Published:Updated:

பசியால் துடித்த பச்சிளம் குழந்தை... தாய்ப்பாலூட்டிய கேரள பெண் போலீஸ்! இரக்க செயலுக்காக கௌரவிப்பு!

police Ramya ( Kerala police fb post )

ரம்யா, தான் ஒரு பாலூட்டும் தாய் எனக்கூறி, குழந்தைக்கு தான் பாலூட்டலாமா எனக் கேட்டுள்ளார். மருத்துவரின் அனுமதி பெற்ற பின் குழந்தைக்குப் பாலூட்டி உள்ளார். அன்று மாலை அக்குழந்தை தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டது.

பட்டினி கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த, கேரள பெண் காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கோழிக்கோடு மாவட்டம், சிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. நான்கு வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய். தன்னுடைய மகப்பேறு விடுப்புக்குப் பின், சேவாயூர் காவல் நிலையத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். 

பசியால் துடித்த பச்சிளம் குழந்தை... தாய்ப்பாலூட்டிய கேரள பெண் போலீஸ்! இரக்க செயலுக்காக கௌரவிப்பு!
Kerala police fb post

இந்நிலையில், அக்டோபர் 29-ம் தேதி சனிக்கிழமையன்று, தன்னுடைய குழந்தையைக் காணவில்லை என 22 வயதான பெண் ஒருவர், சேவாயூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாகத் தன்னிடமிருந்து, பிறந்த 12 நாள்களே ஆன குழந்தையை பெண்ணின் கணவர் பிரித்துக் கொண்டு சென்றுள்ளார். 

பெங்களூருவில் வேலைக்கு செல்கையில், குழந்தையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடைப்படையில், வயநாடு எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் சுல்தான் பத்தேரி போலீஸார், எல்லையில் வாகனங்களைப் பரிசோதனை செய்தபோது, கைக்குழந்தையுடன் தந்தை பயணித்ததைக் கண்டுபிடித்தனர். 

பசியால் துடித்த பச்சிளம் குழந்தை... தாய்ப்பாலூட்டிய கேரள பெண் போலீஸ்! இரக்க செயலுக்காக கௌரவிப்பு!
Kerala police fb post

அதன்பின், பட்டினியால் களைத்துப்போயிருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையின் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையைச் சேர்ந்த ரம்யா, தான் ஒரு பாலூட்டும் தாய் எனக்கூறி, குழந்தைக்கு தான் பாலூட்டலாமா எனக் கேட்டுள்ளார். மருத்துவரின் அனுமதி பெற்ற பின், குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார். அன்று மாலையே தாயுடன் அக்குழந்தை சேர்த்து வைக்கப்பட்டது.

பசியில் இருந்த குழந்தைக்கு பாலுட்டிய இந்தச் செயலுக்காக, ரம்யா மற்றும் அவரின் குடும்பத்தினரை காவல்துறை தலைமையகத்துக்கு அழைத்து, கேரள காவல்துறை தலைவர் அனில் காந்த், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதோடு பட்டினியில் இருந்த குழந்தைக்கு உதவ பாலூட்டிய இரக்க செயல், காவல் துறையின் நற்பெயரை உயர்த்தியுள்ளது என்றும் கூறினார்.

இவரது சேவையால் ஈர்க்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமசந்திரன், அவரைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி, சான்றிதழையும் அனுப்பியுள்ளார். அந்தச் சான்றிதழில் `காவல் துறையின் சிறந்த முகத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.