Published:Updated:

நீங்கள் கட்டிக்காத்தது `கண்ணியம்' அல்ல; மொத்தமும் வக்கிரம்! #VoiceOfAval

பத்திரிகையாளர் வெங்கடேஷ்
பத்திரிகையாளர் வெங்கடேஷ் ( Screenshot from YouTube Channel - Sun News )

`இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மரபு, கண்ணியம்' என்கிறீர்கள் வெங்கடேஷ். உண்மையில் அது, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வக்கிரம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்.

ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் விவாத நிகழ்ச்சியில், `பெகாசஸ்' உளவு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரோ, பிரதமரோ ஏன் பதிலளிக்கவில்லை என நெறியாளர் கேள்வி கேட்கிறார். அதற்கு, நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ், ``உங்க பொண்டாட்டி தேவடியாளா, உங்க பொண்டாட்டி பத்தினியானு கேட்டா பதில் சொல்வீங்களா..?'' என்கிறார். ``நாகரிகமாகப் பேசுங்கள்'' என்று நெறியாளர் அறிவுறுத்த, ``இல்ல, அந்த மாதிரி பதில் சொல்ல முடியாத கேள்வி இது...'' என்கிறார் வெங்கடேஷ்.

டீக்கடை முதல் அரசியல் மேடை வரை, ஓர் ஆண் தன் எதிராளியிடம் தனது அதிகபட்ச கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தவும், அவனை அவமானப்படுத்தவும் நினைத்துத் தேர்ந்தெடுக்கும் ஆயுதம், அவன் வீட்டுப் பெண்களை கீழ்மைப்படுத்தும் பாலியல் அவதூறு வார்த்தைகள். ஆனால், உண்மையில் அவன் நினைப்பது போல அது ஆயுதமல்ல, அவனது கோபத்தில் பிறக்கும் அனிச்சை கோழைத்தனம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அரசியல் களம் பற்றிப் பேசும் அறிவாளராக அழைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர், தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியையும், அந்தக் கேள்வியைக் கேட்பவர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், கேள்விக்கான பதில் அவரிடம் இல்லை. உடனே, `உங்க மனைவி...' என்று ஆபாச தாக்குதல் செய்கிறார். பிற்போக்கு மற்றும் ஆணாதிக்கத்தில் பிறக்கும் இந்தக் கோழைத்தனத்தை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் கண்டித்தபடி இருக்க வேண்டும்?

உடனே, `வலதுசாரிகள் அப்படித்தான்...' என்று சொல்லி பிறர் இதில் தங்களை நல்லவர்களாக முன்னிறுத்திக்கொள்ள முடியாது. அனைத்துக் கட்சிகள், கொள்கைகள், சித்தாந்தங்களில் இருப்பவர்களுக்கும் பெண் குறித்த வசைமொழி இழிகுணம், பொதுகுணமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, எதிர் வரிசையில் இருக்கும் பெண்களை எப்போதும் தங்கள் கருத்துகள், சித்தாந்தங்கள் அல்லது அந்தப் பெண்களின் செயல்பாடுகளை முன்வைத்து விமர்சிக்க இவர்களுக்குத் திறன் இருப்பதில்லை. மாறாக, பெண்களின் ஒழுக்கம் குறித்த வசை சொற்களையே பற்றிக்கொள்கிறார்கள். `காயத்ரியின் இரவுகள்' என 'முற்போக்காளர்கள்' ட்விட்டர் ஸ்பேஸில் விவாதம்(!) நடத்துகிறார்கள். அவர்களின் அடையாள முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறைக்க முடியாமல் தோற்றுவிடுகிறார்கள். ஆர். வெங்கடேஷ் இப்போது அப்படித்தான் வெளிப்பட்டு நிற்கிறார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

தான் ஒரு துறைசார்ந்த நிபுணராக நம்பி அழைக்கப்பட்ட தொலைக்காட்சி `லைவ்' நிகழ்ச்சியில் `உங்க மனைவி...' என்று பேசி, அது கண்டனத்துக்கு ஆளான பின்னர், அதற்காக மன்னிப்புக் கேட்டு தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகிறார் வெங்கடேஷ். `நேற்றைய தினம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மரியாதைக் குறைவான சொல்லைப் பயன்படுத்திவிட்டேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைப் புரிய வைப்பதற்காகச் சொல்லப்பட்ட சொற்கள் அவை. முன்னர் நான் இதுபோல் பேசியவனும் அல்ல', `இத்தனை ஆண்டுகளாகத் தொலைக்காட்சி விவாதங்களில் நான் கட்டிக் காத்து வந்த மரபையும் கண்ணியத்தையும் இன்று மீறிவிட்டேன். என் நேயர்கள் என்னை மன்னிக்கவும்', `என் வார்த்தையால் யாரேனும் காயப்பட்டிருந்தால், புண்பட்டிருந்தால் அதற்காக வருந்தி, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவெளியில் பெண்களைக் கீழ்மைப்படுத்தும் ஆபாச வார்த்தைகளைப் பேசுகிறவர்களுக்கான கண்டனங்களை, பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறார்கள். அதனால் உருவாக்கப்பட்டிருக்கும் நிர்ப்பந்தம், மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குச் சம்பந்தப்பட்ட ஆணாதிக்கவாதிகளைத் தள்ளுகிறது. அந்த வகையில்தான் வழக்கம் போல இந்த மன்னிப்பும் கேட்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறியாமல் இல்லை. அதிலும்கூட, `மரியாதை குறைவான சொல்லைப் பயன்படுத்திவிட்டேன்' என்கிறார். சக பெண்களை, சக ஆண்களின் வாழ்வில் உள்ள பெண்களை `தேவடியாள்' என்று சொல்வதை ஜஸ்ட் மரியாதைக் குறைவான சொல் என்று குற்ற நீக்கம் செய்கிறீர்களா வெங்கடேஷ்? ஆணாதிக்கச் சீழ்பிடித்தவர்கள் பயன்படுத்தப்படும் பாலியல் வன்சொல் அது. மேலும், நீங்கள் தூக்கிப் பிடிக்கும் `பத்தினி' என்ற சொல், பெண்களைக் குடும்பத்தின் உடைமையாக்கும், குடும்ப மானத்தை அவள் மீது ஏற்றும் அரசியல் உருவாக்கிய சொல்.

`அதில் எந்த உள்நோக்கமும் இல்லை' என்கிறீர்கள். உள்நோக்கம் இருக்கட்டும், கேட்கப்பட்ட `பெகாசஸ்' கேள்விக்கும், `பத்தினி' பதிலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா சொல்லுங்கள்?

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by Engin Akyurt from Pixabay
ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! #VoiceOfAval

`இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மரபு, கண்ணியம்' என்கிறீர்கள் வெங்கடேஷ். உண்மையில் அது, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வக்கிரம். `என் வார்த்தையால் `யாரேனும்' புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன், என் `நேயர்கள்' என்னை மன்னிக்கவும்' என்கிறீர்கள். அப்போதுகூட, பெண்களிடம் மன்னிப்புக் கேட்க நீங்கள் தயாராக இல்லையா? உங்கள் முழு பதிவிலும், `பெண்களைக் கீழ்மைப்படுத்தும்' வார்த்தையை பயன்படுத்தியதற்கான வருத்தம் குறித்த சொற்களே இல்லையே? அதை ஆண்மை இழுக்காக நினைக்கிறீர்கள் அல்லவா?

நீங்கள் கேட்டிருக்கும் மன்னிப்பில், உங்கள் இரண்டாம் அடுக்கு முகமூடியும் கிழிந்துவிட்டது.

- அவள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு