Published:Updated:

ஏ.சி வெடித்து உயிரிழப்பு ஏற்படுவது ஏன்... தவிர்க்கும் வழிமுறைகள் என்ன? - நிபுணரின் விளக்கம்

ஏ.சி பயன்பாடு

நச்சுப்புகை வெளியாகி, குளிர்ந்த காற்றுடன் கார்பன் வாயுவைச் சுவாசிக்கும்போது, சிறிது நேரத்திலேயே மயக்க நிலைக்குத் தள்ளப்படுவோம். இதுபோன்ற விபத்து ஏற்படும்பட்சத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் நேரிடலாம்.

ஏ.சி வெடித்து உயிரிழப்பு ஏற்படுவது ஏன்... தவிர்க்கும் வழிமுறைகள் என்ன? - நிபுணரின் விளக்கம்

நச்சுப்புகை வெளியாகி, குளிர்ந்த காற்றுடன் கார்பன் வாயுவைச் சுவாசிக்கும்போது, சிறிது நேரத்திலேயே மயக்க நிலைக்குத் தள்ளப்படுவோம். இதுபோன்ற விபத்து ஏற்படும்பட்சத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் நேரிடலாம்.

Published:Updated:
ஏ.சி பயன்பாடு

ஏ.சி (Ar conditioner) பயன்பாடு என்பது இன்று பெரும்பாலானோருக்கும் அவசியத் தேவையாக மாறிவிட்டது. காற்றோட்ட வசதியில்லாத குடியிருப்புகள், வெப்பநிலை உயர்வு போன்ற காரணங்களால் சாமானியர்களுக்கும் ஏ.சி தவிர்க்க இயலாத பயன்பாடாக இருக்கிறது. ஏ.சி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ஏ.சி-யில் மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் செய்திகள் அச்சமூட்டுகின்றன.

ஏ.சி பயன்பாடு
ஏ.சி பயன்பாடு

இதுபோன்றதொரு துயரம் சென்னை, கொளத்தூரில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி-யில் திடீரென பரவிய தீ, திரு.வி.க நகரைச் சேர்ந்த ஷியாம் என்ற இளைஞரின் உயிரைப் பறித்துள்ளது. இத்தகைய விபத்துகள் ஏற்பட என்ன காரணம்... ஏ.சி பயன்பாட்டில் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விஷயங்கள் என்ன... இதுகுறித்த எளிமையான விளக்கங்களை அறிய, சென்னையைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் முரளியிடம் பேசினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரச்னைக்கான காரணங்கள் எவை?

"எந்த மின்சாதனமாக இருந்தாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பழுது அல்லது சிக்கல் ஏற்பட்டு ஆபத்து ஏற்படலாம். இது ஏ.சி பயன்பாட்டுக்கும் பொருந்தும். மின்சாதனங்களின் வயர்களைக் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் மாற்ற வேண்டும். அதுபோல ஏ.சி இயந்திரத்துக்கான வயர்களை மாற்றாமல் இருப்பது, Loose contact ஏற்படுவது, உயர் மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தம் ஏற்படுவது, வருடக்கணக்கில் ஃபில்டர் சாதனத்தைச் சுத்தம் செய்யாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் ஏ.சி-யின் இயக்கம் பாதிக்கப்படலாம். பழைய கட்டடங்களில் மின் இணைப்பு சரிவர கவனிக்கப்படாமல் அல்லது பராமரிக்கப்படாமல் இருந்தால், ஏ.சி உள்ளிட்ட மின்சாதனங்களிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏ.சி பயன்பாடு
ஏ.சி பயன்பாடு

R 410 மற்றும் R 32 வகையைச் சேர்ந்த வெடிக்கும் தன்மையுடைய வாயுக்கள்தான் ஏ.சி-யில் பயன்படுத்தப்படுகின்றன. ஏ.சி-யின் கூலிங் திறன் குறையப் பல காரணங்கள் உண்டு. அதில், வாயுக்கசிவும் ஒரு காரணம். எனவே, ஏ.சி-யில் கூலிங் அளவு இயல்பைவிடக் குறையும்பட்சத்தில், ஏ.சி. மெக்கானிக்கை கொண்டு ஏ.சி-யை பழுதுபார்ப்பது நல்லது.

