நிலை யில், இந்திய விமானப் படை வீரரான தன் மீதான இந்தப் பாலியல் குற்றச் சாட்டை ராணுவ நீதி மன்றத்தில்தான் விசா ரிக்க வேண்டும் என்று கோரிக்கை வேறு விடுத்திருக்கிறார் குற்றம் சாட்டப்பட்டவர். பெண்களுக்கான நீதி என்பது எப்போதும் நெடிய போராட்டமாகவே இருக்கிறது.

Avaludan
Avaludan

Sarasvathi Swaminathan

பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் `விக்டிம் பிளேமிங்' (Victim blaming) போக்குக்கு விமான அதிகாரியானாலும் தப்ப முடியாது என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.

Murugaiah Radha

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், ஏற்கெனவே எந்தளவுக்கு மனஉளைச்சலில் இருந்திருப் பார்? அவரை பரிசோதனை என்ற பெயரில் மீண்டும் இப்படி அவமானப்படுத்தலாமா? கொடுக்கப்பட்டது பாலியல் கொடுமை புகார்தானே? அதற்கும் கன்னித் தன்மை பரிசோதனைக்கும் என்ன சம்பந்தம்? ‘நீங்கள் செக்‌ஷுவலி ஆக்டிவ்வா?’ என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுவது கண்டனத்துக்குரியது.

Niyas Abdul

புகார் கொடுத்த பெண்ணுக்குத் தடை செய்யப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னொருபக்கம், குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு தண்டனை கிடைத்துவிடுமா என்ன?

kalaivaniarvind

பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் எல்லாம் அதைப் புகாராகப் பதிவு செய்வதே மிக சொற்பம். அப்படி புகார் அளிப்பவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது, மற்ற பெண்களின் தைரியத்தையும் அது பறித்துக்கொள்கிறது.

குறிப்பு: இதுகுறித்து செப்டம்பர் 30-ம் தேதி தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவிக்க, அக்டோபர் 5-ம் தேதி, ‘இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை’ என்று விமானப் படை தலைமை அதிகாரி தெரிவித்திருக் கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு