Published:Updated:

`நகைகளை உன் பெற்றோரிடமே கொடுத்துவிடு!' - கேரள மணமக்களின் வரதட்சணை மறுப்பு திருமணம்

Marriage (Representational Image)
Marriage (Representational Image) ( Photo by Jayesh Jalodara on Unsplash )

பல திடுகிடும் வரதட்சணைக் கொலைகளும், தற்கொலைகளும் கேரளாவில் நடந்து வரும் நிலையில், சதீஷ் சத்யன் மற்றும் ஸ்ருதி ராஜ் இருவரும் வரதட்சணைக்கு எதிரான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக கேரளா கூறப்பட்டாலும், தற்போது அங்கிருந்து வரும் வரதட்சணைக் கொடுமை செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில், மணமகன், மணமகள் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்த நிகழ்வு பலராலும் பாராட்டப்படுகிறது.

கடந்த மாதம் 21-ம் தேதி, 24 வயதான மருத்துவ மாணவி விஸ்மயா, 100 சவரன் நகை, புதிய கார் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டும், அது போதவில்லை என, மாநில மோட்டார் வெஹிக்கல் துறையில் வேலைபார்க்கும் அவரின் கணவரால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். மேலும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான அர்ச்சனா, அவரின் கணவர் சுரேஷால் 3 லட்சம் வரதட்சணை பணத்திற்காகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Marriage
Marriage
Ashish Kumar
கேரளா: வரதட்சணையாகக் கொடுத்த காரின் மதிப்பு குறைவு; இறந்துகிடந்த மனைவி; 
நடந்தது என்ன?

இது மட்டுமன்றி, ஆலப்புழாவில் ராணுவ வீரரான விஷ்ணுவின் மனைவி, 19 வயதான சுசித்ராவின் தற்கொலை பற்றி, வரதட்சணைக் கொடுமை காரணமா என்ற கோணத்தில் விசாரணை தற்போது நடந்து வருகின்றது.

இது போன்ற பல திடுகிடும் வரதட்சணைக் கொலைகளும், தற்கொலைகளும் கேரளாவில் நடந்து வரும் நிலையில், சதீஷ் சத்யன் மற்றும் ஸ்ருதி ராஜ் இருவரும் வரதட்சணைக்கு எதிரான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். சதீஷ், தங்கள் திருமணத்தன்று ஸ்ருதிக்கு வரதட்சணையாகக் கொடுத்த அனைத்து நகைகளையும் பெண் வீட்டாரிடமே கொடுத்துவிட்டார். இந்தச் செயல், பல இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக அமைந்துள்ளது.

ஆலப்புழாவைச் சேர்ந்த சதீஷூக்கும், நூரனாட் பனாயிலைச் சேர்ந்த ஸ்ருதி ராஜ்ஜுக்கும் கடந்த வியாழக்கிழமை அன்று கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன், சதீஷ் மற்றும் அவரின் தந்தை, ஸ்ருதி அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் சில பிரதிநிதிகளின் முன்பாக மணப்பெண்ணின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

Marriage
Marriage
Pixabay
வரதட்சணைக் கொடுமை: 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை; மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமித்த கேரளா!

வரதட்சணைக் கொடுமை பற்றிய செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் கொடுத்துவந்த நிலையில், மணமகன் சதீஷ் மற்றும் அவர் குடும்பத்தின் இந்த முன்னோடிச் செயல், அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

- ஹரிணி ஆனந்தராஜன்

அடுத்த கட்டுரைக்கு