Published:Updated:

சொத்துரிமை முதல் கல்வி வரை, கருணாநிதி செயல்படுத்திய பெண்கள் நலத்திட்டங்கள்: நினைவுதின பகிர்வு!

கலைஞர் கருணாநிதி

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு எனும் உரிமையை மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டு 1989-ம் ஆண்டு தனிச்சட்டமாக இயற்றினார், கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வழங்கப்பட்டது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அரங்கேறியது.

சொத்துரிமை முதல் கல்வி வரை, கருணாநிதி செயல்படுத்திய பெண்கள் நலத்திட்டங்கள்: நினைவுதின பகிர்வு!

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு எனும் உரிமையை மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டு 1989-ம் ஆண்டு தனிச்சட்டமாக இயற்றினார், கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வழங்கப்பட்டது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அரங்கேறியது.

Published:Updated:
கலைஞர் கருணாநிதி

‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்’, ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு’ போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகள் வேறூன்றி இருந்த காலத்தில் பெரியார், பாரதியார் போன்ற பெண் விடுதலைச் சிந்தனையாளர்களின் கலகக் குரல்களுக்கு உயிர்ப்பூட்டும் விதமாக செயல்பட்டவர், திராவிட இயக்கச் செம்மல் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் கருணாநிதி- அண்ணா
கலைஞர் கருணாநிதி- அண்ணா

1929-ம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், பெரியாரின் முழக்கமான பெண்களுக்கு சொத்தில் சம பங்கு எனும் உரிமையை மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டு 1989-ம் ஆண்டு தனிச்சட்டமாக இயற்றினார், கருணாநிதி. பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற சூழல் நிலவி வந்த நிலையில், பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வழங்கப்பட்டது நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அரங்கேறியது.

ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த காவல்துறையில், 1973-ம் ஆண்டு முதன்முறையாக பெண் காவலர்களையும், பெண் எஸ்.ஐ.களையும் பணியமர்த்தி அழகு பார்த்தார் கருணாநிதி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண் கல்வியே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்த கருணாநிதி, பெண் குழந்தைகளின் நலன் காக்க நாகம்மையார் இலவச பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 2007 முதல் 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டது.

பெண் கான்ஸ்டபிள் (சித்திரிப்புப் படம்)
பெண் கான்ஸ்டபிள் (சித்திரிப்புப் படம்)

ஏழைப் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற எண்ணத்திலும், குறைந்தபட்ச கல்வி அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், எட்டாம் வகுப்பு வரை பெண்கள் படித்திருந்தால் அவர்களின் திருமணத்தின் போது நிதியுதவி வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டட்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் மூலம் தற்போது வரை லட்சக் கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

விதவை மறுமண உதவித் திட்டம், விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், மறுமணத்தை ஊக்குவிக்கவும் 1975-ம் ஆண்டு முதல் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், ’விதவை என்ற பெயரில் கூட பொட்டு இல்லை’ என்று கூறி, கைம்பெண் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்திக் கொண்டு வந்தார். மேலும், அவர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

கருணாநிதி
கருணாநிதி

ஆதரவற்ற பெண்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைத்தது போல, மதச் சிறுபான்மையின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களுக்கென தனி விடுதிகளை கருணாநிதி அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம், இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்தினார்.

1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகக் கருணாநிதியின் ஆட்சியில், தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழுத் திட்டம் தொடங்கப்பட்டது. அது பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டது. ஏழை எளிய மகளிரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. பெண்கள் தொழில்முனைவோராக தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், சிறு வணிகக் கடனையும், சேமிப்பையும் மேற்கொள்ளும் பொருட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து அதிகளவில் தொடங்கப்பட்டன.

சாதனையில் பெண்
சாதனையில் பெண்

பெண்களின் வாழ்க்கை தரமும் சமூக அந்தஸ்தும் உயர்ந்தது. தொழில்முனையும் மகளிர்க்கு தனிக் கடன் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பெண் பிள்ளைகளுக்கான அரசுப் பள்ளிகளில், பெண் ஆசிரியர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட வேண்டும் என்ற அரசாணையையும் கொண்டு வந்தார், கருணாநிதி.

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பெண்களின் சுமைகளை குறைக்கவும் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டத்தை 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

மீனவ குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் வாழ்வதாரத்தை உயர்த்தும் வகையில், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு இலவச மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டு மீன் விற்பனை செய்வதற்கு உதவிடும் வகையில் திட்டத்தை செயல்படுத்தினார். மகளிர் நடத்தும் நியாய விலைக் கடைகளை 1998-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

கருணாநிதி சமாதி
கருணாநிதி சமாதி

பெண்களைப் போல மூன்றாம் பாலினத்தவரையும் சமுதாயம் மதிக்கும் வகையில், கண்ணியத்துடன் அவர்களை அழைக்கும் வகையில் திருநங்கைகள் என்ற சொல் பயன்பாட்டை உறுதிப்படுத்தினார். திருநங்கைகளுக்கு எனத் தனியாக நல வாரியம் அமைத்து அவர்களுக்கான சமுதாய முன்னேற்றங்களுக்காகவும் செயல்பட்டார் கருணாநிதி.

பெண் கல்வி முதற்கொண்டு அவர்களுக்கான திருமணம், மறுமணம், குழந்தைப் பேறு, கைம்பெண்களின் வாழ்வாதாரம், சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரப் பகிர்வு என தனது ஆட்சிக் காலத்தில், பெண்கள் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்திய முன்னோடி... கருணாநிதி.

சொத்துரிமை முதல் கல்வி வரை, பெண்கள் நலனுக்காக கருணாநிதி முன்னெடுத்த, செயல்படுத்திய நலத்திட்டங்களுக்கு... நினைவு தினத்தில் சொல்வோம் நன்றி!