Published:Updated:

'பாலூட்டும் அறை இல்லாத அவல நிலை மாறுமா?' டிரெண்டிங்கில் நேஹா துபியாவின் #FreedomToFeed ஹேஷ்டேக்!

"ஃப்ரீடம் டு ஃபீட்' என்ற ஹேஷ்டேக்குடன் பாலூட்டுவது தொடர்பான இணையதள பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.

நேகா துபியா
நேகா துபியா ( instagram )

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நேஹா துபியா. தன் குழந்தை மொஹிருக்கு விமானத்தின் கழிப்பறையில் அமர்ந்து பாலூட்டியதாக தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தாய்ப்பால் புகட்டுவது குறித்த விழிப்புணர்வை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

நேகா துபியா
நேகா துபியா
instagram

பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நேஹா துபியா. பேடி என்ற நடிகரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த ஆண்டு மெஹர் என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பேற்றுக்குப் பின் அதிக உடல் எடையுடன் இருந்த நேஹா துபியா, பிரசவத்துக்குப் பின் பெண்களின் உடல் எடை குறித்த சில விழிப்புணர்வு பதிவுகளைத் தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் உலக தாய்ப்பால் வாரதுக்காக, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "ஃப்ரீடம் டு ஃபீட்' என்ற ஹேஷ்டேக்குடன் பாலூட்டுவது தொடர்பான இணையதள பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளார் நேஹா. தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, பொது இடங்களில் பாலூட்டும் அறை என்ற ஒரு தனி இடம் அவசியம் இருக்க வேண்டும். இன்றைய பொருளாதார சூழலில் குழந்தை பிறந்த சில மாதங்களிலே தாய்மார்கள் பணிக்குத் திரும்ப வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, எல்லா பொது இடங்களிலும் பாலூட்டும் அறை அவசியமாகிறது. பாலூட்டும் அறை இல்லாததால் விமானத்தில் பயணித்தபோது விமானத்தின் கழிப்பறையில் அமர்ந்து என் குழந்தைக்குப் பாலூட்டினேன். பாலூட்ட கழிப்பறையை அதிக நேரம் பயன்படுத்தியதால் அங்கு இருந்த சக பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் "என்னுடைய அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. என் குழந்தையும் என்னுடன் அழைத்துச் சென்று இருந்தேன். குழந்தை பசிக்கு அழுத நேரம், ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலூட்டுவதற்கு என்று காற்றோட்டமான தனி அறை எங்குமே இல்லை. கடைசியில் மரத்தடியில் அமர்ந்து பாலூட்டினேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

நேகா துபியா
நேகா துபியா
instagram

பொது இடங்களில் தனி பாலூட்டும் அறை அவசியம் வேண்டுமென்றாலும் ஆண்களின் மனப்பான்மையும் மாற வேண்டும். ஒரு பெண் தன் குழந்தைக்கு எங்கு, எப்போது பாலூட்ட விரும்புகிறாளோ அதற்கு அவளுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்" என்று பதிவிட்டு தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதற்குப் பெண்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.