Published:Updated:

"நாங்க ரோட்டுல நிக்கிறதால எங்களைத் தெரியுது; பெரிய பணக்கார இடங்களில்!"- பாலியல் தொழிலாளர்களின் குரல்

பாலியல் தொழில்

எங்களுக்கு உதவி செய்த எல்லாரும் நல்லவங்களாகவும், கடவுளாகவும் தான் எங்க கண்களுக்கு தெரியுறாங்க. இவகிட்ட கொடுத்த காசுக்கு இவளை துன்புறுத்துவோம்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க.

"நாங்க ரோட்டுல நிக்கிறதால எங்களைத் தெரியுது; பெரிய பணக்கார இடங்களில்!"- பாலியல் தொழிலாளர்களின் குரல்

எங்களுக்கு உதவி செய்த எல்லாரும் நல்லவங்களாகவும், கடவுளாகவும் தான் எங்க கண்களுக்கு தெரியுறாங்க. இவகிட்ட கொடுத்த காசுக்கு இவளை துன்புறுத்துவோம்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க.

Published:Updated:
பாலியல் தொழில்
ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் 'உடைத்துப் பேசுவோம்' என்கிற நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் நசுக்கப்பட்டு கொண்டிருக்கும் பல எளிய மனிதர்களின் கதைகளை பதிவு செய்து வருகிறோம்.

தொடரில் இந்த வாரம் பாலியல் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அதாவது Peer Educators என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரண்டு பெண்களைச் சந்தித்தோம். அவர்கள் இருவரும் பகுதி நேரமாக பாலியல் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களிடம் பேசியதிலிருந்து...

பாலியல் தொழில்
பாலியல் தொழில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"Peer Educators என்றால், நிறைய பெண்கள் குடும்பச் சூழலுக்காக இந்தத் தொழிலுக்கு தள்ளப்படுவாங்க. அவங்க உடல் ரீதியா வேற எந்தப் பிரச்னையும் சந்திக்கக்கூடாதுன்னு அவங்களுக்கு அறிவுரை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துற வேலை" என்றவர்களிடம் நீங்க ஏன் பாலியல் தொழிலுக்குள் வந்தீங்கன்னு கேட்டோம்.

குடும்பச் சூழல் காரணமாகத்தான் இந்தத் தொழிலுக்கு வந்தோம். விரும்பியெல்லாம் இந்தத் தொழிலுக்குள் வரல என்றதும் ஒருவர் பேசத் தொடங்கினார். என் கணவர் தினமும் குடிப்பாரு. வீட்ல எந்த வருமானமும் இல்ல. குழந்தைங்களுக்கு சாப்பாடு கொடுக்கக்கூட வழியில்ல. ஃப்ரெண்ட்கிட்ட வேலை கேட்டப்ப அவங்கதான் இந்தத் தொழிலை அறிமுகப்படுத்தினாங்க. ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு வேலையா என்கிற தயக்கம் ரொம்பவே இருந்துச்சு. ஆனா, குழந்தைங்களைக் காப்பாற்றணும் வேற வழியில்லையே என்கிற எண்ணத்தில் சம்மதிச்சேன். முதல் நாள் அந்த ரூமுக்குள்ள போனதும் அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. நாம செய்யுறது சரியா தப்பான்னு பயமாகவும் இருந்துச்சு. அந்த நேரத்துல குழந்தைங்க பற்றி மட்டும் தான் மனசுல ஓடுச்சு. அன்னைக்கு எனக்கு 500 ரூபாய் கொடுத்தாங்க. அந்தப் பணத்தை வச்சு தான் பசங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். இந்தப் பணத்தை ஏதாச்சும் தொழில் பண்ணியும் சம்பாதிச்சிருக்கலாம் தான் ஆனா அங்கேயும் ஆம்பளைங்க தொல்லை இருக்குமே, இதுல நல்ல வருமானம் வருதுன்னு இதையே தேர்ந்தெடுத்தேன்.

இவங்க தப்பான தொழில் பண்றவங்கன்னு சொல்லி அக்கம் பக்கம் பார்க்கிறவங்க சண்டையெல்லாம் போடுவாங்க. அடிக்கடி வீடு காலி பண்ண வேண்டியிருக்கும். வருமானம் வந்தாலும் சமூகத்தில் கஷ்டப்பட்டிருக்கோம் என்றதும் இன்னொருவர் தொடர்ந்தார்.

பாலியல் தொழில்
பாலியல் தொழில்

எனக்கு மூணு பசங்க. என் வீட்டுக்காரருக்கு நான் இரண்டாம் தாரம். விசாரிக்காம அம்மா கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. என்னால வீட்டு வாடகைகூட கொடுக்க முடியல. எங்க சூழல் இந்தத் தொழிலுக்கு வர வேண்டியதாயிடுச்சு. எங்களைப் பொறுத்தவரைக்கும் இது தப்பான தொழில் எல்லாம் கிடையாது என்றவரிடம் அவர்களுக்கும் உழைப்பு சுரண்டல் பிரச்னைகள் நடக்கிறதா என்பது குறித்துக் கேட்டோம்.

அது இங்கேயும் நடக்கும். ஹோம் மாதிரியான பிராத்தல் இடங்களுக்கு போனாலும் பாதி காசு தான் கிடைக்கும். புரோக்கர் மூலமா போனோம்னா அவங்க பாதி காசு தான் கொடுப்பாங்க. தமிழ்நாட்டில் மட்டுமில்லைங்க இப்ப பல இடங்களில் விபச்சாரம் நடந்துகிட்டு தான் இருக்கு. நாங்க ரோட்டுல நிற்கிறதனால எங்களை தெரியுது.. பெரிய, பெரிய பணக்கார இடங்களில் நடக்கிறதெல்லாம் யாருக்கும் தெரியுறதில்லை.

ரோட்டுல நிற்கும்போது அங்கிருக்கும் ஆட்டோகாரங்க பிரச்னை பண்ணுவாங்க. பாதி காசு கொடுக்கச் சொல்லிக் கேட்பாங்க. இல்லைன்னா ஏரியாவில் உள்ள பெரிய ஆளுங்க காசு கொடுக்கலைன்னா பிரச்னை பண்ணுவாங்க. இந்த சமூகத்தை பொறுத்தவரைக்கும் எல்லாரும் நல்லவங்களும் இல்ல, எல்லாரும் கெட்டவங்களும் இல்ல. சிலர், அவங்க நினைக்கும்போது நாம வரணும்னு நினைப்பாங்க.. பிரச்னை பண்ணுவாங்க. அப்போல்லாம் எதுவும் கேட்கவும் முடியாது, போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுக்கவும் முடியாது.

பாலியல் தொழில்
பாலியல் தொழில்

எங்களுக்கு உதவி செய்த எல்லாரும் நல்லவங்களாகவும், கடவுளாகவும் தான் எங்க கண்களுக்கு தெரியுறாங்க. இவகிட்ட கொடுத்த காசுக்கு இவளை துன்புறுத்துவோம்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. 20 வயதிலிருந்து 60 வயது வரை இருக்கிற ஆண்கள்தான் எங்களைத் தேடி வர்றாங்க. வருகிற ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதைகளோட வருவாங்க. 10 கஸ்டமர்ஸ் இருக்காங்கன்னா அதுல 3 பேர் நல்லவங்களா இருப்பாங்க. நம்மளுடைய குடும்பப் பிரச்னை, பசங்களுக்கு ஏதாவது உதவி தேவையா இருக்குன்னா தயங்காம உதவி பண்ணுவாங்க.

எங்களுக்கு பணம் தேவையா இருக்குங்கிறப்ப வேற வழியே இல்லாம இதுதான் தீர்வுன்னு தான் இந்தத் தொழிலுக்கு வர்றோம். சூழ்நிலைக் கைதிகள் தான் நாங்க எல்லாரும்! எங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கெல்லாம் நாங்க இந்தத் தொழில் பண்ற விஷயமே தெரியாது. இதுவரைக்கும் அவங்களுக்குத் தெரியாம தான் எல்லாம் பண்ணிட்டு இருக்கோம்..!' என்றார்கள்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து அவர்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!