ஒருவேளை வாயுக்கசிவு இருப்பது உறுதியானால், எஞ்சியிருக்கும் வாயுவை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு புதிதாக வாயுவை நிரப்புவதுதான் சரியானது. மாறாக, ஏ.சி-யில் ஏற்கெனவே மீதமிருக்கும் குறைவான அளவு வாயுவுடன், கூடுதலான அளவுக்கு மட்டும் வாயுவை நிரப்புவதால், சில சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படலாம்.

ஏ.சி-யில் மின்கசிவு ஏற்படும்பட்சத்தில், சில சமயம் வாயுக்கசிவும் நிகழலாம். அதனால், நச்சுப்புகை வெளியாகி, குளிர்ந்த காற்றுடன் கார்பன் வாயுவை சுவாசிக்கும்போது, சிறிது நேரத்திலேயே மயக்க நிலைக்குத் தள்ளப்படுவோம். பகல் நேரங்களில் பெரும்பாலானோரும் ஏ.சி-யை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள். ஏ.சி பயன்பாடு இரவில்தான் அதிகம் தேவைப்படுகிறது. அப்போது இதுபோன்ற விபத்து ஏற்படும்பட்சத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் நேரிடலாம்.

air conditioner
air conditioner

தினமும் எவ்வளவு நேரம் ஏ.சி பயன்படுத்தலாம்?

நாம் ஏ.சி-யை பயன்படுத்தும் அறையின் அளவு, எத்தனை மணி நேரம் ஏ.சியை பயன்படுத்துகிறோம் போன்ற அடிப்படை காரணங்களைப் பொறுத்து ஏ.சியை தேர்வுசெய்வது நல்லது. தினமும் சராசரியாக 8 - 12 மணி நேரம் தொடர்ச்சியாக ஏ.சி-யை பயன்படுத்தலாம். ஏ.சி-யின் திறன் நன்றாக இருந்து, அதை அதிகநேரம் பயன்படுத்தும்பட்சத்தில், 3 - 4 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் பார்க்க வேண்டும். பழைய ஏ.சி-யாக இருந்தால், அதிக கூலிங் வைக்காமல், குறைவான நேரத்துக்குப் பயன்படுத்தலாம்.

எவ்வளவு கூலிங் சரியானது?

இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இருப்பினும், நம்மூர் பருவநிலைக்கு 22 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக ஏ.சி-யை இயக்கலாம். சராசரியாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே ஏ.சியை எப்போதும் இயக்குவது பொருத்தமானது. 18 - 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்தான் பெரும்பாலானோர் ஏ.சியை பயன்படுத்துவார்கள். ஏ.சி-யின் வெப்பநிலையை 22 டிகிரி செல்சியஸுக்கும் கீழே இயக்கும்போது, அந்த வெப்பநிலைக்கு இணையாக அறையின் வெப்பநிலையும் (Room Temperature) மாறுவதற்கு வெளிப்புறத்திலுள்ள கண்டென்ஸர் யூனிட் அதிக நேரம் இயங்க வேண்டும். எனவே, 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஏ.சியை இயக்குவதால், கண்டென்ஸர் இயக்கத்துக்கும் போதிய ஓய்வுநேரம் கிடைப்பதுடன், மின்சார விரயமும் கூடுமானவரை தவிர்க்கப்படும்.

முரளி
முரளி

ஏ.சியை எப்போது மாற்ற வேண்டும்?

அடிக்கடி பழுது ஏற்பட்டால் ஏ.சி-யை மாற்றிவிடுவது நல்லது. மற்றபடி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஏ.சி-யை மாற்றிவிடலாம். கடற்பகுதி, கால்வாய், தூசி அதிகம் சேரும் பகுதியில் இருப்பவர்களுக்கு ஏ.சி-யின் வாழ்நாள் திறன் மாறுபடும். எந்தப் பகுதியில் ஏ.சி-யை பயன்படுத்தினாலும், கண்டென்ஸர் யூனிட்டில் உருவாகும் வெப்பம் வெளியேறுவதற்குப் போதிய காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்.

எலி, அணில் தொல்லை இருக்கிறதா?

வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் ஏ.சியை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, மீண்டும் பயன்படுத்துவதாக இருந்தால் கண்டென்ஸர் யூனிட்டில் எலி அல்லது அணில் நுழைந்து சேதாரம் ஏற்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. இதனைச் சரிபார்த்த பிறகு, மீண்டும் ஏ.சியை இயக்குவது நல்லது" என்று ஆலோசனைகளைக் கூறினார் முரளி.