Published:Updated:

பெண்களே, உங்கள் பணியிடத்தில் இந்த சுரண்டல்களுக்கு ஆளாகிறீர்களா? #StopExploitingWomen

Office (Representational Image) ( Image by RAEng_Publications from Pixabay )

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தம் உழைப்பும் உணர்வும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமலிருப்பதுதான். சரி, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சுரண்டலுக்கு ஆளாகிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.

பெண்களே, உங்கள் பணியிடத்தில் இந்த சுரண்டல்களுக்கு ஆளாகிறீர்களா? #StopExploitingWomen

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தம் உழைப்பும் உணர்வும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமலிருப்பதுதான். சரி, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சுரண்டலுக்கு ஆளாகிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.

Published:Updated:
Office (Representational Image) ( Image by RAEng_Publications from Pixabay )

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே வீடு, அலுவலகம் என இரட்டை பணிச்சுமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு, இந்தச் சுரண்டல்கள் கூடுதல் பளுவையே கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தம் உழைப்பும் உணர்வும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமலிருப்பதுதான். சரி, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சுரண்டலுக்கு ஆளாகிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.

Office
Office
Pixabay

1. கோலம் போடுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலுவலகத்தில் ஒரு விழா என்றால், `நல்லா கோலம் போட தெரிஞ்ச லேடீஸ் எல்லாம் நாளைக்கு காலையில வந்து கோலம் போட்டுருங்கம்மா' என்று அழைப்பதும்/ உத்தரவிடுவதும் ஒருவகை உழைப்புச் சுரண்டல்தான். காலங்காலமாகப் பெண்கள்தான் அவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு வருகிறார்கள் என்றாலும், அலுவலகம் என்று வரும்போது அதை அழகுபடுத்துவதற்கு பெண்களை மட்டும் அழைத்தால் அதற்கு 'ஆஃபீஸ் ஹவுஸ் வொர்க்' என்றே பெயர். தவிர, அலுவலகத்தை அழகுபடுத்துவதில் சரிசமமான பொறுப்பு ஆண் ஊழியர்களுக்கும் இருக்கிறதுதானே?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. உங்களுக்குத்தான் விருந்தோம்பல் நல்லா வரும்!

அலுவலகத்தில் ஒரு விழா அல்லது மீட்டிங் நடந்து முடிந்தவுடன், தேநீரும் ஸ்நாக்ஸும் பெண்கள்தான் பரிமாற வேண்டுமென்பது சொல்லப்படாத ஒரு சட்டமாகவே இருந்துகொண்டிருக்கிறது. `லேடீஸ்க்குத்தான் விருந்தோம்பல் நல்லா கைவரும்' என்று இதற்கு சப்பைக்கட்டுக் கட்டினாலும், அலுவலகத்தைப் பொறுத்தவரை ஆண் ஊழியர்களுக்கும் விருந்தோமல் பண்பு கைவர வேண்டுமென்பதுதானே நியாயமாக இருக்க முடியும்?

Office
Office
Image by Gerd Altmann from Pixabay

3. லேடீஸ் 6 மணிக்கு மேல வேலைபார்க்க மாட்டாங்க!

நைட் ஷிஃப்ட், ஷிஃப்ட் வொர்க், ஓவர் டைம் என்று ஆண் ஊழியர்களைப்போலவே பெண்களும் பணி செய்ய ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், மாலை வீட்டுக்குக் கிளம்பும்போது `சாயந்திரம் ஆறு மணியானா டாண்ணு வீட்டுக்குக் கிளம்பிடுவாங்க லேடீஸ்' என்கிற கிண்டலை பெரும்பாலான பெண்கள் சந்திருப்பார்கள். சிகரெட் பிடிப்பதற்காகவும், டீ குடிப்பதற்காகவும் அடிக்கடி சீட்டை விட்டு எழுகிற சில ஆண்கள் வேலை நேரம் முடிந்தபிறகும் அலுவலகத்தில் இருப்பதிலும், பிரேக் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரம் முழுக்க அலுவலக வேலையைப் பார்த்து 6 மணிக்குள் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு பெண்கள் வீட்டுக்குக் கிளம்புவதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லைதானே?

`லேடீஸ் 6 மணிக்கு மேல வேலைபார்க்க மாட்டாங்க' என்று, `நீங்கள் 6 மணிக்கு மேல் வேலையே பார்த்ததில்லை; பார்க்க மாட்டீர்கள் என்பதுபோல மற்றவர்கள் முன்னிலையில் பதிவு செய்ய முயன்றால், உடனடியாக உங்கள் எதிர்ப்பை கட்டாயம் பதிவு செய்யுங்கள். ஏனென்றால், இது மிகப்பெரும் உழைப்புச் சுரண்டல்.

4. அமைதியான பெண்கள் சந்திக்கிற பிரச்னை இது!

கிட்டத்தட்ட எல்லா அலுவலகங்களிலும் நடைபெறும் உழைப்புச்சுரண்டல் இது. சீனியர் ஆண்கள் மட்டுமல்ல அலுவலக நிர்வாகமும்கூட தன் சக பெண் ஊழியர்களிடம் இந்த உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வார்கள். குறிப்பாக அமைதியான மற்றும் `நோ' சொல்லத் தயங்குகிற பெண்களே இந்தச் சுரண்டலை அதிகம் சந்திக்கிறார்கள். அப்படியென்ன சுரண்டல் என்கிறீர்களா? சிலர், அலுவலகத்திலேயே அமைதியான பெண்களாகப் பார்த்து அவர்களிடம் அதிக வேலைகளைக் கொடுப்பார்கள். அல்லது தங்களுடைய வேலைகளையும் கொடுத்து அதிகப்படியாக வேலை வாங்குவார்கள்.

Office (Representational Image)
Office (Representational Image)
Photo by Jopwell from Pexels

5. சிங்கிள் பெண்கள் சந்திக்கிற சுரண்டல் இது!

நைட் ஷிஃப்ட் வேலையா? ஊர் ஊராகப் போக வேண்டிய வேலையா? விடுமுறை நாள்களிலும் செய்ய வேண்டிய வேலையா? `அலுவலகத்தில் இருக்கிற சிங்கிள் அல்லது டைவர்ஸ் ஆன பெண்களிடம் கொடு' என்பதாகத்தான் இன்றைக்குப் பலருடைய மனப்பான்மையும் இருக்கிறது. `கமிட்மென்ட் இல்லைங்கிறதால கரெக்டா செய்வாங்க' என்று மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், சிங்கிள் பெண்களின் சொந்த நேரத்தையும் அலுவலகங்கள் சூறையாடுகின்றன என்பதுதான் உண்மை.

6. அழகா இருந்தா முன்னாடி நில்லு!

அழகான பெண்களென்றாலே, அவர்கள் ரிசப்ஷனில் வேலைபார்ப்பதற்கும், வாசலில் நின்று கஸ்டமர்களை வரவேற்பதற்கும் என்றே பல நிறுவனங்களும் நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில நிறுவனங்களில், விழா, அதையொட்டிய சீஃப் கெஸ்ட் வரவேற்பு போன்றவற்றின்போது தோற்றப்பொலிவான பெண்களை அவர்களுடைய விருப்பத்தைக் கேட்காமல் முதல் வரிசையில் நிற்க வைப்பதும் சுரண்டல்தான். பெண்களுடைய உருவத்தைத் தாண்டி, அவர்களுடைய திறமைக்கு மரியாதை தருவதுதான் அலுவலகங்களுக்கு அழகு.

Pregnancy (Representational Image)
Pregnancy (Representational Image)
Photo by Ryutaro Tsukata from Pexels

7. கருவுற்றால் பாரபட்சமா?

கைநிறைய சம்பளம் வாங்கும் பெண் ஊழியர் கருவுற்றுவிட்டால், அவருக்கு மகப்பேறு விடுமுறையளிப்பதோடு கூடவே அவர் வாங்கி வரும் சம்பளத்தையும் மாதா மாதம் தர வேண்டி வரும். இதுவே அந்தப்பெண் வேலையைவிட்டு நின்றுவிட்டால்... அலுவலகத்துக்கு லாபம்தானே?! விளைவு, சம்பந்தப்பட்ட பெண்ணை கன்வின்ஸ் செய்து வேலையைவிடச் செய்வார்கள். புதிதாகத் திருமணமான பெண்களை ஆன்சைட் தேர்வு செய்யாமல் இருப்பது, சீக்கிரம் மகப்பேறு விடுமுறை எடுப்பார் என்று இன்கிரிமென்ட் போடாமல் இருப்பது அல்லது குறைத்துப்போடுவது போன்றவற்றோடு மூன்றாவதாக இந்தச் சுரண்டலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

8. அதிகம் பேசப்படாத சுரண்டல் இது!

`இவர்கள் முன்னேற்றப்பட வேண்டியவர்கள்' என்ற எண்ணத்தில்தான், அரசு சிலரை பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தியிருக்கிறது. அவர்களிலிருந்து முதல் தலைமுறைப் பெண்கள் படித்து, வேலைக்கு வரும்போது, அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய இடங்களில் அதைச் செய்யாமல் இருப்பது, அவர்களுடைய அடுத்தகட்ட வளர்ச்சியைத் தடுப்பது அல்லது உதவாமல் இருப்பதும் சுரண்டல்தான்.

Office
Office
Photo by Pawel Chu on Unsplash

மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒரு சம்பவத்தையாவது நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால், நீங்களும் சுரண்டலுக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட சுரண்டல்களை நாசுக்காகத் தவிர்க்கப் பாருங்கள். தேவைப்பட்டால், உங்கள் சுயமரியாதையையும் உங்களுக்கான நியாயத்துக்காகவும் வாய்ஸ் அவுட் செய்யுங்கள்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!