Published:Updated:

`மற்றவர்களுக்காக என் தனித்துவத்தை ஏன் கைவிட வேண்டும்?' - கவிதா ராமு ஐ.ஏ.எஸ் #StopJudgingWomen

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்தாலும் பரதம், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் எனத் தனக்கான வேலைகளைச் செய்வதில் எப்போதும ஆக்டிவ்வாக இருப்பவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகளிர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமாக இல்லாமல், தினமும் தங்களுக்கான அங்கீகாரமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் கருத்து. மேலும், தங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளிலிருந்தும், விமர்சனங்களிலிருந்தும், ஜட்ஜ்மென்ட்களிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை.

ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்தாலும் பரதம், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் எனத் தனக்கான வேலைகளைச் செய்வதில் எப்போதும ஆக்டிவ்வாக இருப்பவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். இதற்காகப் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். இந்த விமர்சனங்கள் குறித்தும், அதைக் கையாள்வது குறித்தும் அவரிடம் பேசினோம்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
``நான் எங்கேயும் சீன் போடலை!” - பாடகி ராஜலட்சுமி செந்தில் #StopJudgingWomen #DontJudgeMe

``பெண்களுக்கு அவர்களின் இலக்கைத் தீர்மானிக்கவும், கனவுகளை நோக்கிப் பயணிக்கவும் மிகப்பெரிய தடையாக இருப்பவை ஜட்ஜ்மென்ட்கள். ஆடை, மேக்கப், வேலை பார்க்கும் துறை, திருமண வயது இப்படி ஒவ்வொன்றுமே மற்றவர்களின் கருத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் ஒரு பெண் அவளுக்கான வாழ்க்கையை எப்போதுதான் வாழ முடியும்?

மற்றவர்களின் கருத்துகளுக்காக நம்மை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால், நமக்கென்று தனித்துவமும் அடையாளமும் இல்லாமல் போய்விடும். மற்றவர்களின் கருத்துகளுக்கும் ஜட்ஜ்மென்ட்களுக்கும், விமர்சனங்களுக்கும் பயந்து முடிவு எடுக்கும்போது சில நேரத்தில் நம் எதிர்காலத்தையே தொலைக்க நேரிடலாம். அவ்வாறு எடுக்கும் முடிவால் வரும் இழப்பு நம்மை விமர்சித்தவர்களுக்கு அல்ல. நமக்குத்தான். நம்மை மதிப்பீடு செய்பவர்கள் யாரும் நம்முடன் வாழ்க்கை முழுவதும் பயணிக்கப் போவதில்லை.

உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் உங்கள் தகுதிக்கு கிடைப்பது. விமர்சனம் செய்பவர்கள், ஒரு நாள் வியந்து பார்க்கும் இடத்தில் இருப்பேன் என்பதை தினமும் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். யதார்த்தத்தை யோசிக்கும் போது, உங்களின் பலம் இன்னும் அதிகமாகும். என் மீதும் கூட நிறைய ஜட்ஜ்மென்ட்கள் வைக்கப்பட்டன. ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதற்காக நான் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், நான் விரும்பிக் கற்ற பரதத்தை ஆடக் கூடாது, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து அதில் நான் நினைக்கும் கருத்துகளைப் பதிவிடக்கூடாது இப்படியெல்லாம் செய்தால் நான் சிறந்த ஆட்சிப்பணி அலுவலர் இல்லை என விமரசனம் செய்தார்கள்.

அனுக்ரீத்தி வாஸ் முதல் ஐரின் வரை... ஜட்ஜ்மென்ட்களை உடைத்து சாதித்தது எப்படி? #StopJudgingWomen

நான் அரசின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. ஆனால், எனக்கென தனிப்பட்ட கருத்துகள் இருக்கக் கூடாது என்று நினைப்பது எப்படி நியாயம் ஆகும்? பரதம், டிக்டாக் வீடியோஸ் எல்லாம் எனக்காக நான் செய்பவை. மற்றவர்கள் ஜட்ஜ் செய்கிறார்கள் என அவற்றை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால், கவிதா ராமுவின் தனித்துவம் யாருக்குமே தெரியாமல் போய்விடும். என் அடையாளமும், திறமையும் என்ன என எனக்குத் தெரியும், அதனால் மற்றவர்களின் நெகட்டிவ் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஜட்ஜ்மென்ட்களை ஓரங்கட்டிவிட்டு இருக்கும் ஒரு வாழ்வை நமக்காக வாழ ஆரம்பிப்போம், வெற்றிகள் கைகூடும்" என்று விடைபெறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு