Published:Updated:

மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு வழக்கு; இரு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு!

Sexual Harassment (Representational Image)

15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தன் மனைவியுடன் கணவன் உறவுகொள்ளும்போது, அதற்கு மனைவியின் விருப்பம் இல்லை என்றாலும் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என நீதிபதி ராஜீவ் ஷக்தர் தீர்ப்பளித்தார்.

மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவை (Marital rape) சட்டப்படி குற்றமாகக் கருதக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி நீதிபதிகள் இருவர், முரணான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் விருப்பமில்லாமல் கணவன் கட்டாய பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமாக்கப்பட வேண்டும் என சில அமைப்புகள் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன. அதை விசாரித்த ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் இருவரும் முரண்பட்ட இரண்டு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Supreme Court Of India
Supreme Court Of India

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375, பெண்ணின் விருப்பத்துக்கு எதிரான பாலியல் உறவை குற்றம் என்று வரையறுக்கிறது. ஆனால் அதே சட்டப் பிரிவின் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தன் மனைவியுடன் கணவன் உறவுகொள்ளும்போது, அதற்கு மனைவியின் விருப்பம் இல்லை என்றாலும் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று விலக்கு அளிக்கிறது. இந்த சட்டப் பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என நீதிபதி ராஜீவ் ஷக்தர் தீர்ப்பளித்தார். ஆனால் இந்தக் கருத்துடன் முரண்பட்ட நீதிபதி ஹரி சங்கர், 'இதில் எந்தத் தவறும் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் அளித்த இந்த முரண்பட்ட தீர்ப்பினால், மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism