Published:Updated:

`அழகான பெண்களுக்கே அதிக சம்பளத்துடன் வேலை!' - கருத்துக்கு வருத்தம் தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ

Woman Power (Representational Image) ( Pixabay )

’’இங்கிலீஷ் இல்லாமல் தலைகீழாக நின்றாலும் வேலை கிடைக்காது. பெண்களாக இருந்தால் ஹேண்ட்ஸமாக, பியூட்டிஃபுல்லாக இருக்க வேண்டும் என கம்பெனிக்காரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்குதான் கூடுதல் சம்பளமும் கிடைக்குது. இவற்றையெல்லாம் பார்க்கணும்.’’ - எம்.எல்.ஏ காந்திராஜன்

`அழகான பெண்களுக்கே அதிக சம்பளத்துடன் வேலை!' - கருத்துக்கு வருத்தம் தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ

’’இங்கிலீஷ் இல்லாமல் தலைகீழாக நின்றாலும் வேலை கிடைக்காது. பெண்களாக இருந்தால் ஹேண்ட்ஸமாக, பியூட்டிஃபுல்லாக இருக்க வேண்டும் என கம்பெனிக்காரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்குதான் கூடுதல் சம்பளமும் கிடைக்குது. இவற்றையெல்லாம் பார்க்கணும்.’’ - எம்.எல்.ஏ காந்திராஜன்

Published:Updated:
Woman Power (Representational Image) ( Pixabay )

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ப்ளஸ் டூ முடித்த மாணவ - மாணவியருக்கான `கல்லூரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன், `இங்கிலீஷ் சரளமாகப் பேசினால்தான் மல்டி நேஷனல் கம்பெனியில் அதிகமான சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இங்கிலீஷ் இல்லாமல் தலைகீழாக நின்றாலும் வேலை கிடைக்காது. பெண்களாக இருந்தால் ஹேண்ட்ஸமாக, பியூட்டிஃபுல்லாக இருக்க வேண்டும் என கம்பெனிக்காரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்குதான் கூடுதல் சம்பளமும் கிடைக்குது. இவற்றையெல்லாம் பார்க்கணும்’ என்று பேசியிருந்தார்.

நான் முதல்வன் திட்டம் தொடக்கம்
நான் முதல்வன் திட்டம் தொடக்கம்

அழகான பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற எம்.எல்.ஏ-வின் பேச்சு ஏற்புடையது அல்ல என அரங்கத்தில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் எம்.எல்.ஏ-வின் பேச்சு குறித்து கமென்ட் அடித்துக்கொண்டிருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடுமையான கண்டனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக, பா.ஜ.க மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அழகு என்பது நிரந்தரமானது இல்லை. படிப்பும் திறமையும்தான் பெண்களுக்கு வேலை வாய்ப்பையும், அதிக சம்பளத்தையும் பெற்றுத்தருகிறது. எனவே, எம்.எல்.ஏ காந்திராஜன் பெண் சமூகத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதுகுறித்து விளக்கம் பெற எம்.எல்.ஏ காந்திராஜனை தொடர்புகொள்ள முயன்றோம். அவர் தரப்பில் இருந்து இதுதொடர்பாக எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நான் பேசிய வார்த்தைகள் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற ஆளுமைத் திறனை வளர்த்து தங்களை ஈர்க்கின்ற வகையில் ஆண்களும் பெண்களும் இருப்பது அவசியம் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். என் பேச்சு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னால் முதல்வருக்கோ, அரசுக்கோ எந்த அவப்பெயரும் ஏற்படக் கூடாது என்ற நோக்கோடு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து குழந்தைகள், பெண்களுக்காக இயங்கும் ’சோகோ’ அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதியிடம் பேசினோம்.

``பெண்கள் அழகின் அடிப்படையில்தான் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள் என்ற கூற்று தவறானது. எத்தனையோ பெண்கள் திறமையின் அடிப்படையில் நல்ல நிலைக்கு வந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அழகு இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மனநிலையை பெண்களிடையே ஏற்படுத்தக் கூடாது.

செல்வகோமதி
செல்வகோமதி

ஏற்கெனவே சாதனை படைத்துள்ள பெண்களின் வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும். ஒரு திறமை மட்டுமன்றி பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். அழகு முக்கியமென்று நினைத்திருந்தால் வரலாற்றில் இடம் பிடித்த எத்தனையோ பெயர்கள் இல்லாமல் போயிருக்கும். இதே திண்டுக்கல்லில்தான் பாலபாரதி போன்ற போராளிகளும் இருக்கின்றனர்.

நாட்டில் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். நடந்த முடிந்த உள்ளாட்ச்சி தேர்தலில் பெண்களுக்குரிய இடம் முறையாக ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் தன்னிச்சையாக இயங்கவும் வழிவகை செய்ய வேண்டும். அதற்குரிய பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன்
வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன்

இதேபோல தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், சட்டவிதிகளுக்கு உள்பட்டு ஊதியம், வேலைநேரம், விடுமுறை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்'' என்றார்.