Published:Updated:

`கர்ப்பமாவது குற்றமா?’ - கர்ப்பிணிகளுக்கு பணி நியமனம் மறுக்கும் இந்தியன் வங்கி, வலுக்கும் எதிர்ப்பு

இந்தியன் வங்கி

``பணி நியமனத்தை மறுக்குமளவுக்கு கர்ப்பம் தரிப்பது என்ன குற்றச்செயலா? லாபகரமாக இயங்கக்கூடிய ஒரு பொதுத்துறை வங்கி, கர்ப்பிணிகளுக்கான பணி நியமனத்தை மறுப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது. இந்தியன் வங்கி இதைத் திரும்பப் பெற வேண்டும்.''

`கர்ப்பமாவது குற்றமா?’ - கர்ப்பிணிகளுக்கு பணி நியமனம் மறுக்கும் இந்தியன் வங்கி, வலுக்கும் எதிர்ப்பு

``பணி நியமனத்தை மறுக்குமளவுக்கு கர்ப்பம் தரிப்பது என்ன குற்றச்செயலா? லாபகரமாக இயங்கக்கூடிய ஒரு பொதுத்துறை வங்கி, கர்ப்பிணிகளுக்கான பணி நியமனத்தை மறுப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது. இந்தியன் வங்கி இதைத் திரும்பப் பெற வேண்டும்.''

Published:Updated:
இந்தியன் வங்கி

புதிதாகப் பணி நியமனம் பெறுபவர்களுக்கான உடல் நலத்தகுதி குறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கர்ப்பிணிகளுக்கான பணி நியமனம் மறுக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 'மருத்துவப் பரிசோதனையின்போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தைக் கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்துக்கு பிந்தைய ஓய்வுக்காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாகத் தகுதி அற்றவர் என்று கருதப்படுவார். பிரசவம் முடிந்து 6 வாரங்கள் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்' என இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Gender Equality
Gender Equality

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பாலின பாரபட்சத்தோடு உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்தியன் வங்கி தலைவர் சாந்திலால் ஜெயினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``வங்கியின் இந்த வழிகாட்டு நெறிமுறை, அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14, 15, 16 ஆகியவற்றுக்கு விரோதமானது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம், எந்த குடிமக்களும் பாலினம் உள்ளிட்ட எந்தக் காரணங்களாலும் பாரபட்சத்துக்கு ஆளாகக் கூடாது, வேலை வாய்ப்பில் பணி நியமனங்களில் எல்லா குடி மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், எந்த வேலை வாய்ப்புகளிலும் பாலின பாரபட்சம் உள்ளிட்ட வேறுபாடுகள் காண்பிக்கக் கூடாது என்று அரசியல் சாசனத்தின் பிரிவுகள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

கர்ப்பிணி
கர்ப்பிணி

இந்தியன் வங்கியின் இந்த வழிகாட்டுதல் அதன் பிற்போக்கான மனநிலையை, பாலின பாரபட்ச அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. இவ்வழிகாட்டல்களின் நோக்கம், பிரசவ விடுப்பின் பயனைத் தவிர்ப்பது ஆகும். இது பெண் ஊழியர்களை ஊதிய இழப்புக்கு இட்டுச் செல்வதோடு, பணி முதிர்ச்சி காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும். 6 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரையிலான `பணி நியமன மறுப்பு' பணி ஓய்வு பயன்களான பி.எஃப், பென்ஷன், பணிக்கொடை வரை பாதிப்புகளை உண்டாக்கும்" என்று மேலும் சில தரவுகளோடு எழுதப்பட்டிருக்கும் அக்கடிதத்தில் இந்தியன் வங்கி இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியன் வங்கியின் இத்தகைய புதிய வழிகாட்டு நெறிமுறையை எப்படிப் பார்க்கலாம் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோவிடம் கேட்டோம்...

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ
vikatan

``அரசுப் பணியில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவமும், சமத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பணி நியமனம் தொடர்பாக இப்படியான விதிமுறையைக் கொண்டுவருவது தவறானது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாகூட இப்படியான விதிமுறையை சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. அன்றைக்கு கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன் அதற்கு எதிராகக் குரல் கொடுத்த பிறகு, அது திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதே வேலையைத்தான் இப்போது இந்தியன் வங்கியும் மேற்கொண்டிருக்கிறது. இன்றைக்கு நிலவும் மோசமான பொருளாதார சூழலில் குடும்பத்தை வழி நடத்திச் செல்ல பெண்களும் வேலைக்குச் சென்றாக வேண்டிய தேவை இருக்கிறது. இப்படியொரு சூழலில் கர்ப்பிணிகளுக்கு பணி நியமனம் இல்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. பணி நியமனத்தை மறுக்குமளவுக்கு கர்ப்பம் தரிப்பது என்ன குற்றச் செயலா?

இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு மாநில அரசுதான் பேறுகால விடுமுறையை 6 மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்த்தியிருக்கிறது. பெண்களின் நலன் சார்ந்து அக்கறையோடு இப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. லாபகரமாக இயங்கக்கூடிய ஒரு பொதுத்துறை வங்கி இப்படிக் கூறுவது மிகவும் பிற்போக்குத்தனமானது. இந்தியன் வங்கி இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் தாமஸ் ஃப்ராங்கோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism