Published:Updated:

எல்லோருக்குமானதே இரவு... பாரபட்சத்தை மாற்றுமா பாலின சமத்துவ நடை?

பாலின சமத்துவ நடை
பிரீமியம் ஸ்டோரி
பாலின சமத்துவ நடை

பெண்கள் 24/7 ஒடுக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சற்று கூடுதலாக ஒடுக்கப்படுகின்றனர்.

எல்லோருக்குமானதே இரவு... பாரபட்சத்தை மாற்றுமா பாலின சமத்துவ நடை?

பெண்கள் 24/7 ஒடுக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சற்று கூடுதலாக ஒடுக்கப்படுகின்றனர்.

Published:Updated:
பாலின சமத்துவ நடை
பிரீமியம் ஸ்டோரி
பாலின சமத்துவ நடை

இரவு நேர உலகம் எப்படியிருக்கும்..? இந்தக் கேள்விக்கு ஆண்களால் பல பதில்களைச் சொல்ல முடியும், அதை அனுபவத்தில் பார்த்தவர்கள் என்ற முறையில். ஆனால், பெண்களுக்கு அது அந்நியமானது. இரவு என்பது ஆண்களுக்கு மட்டுமன்றி, அனைத்துப் பாலினத்தவருக்குமானது என்பதை வலியுறுத்தி, பாலின சமத்துவ நடை ஒன்று சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னை, அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை வரை இந்நிகழ்வு நடை பெற்றது. இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12:30 மணி வரை நீடித்த இந்த நடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, நடிகை ரோகிணி, வில்லிவாக்கம் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த நடைக்கான நோக்கம் குறித்தும் அதில் கலந்துகொண்ட அனுபவம் குறித்தும் சிலரிடம் பேசினோம்...

பாலின சமத்துவ நடை ஒ
பாலின சமத்துவ நடை ஒ
எல்லோருக்குமானதே இரவு... பாரபட்சத்தை மாற்றுமா பாலின சமத்துவ நடை?

கவிதா கஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு உறுப்பினர்

``இந்திய குடும்ப அமைப்பு ஆண் களுக்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவரின் விருப்பு வெறுப்புகளுக்கு பெரிதாக இட மிருப்பதில்லை. இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்வதை பெரும்பான்மையான வீடுகள் அனுமதிப் பதில்லை. பாதுகாப்பின்மையை மட்டும் இதற்கு காரணமாகச் சொல்லிவிட முடியாது. பெண்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆணாதிக்க சமூகம் துடிக்கிறது. அது வலியுறுத்தும் பாதுகாப்பு, கற்புக்கான பாதுகாப்பாகவே இருக்கிறது. பகல் வேளைகளிலும் பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் இல்லை. இரவில் அதிகம் நடைபெறக் காரணம், இரவு என்பது பாலியல் உறவுக்கான நேரம் என்ற பொது புத்தி. பாலியல் வறட்சி கொண்ட இந்திய சமூகத்தில், இரவு நேரங்களில் ஆணுக்கு பாலியல் உணர்வு வெளிப்படும்போது அவன் வெளியில் நடமாடும் பெண் களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறான்.

சிறு நகரங்களில் சிசிடிவி கேமரா போன்ற கண்காணிப்பு அமசங்களோ, இரவு நேரங்களில் நடமாடும் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களோ இருப்பதில்லை. ஆண்களின் மனநிலையை மாற்றாமல், சமூகத்தை பாதுகாப்பானதாக மாற்றாமல், பெண்களை வெளியில் செல்லக்கூடாது என்று சொல்வது அவர்களை அடிமைப்படுத்துவதன்றி வேறென்ன? மாற்றுப்பாலினத்தவரின் நிலை இன்னும் மோசம்...பாலியல் கல்வியும் அனைத்துப் பாலினத்த வருக்கும் இரவை பாதுகாப்பானதாக மாற்றுவதும்தான் இதற்கான தீர்வாக அமையும்.’’

எல்லோருக்குமானதே இரவு... பாரபட்சத்தை மாற்றுமா பாலின சமத்துவ நடை?

கீதா இளங்கோவன், ஆவணப்பட இயக்குநர்

‘`பாலின சமத்துவ நடை முயற்சி வரவேற்கத்தக்கது. பெருங்கூட்டமாக நடப்பது மட்டுமல்லாமல் பெண்கள் தனியாக நடப்பது, சிறு குழுவாக நடப்பது போன்றவற்றையும் ஊக்கப்படுத்த வேண்டும். மேல்தட்டுக் குடும்பத்துப் பெண்கள் சிலருக்கு இரவில் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பெரும் பாலும் நடுத்தர வர்க்கத்திலேயே இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கலாசார காவலாளி குடும்பங்களில் பகல் நேரங்களிலும் பெண்களை வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. சமூகத்தில் மிகவும் அடித்தளத்தில் இருக்கும் பெண்களுக்கு இரவு நேரங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் இல்லை. ஏனென்றால் அடித்தளத்தில் உள்ள பெண்கள், தூய்மைப் பணியாளர் களாக, கூலித் தொழிலாளிகளாக இந்தச் சமூகத்திற்கு தேவைப்படுகிறார்கள். அனைத்துப் பெண்களுக்கும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் இரவு நேர உரிமை கிடைக்க வேண்டும்.''

எல்லோருக்குமானதே இரவு... பாரபட்சத்தை மாற்றுமா பாலின சமத்துவ நடை?


கொற்றவை, பெண்ணிய எழுத்தாளர்

‘`பெண்கள் 24/7 ஒடுக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சற்று கூடுதலாக ஒடுக்கப்படுகின்றனர். வேலைக்குச் செல்பவர்களுக்கு களிப்படைவதற்கும், களைப்பை மறப்பதற்கும் ஒரே வாய்ப்பு இரவு நேரம்தான். பெண்களுக்கான பாதுகாப்பைக் கொடுக்க முடியாத அரசு, அவர்கள் இரவில் வெளியே வருவதைத் தடுக்கிறது. பெண்களோ, மாற்றுப் பாலினத்தவரோ இரவில் வெளியில் வந்தால் அவர்கள் பாலியல் உணர்வுக்காகவோ, தொழிலுக்காகவோ வருவதாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். இந்தத் தவறான மனப்பான்மையை மாற்ற வேண்டும்.’’

எல்லோருக்குமானதே இரவு... பாரபட்சத்தை மாற்றுமா பாலின சமத்துவ நடை?

பிரியதர்ஷினி, வில்லிவாக்கம் கவுன்சிலர்

‘`பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இதனால், 100 வருடங்கள் பின்தங்கியபடிதான் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணம் கலாசாரப் போர்வைதான். பாலின சமத்துவ நடை போன்ற முன்னெடுப்புகள் பிற்போக்கு சிந்தனைகளைக் களைய உதவும்.’’