Published:Updated:

`பெண் எஸ்.ஐ-க்கு டிஐஜி பாலியல் தொல்லை கொடுத்தார்!' - முன்னாள் ஐபிஎஸ் ஸ்ரீலேகா

முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்

``ஆண் போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ள பெண் அதிகாரிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள். இப்போது ஓய்வு பெற்றுள்ள ஒரு டி.ஐ.ஜி போலீஸ் கிளப்புக்கு வரும்போதெல்லாம் ஒரு பெண் எஸ்.ஐ-யைத் தனது அறைக்கு அழைப்பார்."

`பெண் எஸ்.ஐ-க்கு டிஐஜி பாலியல் தொல்லை கொடுத்தார்!' - முன்னாள் ஐபிஎஸ் ஸ்ரீலேகா

``ஆண் போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ள பெண் அதிகாரிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள். இப்போது ஓய்வு பெற்றுள்ள ஒரு டி.ஐ.ஜி போலீஸ் கிளப்புக்கு வரும்போதெல்லாம் ஒரு பெண் எஸ்.ஐ-யைத் தனது அறைக்கு அழைப்பார்."

Published:Updated:
முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்

கேரள காவல்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் முன்னாள் டி.ஐ.ஜி ஸ்ரீலேகா. சிறைத்துறை டி.ஜி.பி, தீயணைப்புத்துறை டி.ஜி.பி எனப் பல முக்கிய பதவிகளை அலங்கரித்தவர். 2020-ல் ஓய்வுபெற்ற ஸ்ரீலேகா, கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு மலையாள தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு கூறிய இரண்டு கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நேர்காணலில் ஆண் போலீஸ் அரிகாரிகள் பற்றிக் கூறிய ஸ்ரீலேகா, ``ஆண் போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ள பெண் அதிகாரிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள். இப்போது ஓய்வு பெற்றுள்ள ஒரு டி.ஐ.ஜி போலீஸ் கிளப்புக்கு வரும்போதெல்லாம் ஒரு பெண் எஸ்.ஐ-யைத் தனது அறைக்கு அழைப்பார். அரசியல் பின்புலம் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளைக்கூட திட்டுவார்கள்" என்பது போன்ற கருத்துகளைத் தெரிவித்தார்.

முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா
முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஆலுவா சப் ஜெயிலில் இருந்த சமயத்தில் அவருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு ஏற்கெனவே இருந்து வருகிறது. அந்த சமயத்தில் சிறைத்துறை டி.ஜி.பி-யாக ஸ்ரீலேகா இருந்தார். இந்தக் குற்றச்சாட்டு பற்றி ஸ்ரீலேகாவிடம் கேட்டார் தனியார் டிவி நெறியாளர். அதற்கு, ``திலீப்க்கு சகல வசதிகளும் சிறையில் செய்துகொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து நான் ஆலுவா சிறையில் சென்று பார்த்தபோது கண்ட காட்சிகள் இதயத்தை நொறுக்குவதாக இருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று, நான்கு கைதிகளுடன் தரையில் கிடந்தார் திலீப். அப்போது குளிரில் நடுங்கினார். அவர் சிறைக் கதவு கம்பியைப் பிடித்து எழுந்திருக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. திரையில் பார்த்த திலீப்பா இது எனத் தோன்றியது. இதை அடுத்துதான் அவரை நான் எழுப்பி, சூப்பரின்டென்டன்ட் அறையில் இருத்தினேன். ஒரு இளநீர் கொடுத்தேன். இரண்டு பாயும், போர்வையும் வழங்கவும், சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தேன். சாதாரண கைதியாக இருந்தாலும் நான் இதைச் செய்திருப்பேன்" எனக் கூறியிருந்தார்.

சி.ஆர்.பிஜூ
சி.ஆர்.பிஜூ

இந்த நிலையில் முன்னாள் டி.ஐ.ஜி ஒருவர் பெண் எஸ்.ஐ-யை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா கூறியிருப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் ஆபீசர்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் சி.ஆர்.பிஜூ தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில், ``காவல் துறையில் உள்ள பெண்களுக்குப் பாலியல் தொல்லை உள்ளதாக முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா தெரிவித்திருக்கிறார்.

போலீஸ் பணியில் உள்ள பெண்களின் சுய மரியாதையைக் குலைக்கும் விதமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். இரவும் பகலும் பணி செய்யும் காவலர்களின் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக அவரது கருத்து அமைந்துள்ளது. உயர் அதிகாரியாக இருந்த டி.ஜி.பி ஸ்ரீலேகா ஏன் முன்னாள் டி.ஐ.ஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வீஸில் இருக்கும்போது எதுவும் செய்யாமல் ஓய்வுபெற்ற பிறகு, எல்லைகடந்து பேசக்கூடாது" எனவும் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

முன்னாள் பெண் டி.ஜி.பி கூறிய கருத்துகள் கேரளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism