Published:Updated:

சிறந்த 50 சிந்தனையாளர்கள்... கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர்

ஷைலஜா டீச்சர்
பிரீமியம் ஸ்டோரி
ஷைலஜா டீச்சர்

உலகளவில் #1...

சிறந்த 50 சிந்தனையாளர்கள்... கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர்

உலகளவில் #1...

Published:Updated:
ஷைலஜா டீச்சர்
பிரீமியம் ஸ்டோரி
ஷைலஜா டீச்சர்

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு, உலக அளவில் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் வெளியாகும் முன்னணி இதழான ‘பிராஸ்பெக்ட் (Prospect)’, ‘உலகின் சிறந்த 50 சிந்தனையாளர்கள் 2020’ பட்டியலில் முதல் பெயராக அறிவித்திருப்பது... கே.கே.ஷைலஜா!

ஷைலஜா டீச்சர்
ஷைலஜா டீச்சர்

கே.கே.ஷைலஜாவைத் தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்திருப்பவர், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன். ‘கிறிஸ்ட்சர்ச் மசூதி படுகொலை நிகழ்வுக்குப் பின்னர், அந்நாட்டில் ஜெசிந்தாவின் தலைமை சிறந்த முடிவுகளுக்கு வழிவகுத்தது’ என்று அவரை பாராட்டியுள்ளது ‘பிராஸ்பெக்ட்’ இதழ். தொடர்ந்து பங்களாதேஷ் கட்டடக் கலைஞர் மெரினா தபஸும், மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறார். இவர், காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகள் உயர்ந்துகொண்டே இருப்பதிலிருந்து மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தரைதளத்திலிருந்து உயரமாக எழுப்பப்படும் ஸ்டில்ட் (Stilt) வீடுகளை வடிவமைத்ததற்காகப் பாராட்டப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இந்தப் பட்டியலில் நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, பல முறை புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் என 26 பெண்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். ‘பிராஸ்பெக்ட்’ பத்திரிகை, உலகமெங்கும் உள்ள கலைஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், தத்துவவியலாளர்கள் எனச் ‘சிறந்த 50 சிந்தனையாளர்கள் 2020’ கௌரவத்துக்கு உரியவர்களை, வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர் குழுவின் கருத்தின் அடிப்படையிலும், இறுதிப்பட்டியலை வாசகர்கள் ஓட்டுகளின் மூலமும் தேர்வு செய்துள்ளது. 20,000-க்கும் மேல் பதிவான வாக்குகளில், இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது முதலிடப் பெருமை. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்தியர் கே.கே.ஷைலஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டு, இந்தியாவில் முதல் மாநிலமாகக் கேரளாவில் பரவியது. முதல் நாள் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாகக் கையாளத் தொடங்கினார், கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா. ‘பிராஸ்பெக்ட்’ இதழ், ‘சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸின் தவிர்க்க முடியாத வருகையை கே.கே.ஷைலஜா துல்லியமாக முன்னறிவித்தது மட்டுமல்லாமல், அதன் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, ‘சோதனை, கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல்’ என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வலியுறுத்தலை சிறப்பாகச் செயல்படுத்தினார்’ என்று பாராட்டியுள்ளது.

‘ஷைலஜா டீச்சர்’ எனப் பிரியமாக அழைக்கப்படும் கே.கே.ஷைலஜா, அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஆசிரியையாகப் பணியாற்றியவர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற செய்தித்தாள் ‘தி கார்டியன்’ இவரை ‘கொரோனா வைரஸ் ஸ்லேயர்’, ‘ராக் ஸ்டார் சுகாதார அமைச்சர்’ என்று பாராட்டியது.

வரலாறு தொடரட்டும் டீச்சர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism