மதுரை, செக்கானூரணி அருகே நடந்த அந்தச் சம்பவம், மனித குலத்தை மீண்டும் ஒருமுறை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது.

பிறந்து 33 நாள்களே ஆன பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொன்று புதைத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த வைரமுருகன் - சவுமியா இருவரும் இப்போது சிறையில் இருக்க, அவர்களைப் போய் பார்க்கவோ, அவர்களுக்காக அனுதாபப்படவோ ஊரில் யாரும் இல்லை.

வைரமுருகன், பழக்கடையில் கூலி வேலை செய்கிறார். கணவரின் வருமானம் போதாததால், சவுமியாவும் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

விவசாய நிலம் இருந்தும் பயிர் செய்ய முடியாத அளவுக்கு வறுமை வாட்டிய நிலையில்தான் இரண்டாவதாக கர்ப்பமுற்றார் சவுமியா. குழந்தை பிறந்ததும் ‘ரெண்டாவதும் பொம்பளைப் புள்ளையா... எப்படி வளர்த்து ஆளாக்கி சீர்செனத்தியோட கட்டிக் கொடுப்பே...’ என்று தங்கள் பங்குக்கு உறவினர்கள் பதற்றத்தை உருவாக்க... பெற்றவர்களே கொலைகாரர்களாகிப் போனார்கள்.

அறியாமை மற்றும் வறுமை காரணமாக முப்பது வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் குறிப்பாக மதுரை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை என்பது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. இதைத் தடுக்கும் விதமாகவே, 1992-ல் `தொட்டில் குழந்தை' திட்டத்தை உருவாக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அரசும் தொண்டு நிறுவனங்களும் தீவிரமாக பிரசாரம் செய்ததன் விளைவாக இந்த வழக்கம் மறைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச்சூழலில் இப்போது நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“அவசரப்பட்டு இப்படியொரு காரியத்தை செஞ்சிட்டு இப்போ ஜெயிலுக்குப் போயிட்டாக. அவுக செஞ்சது தப்புதான், குத்தம்தான். ஆனா, இப்படிச் செய்ய என்ன காரணம்னு அரசாங்கம் யோசிக்கணும். இன்னும் எங்க ஊர்ப்பக்கம் பொம்பளப் புள்ளைகளை சுமையாத்தான் பாக்குறாக. ப்ளஸ் டூ முடிச்சவுடனே கல்யாணம் பண்ணிக்கொடுத்திடணும். அதுக்கு வரதட்சணை, சீர்னு பல லட்சத்துக்குக் கடன் வாங்கி, அந்தக் கடனை கழிக்கவே வாழ்க்கை முழுசும் உழைக்கிறாங்க பெத்தவங்க. எங்க நிலைமையும் கடன்லதான் கழியுது. பொண்ணோட கல்யாண கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கி, வட்டியா கட்டிட்டு இருக்கோம். பொண்ணை உசுராத்தான் வளர்க்கிறோம். சரியான வேலை அமையாததும் வறுமையும்தான் இப்படிச் சிந்திக்க வைக்குது’’ என்று ஆதங்கப்படுகிறார், சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் சுந்தரி.

``புள்ளைய வளர்க்க முடியலைனா, தொட்டில் குழந்தை திட்டத்துல சேர்த்துடலாம்ல. இப்ப பாருங்க அவுக வாழ்க்கையும் போயி, எங்க ஊருக்குக் கெட்ட பேரும் வந்து சேர்ந்திடுச்சு’ என்கிறார் சாமூண்டீஸ்வரி.

``மிக மோசமான சம்பவம் இது. சில வருடங்களுக்கு முன் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் 7-வது மாதத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப் பட்ட பெண் மரணமடைந்தார். நாங்கள் இது தொடர்பா அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்ததில், பெண் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து சுயசார்புள்ளவர்களாக ஆக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களையே சந்தித்தோம். அப்படி இருக்கும்போது, இந்தச் சம்பவம் எங்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. இதுபோன்ற கொடுமைகளுக்கெல்லாம் அடிப்படை வரதட்சணை கொடுமையும், பெண் குழந்தைகள் வளர்ப்பது பற்றிய அறியாமையும்தான். அரசு நிறுவனங்கள் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்’’ என்கிறார் மனிதஉரிமை வழக்கறிஞர் செல்வகோமதி.

``இது மிகப்பெரிய குற்றம் என்று தெரிந்தும் அதைச் செய்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர். அறியாமையும் இயலாமையுமே இதற்குக் காரணம். இனிமேல் இதுபோல நடக்காமலிருக்கத் தொடர்ந்து கண்காணிப்போம்’’ என்கிறார் செக்கானூரணி காவல்துறை ஆய்வாளர்அனிதா. உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரையும் இனி தீவிர கண்காணிப்பையும் போதிய விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தப்போவதாக நம்மிடம் தெரிவித்தார்.

பெண் சிசுக்கொலையைத் தடுக்க அரசும் சமூக அமைப்புகளும் மீண்டும் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.