ஆதரவற்ற விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதுக்கு மேலும் திருமணமாகாமல் இருக்கும் பெண்கள் ஆகியோரின் நலனை முன்னுறுத்தி வருவாய்த்துறையின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வகையில் சில ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அந்தத் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்...

ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் என்ன தகுதி?

ஆதரவற்ற விதவையாக இருத்தல் வேண்டும். பயனாளியின் வயது 18 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அசையா சொத்துகள் 1,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

என்ன பயன்?

ஒவ்வொரு மாதமும் பயனாளியின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தப் படும்.

என்ன ஆவணங்கள் தேவை?

பயனாளியின் புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை அல்லது ஏதாவ தொரு முகவரிச் சான்று, சுய விளக்கப் படிவம், கணவரின் இறப்புச் சான்று, விதவைச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதாவதோர் அடையாளச் சான்று மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம்.

என்ன தகுதி?

ஆதரவற்றோர், 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சட்ட பூர்வமாக விவாகரத்தானவராகவோ, கணவரால் கைவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆனவராகவோ இருத்தல் வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பயனாளிக்கு அசையா சொத்துகள் 1,00,000 ரூபாய்க்கு மேல் மிகாமல் இருத்தல் வேண்டும்.

என்ன பயன்?

ஒவ்வொரு மாதமும் பயனாளியின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தப்படும்

என்ன ஆவணங்கள் தேவை?

பயனாளியின் புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரிச் சான்று, சுய விளக்கப் படிவம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றில் ஏதாவதோர் அடையாளச் சான்று வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் நீதிமன்ற உத்தரவின் நகல்.

என்ன தகுதி?

ஆதரவற்ற திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும். பயனாளிக்கு 50 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும்.

என்ன பயன்?

ஒவ்வொரு மாதமும் பயனாளியின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தப்படும்.

என்ன ஆவணங்கள் தேவை?

பயனாளியின் புகைப் படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை அல்லது ஏதாவ தொரு முகவரிச் சான்று, சுய விளக்கப் படிவம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றில் ஏதாவதோர் அடையாளச் சான்று,, வங்கிக் கணக்குப் புத்தகம்.

எங்கு விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்ப தாரர் தேவையான ஆணவங் களுடன் உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்களின ஆணவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் உங்களது கோரிக்கை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உரிய விசாரணை மேற்கொண்டு விண்ணப்பதாரர் தகுதியுள்ள பயனாளி என்னும்பட்சத்தில் அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.

வேறு ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்படி திட்டங்களில் பயன்பெற முடியாது.