Published:Updated:

``பெண்களுக்கான தனி வணிக வளாகம்"- கேரள அரசின் புதிய முயற்சி!

சு.சூர்யா கோமதி

பெண்களுக்கான தனிவணிக மையம், கேரள அரசின் புது முயற்சி

women
women ( pixabay )

மெட்ரோ ரயில் நிலையத்தில் பாலுட்டும் அறையும், பள்ளிகளில் நாப்கின் இயந்திரமும் அவசியம் எனக் கேரள அரசு பெண்களின் நலனுக்காக அடுத்தடுத்த திட்டங்களைத் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் பெண்களுக்கு என்று தனியே ஒரு வணிகவளாக மையத்தை கோழிக்கோட்டில் தொடங்கும் திட்டத்தை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

women
women
pixabay

ஐ.நாவின் 'Sustainable Development' என்ற சர்வதேச வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட 17 இலக்குகளை அடைய அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில், ஐந்தாவது இலக்கான பெண்களின் நலன் சார்ந்த செயல்பாடுகளை கேரள அரசு தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கேரள அரசின் சமூகநலத்துறைக்குக் கீழ் செயல்பட்டுவரும் ஜென்டர் பார்க் என்ற அமைப்பு, கேரளாவில் பெண் தொழில் முனைவோர்களை அதிகரிக்கும் நோக்கத்துடனும், ஏற்கெனவே தொழில் முனைவோராக இருப்பவர்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தையும் தனது இலக்காகக்கொண்டு, பெண்களுக்கான வணிக வளாகத்தைத் தொடங்க உள்ளது.

women
women
pixabay

இது குறித்து கேரளாவின் மக்கள் நலவாழ்வு மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் "பெண்களுக்காகத் தொடங்கப்படும் வணிக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறை, முதியவர்கள் நலன்காக்கும் அறை, பாலூட்டும் அறை என முழுக்க முழுக்க பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விடுதலை அளித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வெற்றியை நிலைநாட்டும் இடமாக இருக்கும்.

பொதுவாக பெரிய வணிக மையங்கள் என்றால் கண்காட்சி நடைபெறும் இடமாக மட்டுமே இருந்து வருகின்றன. ஆனால், பெண்களுக்கான இந்த வணிக மையத்தில், பெண்கள் மேற்கொள்ளும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. 2020-ல் முதல்கட்டமாக வணிக வளாகத்தின் ஒரு பகுதி தொடங்கப்பட்டு முன்னோட்டம் நடைபெற உள்ளது.

`எங்களால நிச்சயம் செய்ய முடியும்னு தோணுச்சு'- மயானத்தில் வேலை பார்க்கும் பெண்கள்!

சிறு, குறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்!

பெண்கள் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் சிறு குறு தொழில் செய்யும் பெண்கள் அரசின் இந்தத் திட்டத்தை வரவேற்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு என்று தனியே வணிக வளாகம் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.