Published:Updated:

`மகப்பேறு எல்லா பெண்களுக்கும் ஒன்றுதான்; விடுமுறையில் பாகுபாடு கூடாது!'- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2016-ம் ஆண்டு, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக அதிகரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த மகப்பேறு விடுமுறை ஓர் ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுமுறை என்பது அனைத்து அரசுப் பெண் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாகச் செயல்படுத்தப்படவேண்டிய ஒன்று. அதனால் வரன்முறைப்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுமுறையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2016-ம் ஆண்டு, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக அதிகரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த மகப்பேறு விடுமுறை ஓர் ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணி
கர்ப்பிணி
`அரசு மருத்துவமனையில்தான் பிரசவம்னு உறுதியா இருந்தாங்க மனைவி!' - தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ்-ன் கணவர்

குறிப்பாக, இந்த விடுமுறை வரன்முறைப்படுத்தப்படாத அரசு பெண் ஊழியர்கள் மற்றும் தற்காலிகப் பெண் ஊழியர்கள் ஆகியோருக்கும் பொருந்தும். அதாவது மேற்சொன்ன வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் தொடர்ந்து ஓர் ஆண்டு பணியில் இருந்தாலே போதும். அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு சென்ற ஆண்டு ஆணை வெளியிட்டிருந்தது. ஆனால் அரசின் இந்த உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என ராஜகுரு என்கிற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

`குழந்தைப் பேற்றுக்குப் பிறகான உடல் சோர்வு, மன உளைச்சல், குழந்தை வளர்ப்பு சார்ந்த பொருளாதாரச் சிரமங்கள் ஆகியவை பணி நிரந்தரம் செய்யப்பட்ட அரசுப் பெண் ஊழியர்களைப் போலவே வரன்முறைப்படுத்தப்படாத அரசு பெண் ஊழியர்கள், மற்றும் தற்காலிகப் பெண் ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இருக்கும் தானே? அப்படி இருக்கும்போது மகப்பேறு விடுமுறையில் வரன்முறைப்படுத்தப்படாத அரசு பெண் ஊழியர்கள் மீது மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்?' என்று மனுதாரர் ராஜகுரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
முதல் பிரசவம் சிசேரியன்; அடுத்தது சுகப்பிரசவம் ஆகுமா? - விளக்கும் மருத்துவர்!

2020-ம் ஆண்டில் அரசு வெளியிட்ட மகப்பேறு விடுமுறை குறித்த ஆணையின்படி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த அரசுத் துறைகளில் அவசரத் சேவைகளுக்காகப் பணியமர்த்தப்பட்ட அரசு பெண் ஊழியர்கள், தற்காலிக மற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மகப்பேறு விடுமுறை வழங்கப்படவேண்டும் என்றும் மனுதாரர் மேலும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தப் பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் பி.டி. ஆதிகேசவுலு ஆகியோர், வரன்முறைப்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்கள் என்கிற பாகுபாடு முற்றிலும் களையப்படவேண்டும் என்கிற மிக முக்கிய அறிவுறுத்தலை தமிழக அரசுக்குத் தற்போது வழங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு