Published:Updated:

``குழந்தையற்ற கைம்பெண்ணுக்கு பாரபட்சமான இந்து வாரிசுரிமை சட்டம்!" - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
News
உச்ச நீதிமன்றம் ( representational image )

``இந்து வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான, குழந்தை இல்லாத இந்து ஆணின் மரணத்திற்குப் பிறகு அவரது சொத்துகள் அவரின் பெற்றோரிடம் சேர்கிறது. ஆனால் அதுவே திருமணமான, குழந்தை இல்லாத இந்து கைம்பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவரின் பெற்றோர் அல்லது கணவரின் உறவினர்களிடம் சேர்கிறது."

சொத்துரிமை விஷயத்தில் சட்டம் இன்றுவரை எந்தளவுக்குப் பெண்களுக்கு பாரபட்சமாக உள்ளது என்பதை, இந்து வாரிசுரிமை சட்டத்தில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது.

பெண்களுக்கு சொத்துரிமை பல்லாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்தது. 1956-ல் பிறப்பிக்கப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்துப் பெண்களை சொத்தின் சம உரிமையாளராக அங்கீகரித்தது. ஓர் ஆணுக்கு நிகரான வாரிசுரிமை பெறவும், தன் கணவனின் சொத்து மற்றும் தன் தந்தையின் சொத்தை பெறவும் இச்சட்டத்தில் பெண்களின் வாரிசுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2005 இந்து வாரிசு (திருத்த) சட்டத்தின்படி, மகனைப் போலவே மகளையும் கூட்டுக் குடும்பத்தின் வாரிசாக அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்றாலும், 65 ஆண்டுகள் பழமையான இந்து வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை. குறிப்பாக, இந்து கைம்பெண்ணின் மரணத்துக்குப் பிறகான சொத்துப் பங்கீட்டில் சமத்துவம் இல்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை இதில் தலையிட்டு அரசு தலைமை வழக்கறிஞரான துஷார் மேத்தாவை, இந்து வாரிசுரிமைச் சட்டத்திலுள்ள குறைபாடுகள் பற்றிய மைய கருத்துகளை வழங்கக் கேட்டுக்கொண்டது.

நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணாவு இது பற்றி அறுவுறுத்தியதாவது: ``இந்து வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான, குழந்தை இல்லாத இந்து ஆணின் மரணத்திற்குப் பிறகு அவரது சொத்துகள் அவரின் பெற்றோரிடம் சேர்கிறது.

ஆனால் அதுவே திருமணமான, குழந்தை இல்லாத இந்து கைம்பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, அவரின் பெற்றோரிடமிருந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட சொத்துகளைத் தவிர்த்து, அந்தத் தம்பதியின் சொத்துக்களானது அவர் பெற்றோரிடம் சேராமல், அவர் கணவரின் பெற்றோர், அல்லது கணவரின் உறவினர்களிடம் சேர்கிறது.

குழந்தை இல்லாத கைம்பெண்ணின் சொத்துகளில் கணவர், அல்லது கணவரின் உறவினர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் சொத்தானது அவரின் பெற்றோர் அல்லது ரத்த உறவினர்களால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவரது மரணத்திற்குப் பிறகு கணவரின் தரப்பில் இருப்பவர்களுக்கே அந்தச் சொத்து சேர்வதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த சொத்துரிமை வழிமுறை, சந்தேகத்திற்கு இடமின்றி பாரபட்சமானது. நான்கு வாரங்களுக்குள் இது குறித்து அரசின் கருத்தைப் பெறவேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Court- Representational Image
Court- Representational Image
Image by succo from Pixabay

குழந்தை இல்லாத ஒரு கைம்பெண், தன் பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தை விற்று, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி வேறொரு சொத்தை வாங்கினால், புதிதாகப் பெற்ற அந்த சொத்துகளானது, அவர் இறந்த பிறகு அவருடைய பெற்றோருக்குச் சேரும் வகையில் சட்டப்படி வகைப்படுத்தப்படவில்லை. இப்படி, இந்து வாரிசுரிமை சட்டத்தில் உள்ள, குழந்தை இல்லாத கைம்பெண்ணின் மரணத்துக்குப் பிறகான சொத்துப் பங்கீடு குறித்த குறைபாடுகளை சரிசெய்ய நாடாளுமன்றத்தின் சட்டபூர்வ தலையீடு தேவைப்படலாம். நீண்ட காலமாக சட்டப் புத்தகங்களில் இருக்கும் இந்த முரண்பாடானது , நீதித்துறை அல்லது சட்டமன்ற தலையீடு மூலம் சரி செய்யப்பட வேண்டும்.''
இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.