Published:Updated:

பெண் குழந்தைகளின் மீது இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது? #InternationalGirlChildDay

International Girl Child Day ( ஜார்ஜ் அந்தோணி )

2017 - 2018-ம் ஆண்டு, பொருளாதார சர்வே, "பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது தவிர்க்கப்பட்டிருந்தாலும், தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் ஆண் குழந்தைகள் பிறக்கும் வரை இந்தியக் குடும்பங்கள் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்” என்கிறது.

பெண் குழந்தைகளின் மீது இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது? #InternationalGirlChildDay

2017 - 2018-ம் ஆண்டு, பொருளாதார சர்வே, "பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது தவிர்க்கப்பட்டிருந்தாலும், தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் ஆண் குழந்தைகள் பிறக்கும் வரை இந்தியக் குடும்பங்கள் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்” என்கிறது.

Published:Updated:
International Girl Child Day ( ஜார்ஜ் அந்தோணி )

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது மோஞ்ஜிதா பருஹா, கொல்கத்தாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையராக ஒருநாள் மட்டும் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11-ம் நாளன்று அனுசரிக்கப்படும் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உயர் ஆணையரகம் நடத்திய போட்டியில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் மோஞ்ஜிதா நியமிக்கப்பட்டார்.

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை சர்வதேச சமூகத்துக்கும் நினைவூட்டும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர்களைக் கெளரவிக்கும் வகையிலும், பெண் குழந்தைகளின் மீதான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காகவும் பெய்ஜிங் உலகப் பெண்கள் மாநாட்டில் 1995-ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை, ஐக்கிய நாடுகள் சபை 19 டிசம்பர் 2011-ல் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் 2012 தொடங்கி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11, சர்வதேசப் பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், மோஞ்ஜிதாவுக்குக் கிடைத்தது போன்ற வாய்ப்பு இங்கு இருக்கும் அத்தனை பெண் குழந்தைகளுக்கும் கிடைக்கிறதா?

மாநில அரசுகளில் பல்வேறு திட்டங்களால் பெண் குழந்தைகளைக் கருவிலேயே கலைப்பது உள்ளிட்ட வன்கொடுமைகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும் பெண் குழந்தைகள் பிறப்பு என்பது இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொருளாதார சர்வே 2017-2018-ன் படி, `பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது தவிர்க்கப்பட்டிருந்தாலும் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் ஆண் குழந்தைகள் பிறக்கும் வரை இந்தியக் குடும்பங்கள் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்' என்கிறது ஆய்வு.

சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம்
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம்
ஜார்ஜ் அந்தோணி

`ஆண்குழந்தைதான் வேண்டும்' என்கிற மனநிலையிலிருந்து மக்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கான உதாரணம் இந்தச் சர்வே முடிவு. மேகாலயா மாநிலம், ஆண் பெண் குழந்தைகள் விகிதத்தில் ஓரளவுக்குச் சரிவிகிதத்தில் இருந்தாலும், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமான விகிதத்தில் இருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலை கொஞ்சம் முன்னேறியிருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய "பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்” (Beti bachao Beti padhao) உள்ளிட்ட திட்டங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்டாலும் 360 டிகிரியில் இந்தத் திட்டத்தால் செயல்பட முடிகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம்
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம்
ஜார்ஜ் அந்தோணி

15 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்படும் நிலையில், அவர்களின் திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்க அந்தப் பெண் குழந்தைக்கு உரிமை இருக்கிறது. அதே சமயம் திருமணம் செல்லாது என்றாலும், அந்தப் பெண்ணுக்கான இடைக்காலப் பொருளாதாரத்தை அவளது 18 வயது வரை தொடர்புடைய ஆண் வழங்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் நேற்று தெரிவித்திருக்கிறது.

இந்தத் தகவல் நம்மை ஆசுவாசப்படுத்திய அதே வேளையில்தான் தன் திருமண விருப்பத்தை நிராகரித்ததாகச் சொல்லி கொச்சியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை, 26 வயது இளைஞர் தீயிட்டுக் கொளுத்தினார் என்கிற தகவலும் வந்துள்ளது. நாட்டின் அதிமுக்கிய நகரங்களிலேயே பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு இதுதான் நிலை என்றால், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பின் தங்கிய ஊர்களின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சிறுமியின் படுகொலையைக் கண்டித்துப் போராட்டம்
சிறுமியின் படுகொலையைக் கண்டித்துப் போராட்டம்

அதற்கு உதாரணம் சேலம் தளைவாய்ப்பட்டியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியின் படுகொலை. #MeToo போராட்டங்களின் ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஆதிக்கச் சமூகத்தால் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சேலம் மாவட்டம் தளைவாய்ப்பட்டி சிறுமியின் படுகொலை சாதிய ரீதியிலானதா அல்லது பாலியல் வன்கொலையா என்கிற குழப்பம் சமூகத்தில் நிலவுகிறது.

கல்வியில் சாதியப் பாகுபாடுகள் குறித்தான நிகழ்வு ஒன்றில் அண்மையில் பேசிய கல்வியாளர் கஜேந்திர பாபு, "Good touch bad touch பற்றிக் கற்பிக்கும் பாடங்கள் அரசுப் பாடத்திட்டத்தில் உள்ளது. அதை அந்தச் சிறுமி படித்திருக்கிறாள். அதனால் தன்னிடம் அத்துமீறிய ஆதிக்க சாதி நபரை அவள் எச்சரித்திருக்கிறாள். அவன், அந்தச் சிறுமியைச் சாதியின் பெயரால் கொன்றிருக்கிறான். அந்தச் சிறுமி படித்த பள்ளி அவளுக்காக சிறு அஞ்சலிகூட செலுத்தவில்லை” என்று குறிப்பிட்டார்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துக் கற்பிக்கப்பட்டாலும் அது சட்டரீதியாகச் செயலாக்கம் பெறுவதில் முழுமை அடைவதில்லை. பெண்பிள்ளைகள் முன்னேற்றத்துக்கான ஒட்டுமொத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் சாதிய ரீதியாகப் பிளவு பட்டுக் கிடக்கும் சமூகத்தில் அவர்களின் மேம்பாட்டையும் பாதுகாப்பையும் தனித்தனியே அணுகவேண்டியது அவசியமாகிறது. அந்தச் சிறுமிக்குக் கற்பிக்கப்பட்டதைக் கொன்றவனுக்குக் கற்பிக்க இந்தக் கல்வித்துறையும் சமூகமும் சட்டமும் எடுக்கும் முயற்சிகள் மிகச் சொற்பம்.

பெண்களின் திருமண வயது 21 என ஒவ்வொரு ஆட்டோக்களின் பின்புறமும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இளவயது திருமணங்கள் சட்டபூர்வமாகத் தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், இளவயது திருமணங்களுக்கான உளப்பூர்வக் காரணங்கள் அதே சட்ட ரீதியாக அணுகப்படுவதில்லை.

சிறுவயதுத் திருமணங்கள்
சிறுவயதுத் திருமணங்கள்

பொருளாதாரச் சூழலும் வாழ்வியல் நெருக்கடியும்தாம் பெண் பிள்ளைகளின் கல்வி இடைநிற்றலுக்கும், இளவயதுத் திருமணத்திற்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன என்று அண்மையில் இளவயதுத் திருமணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட டெல்லியைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இளவயது சார்ந்த பாலியல் சிக்கல்கள் மற்றும் அது சார்ந்த சமூகக் கட்டுப்பாடுகள் அதற்கான வேறு ஒரு காரணம். இவை அத்தனையும் தனித்தனியே அரசாலும் பெண்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையாலும் அணுகப்படவேண்டும்.

பெண் குழந்தைகள் தினத்துக்கான இந்த வருடக் (2019) கருப்பொருள் ”சிறுமிகள் சக்தி (Girl force: UnScripted and Unstoppable)". பாரதிதாசன் சொன்னதுபோல வன்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism