Published:Updated:

``அழுகிறதை விட்டுட்டு வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டேன்!" - கடந்த காலம் பகிரும் ஜீவஜோதி

தன் கணவரின் கொலைக்காக மிகநீண்ட சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்றவர் ஜீவஜோதி. வாழ்வின் பெரும்பகுதியை வழக்கு, விசாரணையெனக் கழித்த ஜீவஜோதி, தற்போது தஞ்சாவூரில் வசிக்கிறார்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவருக்கு, உடனடியாக மாவட்டத் துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

"திடீரென அரசியல் பிரவேசம்... பி.ஜே.பியை ஏன் தேர்வு செஞ்சீங்க?"

"வழக்கு நடந்துக்கிட்டிருந்த காலத்துல இருந்தே ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேரணுங்கிற எண்ணம் இருந்துச்சு. ஆனாலும், என் கணவர் கொலைக்கு நீதி கிடைச்சபிறகுதான் எல்லாம்னு இருந்தேன். நிறைய காலத்தை இழந்துட்டேன். இதுதான் பொருத்தமான நேரம்னு நினைக்கிறேன். அதுமட்டு மல்லாம, பாதிக்கப் பட்ட நிறைய பெண்கள் என்கிட்ட உதவிகேட்டு வர்றாங்க. தனி மனுஷியா நின்னு அவங்களுக்கு எந்த உதவியும் செய்யமுடியாது. அரசியல்ல இருக்கிறது ஒரு பலம்.

நான் ஜெயலலிதா அம்மாவுக்கு நிறைய நன்றிக்கடன்பட்டிருக்கேன். கடுமையான மன அழுத்தத்துல இருந்த நேரத்துல அவங்கதான் நம்பிக்கையா இருந்தாங்க. வழக்குக்கும் நிறைய உதவிகள் செஞ்சாங்க. இப்போ, நான் உயிரோட இருக்கிறதுக்கே அவங்கதான் காரணம். ஆனா அ.தி.மு.க மேல ஈடுபாடு வரலே. இப்போ இருக்கிற தலைவர்களில் மோடிதான் நம்பிக்கையா இருக்கார். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தயங்காம முடிவெடுக்கிறார். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார். அதனால அந்தக் கட்சியில் சேர்ந்தேன்."

"வழக்கு நடந்த காலங்களை எப்படிக் கடந்து வந்தீங்க?"

ஜீவஜோதி
ஜீவஜோதி

"இப்போ நினைச்சாலும் பதற்றமாத்தான் இருக்கு. ராஜகோபால் மேல வழக்கு பதிவு செஞ்சு விசாரணை ஆரம்பிக்கிறதுக்குள்ள நிறைய பிரச்னைகளைச் சந்திச்சேன். ரெண்டு பெரிய மனிதர்கள் சமாதானம் பேசினாங்க. 'பெரிய தொகை தர்றோம்... சாட்சி சொல்ல வராதே'ன் னாங்க. அதுக்கு நான் சம்மதிக்காததால, மிரட்ட ஆரம்பிச்சாங்க. வெளியில நடமாடவே பயமா இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா தைரியத்தை வளர்த்துக் கிட்டேன். தப்பு பண்ணின மனுஷங்களே தைரியமா நடமாடுறப்போ நமக்கென்ன வந்திடும்.

இன்னொரு பக்கம் தப்பு தப்பா செய்திகளைப் பரப்புனாங்க. உடைஞ்சுபோற சமயத்துல குடும்பத்துல உள்ளவங்கதான் ஆதரவா இருந்தாங்க. ஆரம்பத்துல நிறைய அழுதேன். ஒரு கட்டத்தில அழுது பயனில்லைன்னு தெரிஞ்சுக் கிட்டேன். அழுகிறதை மொத்தமா விட்டுட்டு கோபத்தையும் வைராக்கியத்தையும் வளர்த்துக் கிட்டேன். ஒருவேளை, நான் சாட்சி சொல்லப் போகாம இருந்திருந்தா வாழ்க்கை வளமா இருந்திருக்கும். ஆனா, இப்படி தைரியமா உங்க முன்னாடி நிக்கமுடியாது. மனசாட்சி உறுத்திக்கிட்டே இருக்கும். இப்பவும்கூட என்னைப் பலபேரு மோசமா பேசத்தான் செய்றாங்க. ஆனா, அதையெல்லாம் கடந்துபோகப் பழகிட்டேன்..."

"நீங்கள் எதிர்பார்த்த நீதி கிடைச்சதா நினைக்கிறீங்களா?"

"இப்போ வாழ்க்கை எப்படி இருக்கு?"

"அரசியல்ல இறங்கிட்டீங்க... அடுத்து?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை! https://bit.ly/2QvxIye

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு