Published:Updated:

டெல்லிப் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்! - எப்படி சாத்தியப்படுத்தினார் கெஜ்ரிவால்?

இலவச பேருந்துப் பயணம் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தத் திட்டப்படி பெண்களின் இலவசப் பயணத்துக்கு ஈடாக, ஒரு பயணச்சீட்டுக்கு 10 ரூபாயை மானியமாக டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் (DTC) மற்றும் டெல்லி மல்ட்டி-மாடல் டிரான்சிட் லிமிடெட் (DIMTS) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களுக்கு டெல்லி மாநில அரசு வழங்குகிறது.

இன்று (29, அக்டோபர் 2019) முதல் டெல்லியிலுள்ள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்டபோது ஒரு பக்கம் ஆதரவும், இன்னொரு பக்கம் இது வேண்டாத வேலையென்று விமர்சனமும் எழுந்தன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவது கடினம் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், டெல்லி அரசு இதற்கெனத் திட்டமிட்டு இன்றுமுதல் செயல்படுத்துகிறது.

இலவசப் பேருந்துப் பயணம் அரவிந்த் கெஜ்ரிவால்
இலவசப் பேருந்துப் பயணம் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் மக்கள் தொகை சுமார் 2 கோடி. இவர்களில், தினசரி பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 42 லட்சம் பேர். இவர்களில் 33% அளவுக்குப் பெண் பயணிகள் உள்ளனர். இந்த இலவசப்பயணத் திட்டப்படி பெண்களின் இலவசப் பயணத்துக்கு ஈடாக, ஒரு பயணச்சீட்டுக்கு 10 ரூபாயை, மானியமாக டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் (DTC) மற்றும் டெல்லி மல்ட்டி-மாடல் டிரான்சிட் லிமிடெட் (DIMTS) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களுக்கு டெல்லி மாநில அரசு வழங்குகிறது. டி.டி.சி அரசுப் போக்குவரத்தில் மொத்தம் 3,781 பேருந்துகளும், டி.ஐ.எம்.டி.எஸ் தனியார் நிறுவனத்துக்கு 1,808 பேருந்துகளும் இயங்குகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் திட்டத்துக்கான செலவுக்காக, 29 அக்டோபர் 2019 முதல் 31 மார்ச் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ரூ.140 கோடியை ஒதுக்கியுள்ளனர். டெல்லிப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், விரும்பினால் கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம். இந்தத் திட்டத்தின்படி இலவசமாகப் பயணிக்கும் பெண்களுக்கு 'பிங்க் நிறப் பயணச்சீட்டு' வழங்கப்படும். இந்தப் பயணச்சீட்டு எண்ணிக்கையை வைத்து அரசு மானியம் வழங்கப்படும்.

பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றம்
vikatan

இத்திட்டம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ``இது, டெல்லிப் பெண்களின் மேம்பாட்டுக்கு முக்கியப் படியாக இருக்கும். இதன் அடுத்தகட்டமாக மூத்தக் குடிமக்களுக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.