Published:Updated:

`இப்படிப்பட்ட பாடல் வாய்ப்புகள் வராததும் ஒரு வகை சுரண்டல்தான்!' - பாடலாசிரியர் உமா தேவி

கவிஞர் உமா தேவி ( Photo: K.Rajasekaran / Vikatan )

உழைப்பு, அறிவு, பொருளாதாரம் என எந்தெந்த விதங்களிலெல்லாம் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று கல்லூரிப் பேராசிரியரும் பாடலாசிரியருமான உமாதேவியிடம் கேட்டோம்.

`இப்படிப்பட்ட பாடல் வாய்ப்புகள் வராததும் ஒரு வகை சுரண்டல்தான்!' - பாடலாசிரியர் உமா தேவி

உழைப்பு, அறிவு, பொருளாதாரம் என எந்தெந்த விதங்களிலெல்லாம் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று கல்லூரிப் பேராசிரியரும் பாடலாசிரியருமான உமாதேவியிடம் கேட்டோம்.

Published:Updated:
கவிஞர் உமா தேவி ( Photo: K.Rajasekaran / Vikatan )
போராட்டக்களத்தில் இருந்து தோன்றிய மார்ச் 8, இன்று பூக்களுடன் கொண்டாடப்படும் போக்கை சுட்டிக்காட்டித் திசைதிருப்ப வேண்டியது அவசியமாகிறது. களையப்பட வேண்டிய பெண்கள் பிரச்னைகளை கவனப்படுத்தும் வகையில், இந்த மார்ச் 8-ல் #StopExploitingWomen என்ற பிரசாரத்தை முன்னெடுக்கிறது அவள் விகடன். தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் பெண்களுக்கு, பணியிடங்களில் உரிய அங்கீகாரம், உரிமை, பாதுகாப்பை உறுதி செய்வது அரசின், நிறுவனங்களின் கடமை. இவை கிடைக்காத சூழலையும், அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதையும் பேசுவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம்.

உழைப்பு, அறிவு, பொருளாதாரம் என எந்தெந்த விதங்களிலெல்லாம் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று கல்லூரிப் பேராசிரியரும் பாடலாசிரியருமான உமாதேவியிடம் கேட்டோம்.

``இச்சமூகத்தில் பல தளங்களில் பெண்கள் மீதான சுரண்டல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மளிகைக்கடை, துணிக்கடை, ஃபேன்சி ஸ்டோர் என எல்லாவற்றிலும் `பெண்கள் வேலைக்குத் தேவை' என்று பலகை வைத்திருப்பதைப் பார்க்க முடியும். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் அப்படிப்பட்ட பலகைகள் வைப்பதில்லை. பெண்கள் என்றால் எல்லா விதமான சூழலுக்கும் தங்களைப் பொருத்திக் கொள்வார்கள், அவர்களைக் கையாள்வது, அவர்கள் மீதான அதிகாரத்தைச் செலுத்துவது மிகவும் சுலபமானது என்கிற காரணத்தால்தான் பெண்களை வேலைக்குத் தேடுகிறார்கள்.

உமாதேவி
உமாதேவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்கள் மட்டுமே பணிபுரியக்கூடிய இடங்கள் உண்டு. அங்கே நெகிழ்வுத்தன்மை ஏதுமில்லாமல் பெண்களின் உழைப்பு அதிக அளவில் சுரண்டப்படுகிறது. தன் மீது ஏற்றி வைக்கப்படுகிற பணிச்சுமைக்கு எதிராகக் கேள்வி எழுப்ப முடியாத சூழலில் பெண் இருக்கிறாள். எதிர்க்கேள்வி கேட்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. சமூகத்தின் பொது மனநிலையில் பெண் என்றாலே விட்டுக்கொடுத்து விடுவாள் என்கிற எண்ணம் இருப்பதாலேயே அவள் மீது சுமைகள் ஏற்றி வைக்கப்படுகின்றன. மிக எளிதாகத் தங்களது அதிகாரத்தை பெண்கள் மீது செலுத்துகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆணுக்கு நிகரானவள் பெண் என்று பாலின சமத்துவத்தைத் தாண்டி ஆணுக்கும் மேலானவள் பெண் என்றுதான் சொல்ல வேன்டும். ஏனென்றால் பெண்தான் கருவைச் சுமக்கிறாள், உயிரின் வளமையைப் பெருக்குகிறாள். தாய்மைதான் இவ்வுலகின் இயக்குவிசையாக இருக்கிறது. நாம் இன்றைக்கும் தாய்நாடு, தாய்மொழி, தாய் தெய்வம் என்று சொல்கிறோம். அதன் பொருள் பெண்ணே முதன்மையானவள் என்பதுதான்.

ஆனால், அது இன்றைக்கு வெறும் பேச்சளவில் மட்டும்தான் இருக்கிறது. யதார்த்தத்தில் ஆண்களே முதன்மையானவர்களாக முன்வைக்கப்படுகிறார்கள்" என்றவரிடம், திரைத்துறையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல் குறித்துக் கேட்டோம்.

``திரைத்துறையில் பெண்களை நடிகைகளாக மட்டுமேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அறிவு சார்ந்து பெண்களைப் பயன்படுத்திக்கொள்வது குறைவான அளவில்தான் இருக்கிறது. பெண் பாடலாசிரியர்கள் என்றால் மென்மையான காதல் பாடல்களை மட்டும்தான் எழுதுவார்கள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. பெண் பாடலாசிரியர்களாலும் வணிக ரீதியாக வெற்றியைக் கொடுக்கும் பாடல்களை எழுத முடியும். அதை நிரூபிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. உதாரணத்துக்கு `ஊ சொல்றியா மாமா' பாடலை பாடலாசிரியர் தாமரையை எழுதச் சொல்லியிருக்கலாமே?

ஊ சொல்றியா பாடல்
ஊ சொல்றியா பாடல்

நான் எனது முந்தைய பேட்டியிலேயே குறிப்பிட்டிருந்தேன் குத்துப் பாடல்களை எழுதத் தயாராக இருக்கிறேன் என்று. ஆனால், அப்பாடல் பெண்கள் மீதான வன்மத்தோடோ, சமத்துவத்துக்கு எதிரானதாகவோ இருக்கக் கூடாது. ஆனால், எனக்கு இது வரையிலும் வணிக ரீதியில் ஹிட்டடிக்கும் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு வந்ததே இல்லை. பெண்களால் இந்த எல்லை வரை மட்டும்தான் இயங்க முடியும் என்று வகுப்பதுகூட ஒரு வகையில் சுரண்டல்தான்" என்கிறார் உமாதேவி.