Published:Updated:

முதல் காதல், நடனம், வறுமை - இப்படிக்கு... ‘மதுரை ஜில்லா மச்சக்கன்னி!’

மச்சக்கன்னி
பிரீமியம் ஸ்டோரி
மச்சக்கன்னி

வீட்டுல வறுமை, கடன் பிரச்னை. என்னை மட்டும் பாட்டி வீட்டுல விட்டுட்டு குடும்பத்தோட எல்லாரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டாங்க.

முதல் காதல், நடனம், வறுமை - இப்படிக்கு... ‘மதுரை ஜில்லா மச்சக்கன்னி!’

வீட்டுல வறுமை, கடன் பிரச்னை. என்னை மட்டும் பாட்டி வீட்டுல விட்டுட்டு குடும்பத்தோட எல்லாரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டாங்க.

Published:Updated:
மச்சக்கன்னி
பிரீமியம் ஸ்டோரி
மச்சக்கன்னி

“தாஜ்மஹால்’ படத்துல ஹீரோயின் பேரு மச்சக்கன்னி. அந்தப் பேர் ரொம்பப் பிடிச்சதால அதையே எனக்கு வெச்சிகிட்டேன்” எளிமையாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அம்மன், பாம்பு, பட்டாம்பூச்சி போன்று வேடமிட்டும், டியூப் லைட்டை உடைத்து ஆடும் சாகச நடனங்கள் ஆடியும் தன் கரியரைத் தொடங்கியவர் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் படத்தில் முக்கிய கதா பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

“12 வயசுலயே எனக்குள்ள மாற்றங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. ஸ்கூலுக்கு பேன்ட், சட்டைல போனாலும் கலர் கலரா பொட்டு வெச்சிட்டுப் போவேன். ஆண்கள் பாத்ரூம் பயன்படுத்தப் பிடிக்காது. டீச்சர்கிட்ட பெர்மிஷன் வாங்கி பிரேக் முடிஞ்சு எல்லாரும் கிளாஸுக்குப் போனதும் நான் மட்டும் லேடீஸ் பாத்ரூம் பயன்படுத்துவேன். என் கிளாஸ் டீச்சர் பெண்தான். அவங்க என்னைப் புரிஞ்சுகிட்டு எனக்கு ஆதரவா இருந்தாங்க” என்பவருக்கும் தொடங்கியது உரிமைக்கான போராட்டம்.

முதல் காதல், நடனம், வறுமை - இப்படிக்கு... ‘மதுரை ஜில்லா மச்சக்கன்னி!’

“வீட்டுல வறுமை, கடன் பிரச்னை. என்னை மட்டும் பாட்டி வீட்டுல விட்டுட்டு குடும்பத்தோட எல்லாரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன். எங்க ஊரு திருவிழாவுல டான்ஸ் ஆடுறதுக்கு சந்துருன்றவரு வந்தாரு. அவருகிட்ட கேட்டு, திருச்சி விராலிமலையில அவரு வீட்லயே இரண்டு வருஷம் தங்கியிருந்து டான்ஸ் கத்துகிட்டேன். பத்தாவதோட படிப்பையும் நிறுத்திட்டேன்.

குரு வீட்டுல எனக்குப் புடிச்ச டிரஸ் போட்டு மேக்கப் பண்ணிப்பேன். நைட் டெல்லாம் நிகழ்ச்சிகளுக்கு ஆடப் போவோம். காலைல வந்து எல்லாரும் தூங்குவாங்க. நான் அவங்க துணியெல்லாம் துவைக்கிறது, சமைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறதுன்னு பகல் முழுக்க வேலை பார்க்கணும். மாஸ்டர் என்னை நல்லா பார்த்துக்கிட்டாலும் அவங்க வீட்டுல இருக்கிறவங்க தூங்கக்கூட விடாம எனக்கு வேலை கொடுத்திட்டே இருப்பாங்க. அதையெல்லாம் செஞ்சுதான் டான்ஸ் கத்துகிட்டேன்” எனும் மச்சக்கன்னிக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி.

முதல் காதல், நடனம், வறுமை - இப்படிக்கு... ‘மதுரை ஜில்லா மச்சக்கன்னி!’

“திருப்பூருக்குப் போன எல்லாரும் ஒன்பது வருஷம் கழிச்சு ஊருக்கே திரும்பி வந்துட்டாங்க. வறுமை மட்டும் எங்களை விட்டபாடில்லை. அப்பதான் அம்மாகிட்ட நான் டான்ஸ் ஆடப் போறேன்னு சொன்னேன். வீட்டுல இருக்கிறவங்க கஞ்சி குடிக்கணுமே.. அதனால அனுமதிச்சாங்க. அதுக்கு முன்னாடியெல்லாம் நான் லேடீஸ் டிரஸ் போட்டா அண்ணனுங்க அடி வெளுத்துருவாங்க. அம்மாவும் திட்டுவாங்க. குடும்ப வறுமை எனக்கான சுதந்திரக் கதவையும் திறந்துவிட்டது’’ என்பவர் இரண்டு அண்ணன்களின் திருமணம், சொந்த வீடு என உழைப்பால் தன் குடும்பத்தை உயர்த்தி யிருக்கிறார்.

“நான் ஆபரேஷன் செய்யணும்னு சொன்னதுக்கு மட்டும் அம்மா சம்மதிக்கல. விஷயம் தெரிஞ்சா அண்ணன்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்கன்னு சொல்வாங்க. மூத்த அண்ணனுக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணப் போற நேரத்துல எங்க ஊர்ல சிலர் போய் என்னைப் பத்தி பொண்ணு வீட்ல சொல்லிட்டாங்க. பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. `நான் இருக்கிறதையே சொல்லாம பொண்ணு பாருங்க. கல்யாணத்தை மட்டும் ஒரு ஓரமா இருந்து பார்த்துட்டுப் போயிடுறேன்’னு சொல்லி அழுதேன். ‘நீ இல்லைன்னு சொல்லி எனக்கு ஒரு கல்யாணம் வேண் டாம்’னு அண்ணன் முடிவா சொல்லிடுச்சு. இப்போ இரண்டு அண்ணன்களுக்கும் கல்யாணம் ஆகி அண்ணிங்க வந்துட்டாங்க. எனக்கு காஸ்ட்யூம், நகைகள், மேக்கப்னு எல்லாத்துக்கும் அவங்கதான் கைடு பண்ணு வாங்க” குடும்பம் தனக்கு அரணாக இருப்பதை பூரிப்புடன் சொல்கிறார்.

அம்மாவுடன்..
அம்மாவுடன்..

“எனக்கும் ஒரு காதல் இருந்துச்சு. இரண்டு பேரும் விரும்பினோம். அவருக்காக ஆபரேஷனும் செஞ்சுகிட்டேன். ‘நீ பார்க் குறதுக்கு நல்லா இருக்கே... எதுக்கு ஒரு திருநங்கை பின்னாடி சுத்திட்டு இருக்கே’ன்னு சொல்லி அவர் மனசைக் கலைச்சிட்டாங்க. முதல் காதல் கொடுத்த வலி இப்பவும் மனசுல ஆழமா இருக்கு” எனும் மச்சக் கன்னிக்கு பிறருக்கு உதவுவதில்தான் ஆத்ம திருப்தி.

“கொரோனாவுக்குப் பிறகு குடும்பத்துல மறுபடியும் வறுமை. நிறைய பேருக்கு உதவணும்னு எனக்கு ஆசை. ஆனா, என் வண்டியே இப்போ கடன்ல ஓடிட்டு இருக்கு” விரக்தியாகச் சிரிக்கிறார்.

“எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக் கிறவங்களுக்கு எந்தக் கஷ்டமும் நிலைக்காது. மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சிட்டா அப்புறம் ரகிட ரகிடதான்.’’

- நம்பிக்கை துளிர்க்கிறது வார்த்தைகளில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism