Published:Updated:

``பத்துப் பெண்களுடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறேன்!'' - நடிகர் விநாயகனின் `மீ டூ' சர்ச்சை பேச்சு

விநாயகன் ( Facebook Photo )

``திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லையா? இங்குள்ள யாராவது திருமணத்துக்கு முன் செக்ஸில் ஈடுபட்டிருக்கிறீர்களா? எனக்கு அந்தப் பெண்ணிடம் பாலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நான் அவரிடம் கேட்பேன்.'' - நடிகர் விநாயகன்

``பத்துப் பெண்களுடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறேன்!'' - நடிகர் விநாயகனின் `மீ டூ' சர்ச்சை பேச்சு

``திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லையா? இங்குள்ள யாராவது திருமணத்துக்கு முன் செக்ஸில் ஈடுபட்டிருக்கிறீர்களா? எனக்கு அந்தப் பெண்ணிடம் பாலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நான் அவரிடம் கேட்பேன்.'' - நடிகர் விநாயகன்

Published:Updated:
விநாயகன் ( Facebook Photo )

மலையாள நடிகை நவ்யா நாயர் நடித்துள்ள `ஒருத்தி' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் விநாயகனிடம், பெண்கள் வைக்கும் `மீ டூ' குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் விநாயகன், ``மீ டூ என்றால் என்ன? திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லையா? இங்குள்ள யாராவது திருமணத்துக்கு முன் செக்ஸில் ஈடுபட்டிருக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

நடிகர் விநாயகன்
நடிகர் விநாயகன்

அப்போது ஒரு செய்தியாளர், ``நான் அவ்வாறு ஈடுபடவில்லை" எனக் கூறினார். அதற்கு அவரை `பொட்டன்' (ஒன்றுக்கும் ஆகாதவன்) எனக் கிண்டலடித்த விநாயகன், ``நான் என் வாழ்க்கையில் 10 பெண்களுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அந்தப் பத்துப் பெண்களிடமும், பாலியல் உறவுக்கு அவர்களின் அனுமதி கேட்டேன்.

இதுதான் `மீ டூ', என்றால், நான் இன்னும் இதுபோன்று பெண்களிடம் கேட்பேன். (ஒரு பெண் பத்திரிகையாளரை நோக்கி கைகாட்டி) எனக்கு அந்தப் பெண்ணிடம் பாலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நான் அவரிடம் கேட்பேன். அந்தப் பெண் மானத்துடன் `நோ' எனக் கூறுவார். என்னிடம் எந்தப் பெண்ணும் இதுவரை வந்து கேட்டதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனவே நான் மீண்டும் கேட்கிறேன், `மீ டூ' என்றால் என்ன? பெண்கள் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது `மீ டூ' குற்றமாகாது" எனப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடிகர் விநாயகனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு விருப்பமான எந்தப் பெண்ணையும் பாலியல் உறவுக்கு அழைக்கலாம் என்ற ரீதியிலும், பெண்கள் என்றாலே போகப்பொருள் என்ற எண்ணத்துடனும் விநாயகன் பேசியிருப்பது பெண்கள் நல ஆர்வலர்களிடையை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள எழுத்தாளர் டாக்டர் சாரதாகுட்டி, ``பிரபல நடிகர், பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சினிமாவின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அகங்காரத்துடனும், அற்பத்தனத்துடனும் தன் மனதில் உள்ள அழுக்குகளை வெளியே கொட்டியிருக்கிறார். இது மிகவும் அவமானகரமாது" எனக் கூறியுள்ளார்.

விநாயகன்
விநாயகன்

நடிகர் விநாயகனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்ட `ஒருத்தி' திரைப்படத்தில் பெண்களையும், `மீ டூ' குற்றச்சாட்டுகளையும் அவமானப்படுத்தும் விதமாக நடிகர் விநாயகன் பேசியதாகவும், அவர் மீது மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism